Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
தபாலில் அனுப்பப்பட்ட குழந்தைகள்... சரியாக ஊரு விட்டு ஊரு டெலிவரி செய்யப்பட்ட வினோத வரலாறு...!
ஜனவரி 1, 1913 அன்று முதல் யு.எஸ் தபால் நிலையங்கள் பார்சல் டெலிவரி சேவையை தொடங்கியது. முதல் பார்சல் மூலம் நியூ ஜெர்சி கவர்னர் வுட்ரோ வில்சனுக்கு 4.9 கிலோ ஆப்பிள் அனுப்பப்பட்டது. அதன் ஆரம்ப காலத்தில் 1.8 கிலோவிற்கு அதிகமான எடையுள்ள பொருட்கள் ஏற்று கொள்ளப்பட்டு அனுப்பப்பட்டன.
ஆனால் அஞ்சல் மூலம் என்னென்ன பொருட்களை அனுப்பலாம், எவற்றை எல்லாம் அனுப்ப கூடாது என்பது பற்றி எந்த விதிமுறைகள் தெளிவாக இல்லாத காலகட்டம் அது. அதனால் மக்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் முட்டைகள், பழங்கள், மற்றும் காய்கறிகள் போன்றவற்றை அனுப்ப தொடங்கினர். சிலர் இதை சோதித்து பார்ப்பதற்காக செங்கல்கள், பாம்புகள் மற்றும் பிற அசாதாரண "பேக்கேஜ்களை" அஞ்சல் மூலம் அனுப்ப தொடங்கினார்கள்.

தேசிய அஞ்சல் அருங்காட்சியகத்தில் வரலாற்றுப் பொறுப்பாளர் நான்சி போப், பார்சல் போஸ்ட் சர்வீஸின் முதல் சில வருடங்கள் கொஞ்சம் குழப்பமாக இருந்ததாகவும், சில பொருட்கள் சில இடங்களில் வெகு தொலைவில் கிடைத்ததால், ஒவ்வொரு நகரங்களும் போஸ்ட் மாஸ்டர் விதிமுறைகளை பொறுத்ததே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஜனவரி 1913, ஓஹியோவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் அமெரிக்க தபால் சேவையின் புதிய பார்சல் சேவையைப் பயன்படுத்தி விலைமதிப்பற்ற அவர்களின் செல்ல மகனை பார்சலில் அனுப்பினார்கள். பீக்ஸ் அவர் மகனின் ஸ்டாம்ப் செலவிற்கு 0.13 காசுகள் செலுத்தியதுடன், 4241 ரூபாய்க்கு (50$) இன்சூரன்ஸ் தொகையையும் செலுத்தினர். பின்னர் குழந்தையை தபால்காரரிடம் ஒப்படைத்தனர். அவர் குழந்தையை ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அவரது பாட்டி வீட்டில் இறக்கிவிட்டார்.
1913 மற்றும் 1915 க்கு இடையில், ஓஹியோவில் உள்ள குழந்தையிலிருந்து தொடங்கி, சுமார் ஏழு குழந்தைகள் தபாலில் அனுப்பப்பட்டார்கள். இது நீண்ட தூரத்திற்கு செல்லும் பயணிகள் ரயிலில் குழந்தைக்கு டிக்கெட் வாங்குவதை விட ரயில்வே மெயில் மூலம் அனுப்ப ஸ்டாம்ப் வாங்குவது மிகவும் மலிவானதாக இருந்ததே காரணம்.
தெரியாத அந்நியர்களுடன் எப்படி குழந்தைகளை அனுப்பி இருப்பார்கள் என நீங்கள் யோசிக்கலாம். ஆனால், தங்கள் குழந்தைகளை தபால் மூலம் அனுப்பியவர்கள் அவர்களை அந்நியரிடம் ஒப்படைக்கவில்லை. கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தங்கள் தபால்காரரை நன்கு தெரிந்திருக்கும். அவர் உறவினராக இருந்திருக்கவும் கூட வாய்ப்புகள் இருந்திருக்கிறது. உதாரணமாக, 1914 ஆம் ஆண்டு மே பியர்ஸ்டோர்ஃப்பின் பெற்றோர் அவளை 117 கிமீ தொலைவில் உள்ள தாத்தா பாட்டியின் வீட்டிற்கு அனுப்பினர். அவளை அழைத்து சென்றவர் தபால் ஊழியர் அவளின் உறவினர் என்பது குறிப்பிட தக்கது.
மேலும் அவர்கள் மே-வின் உடையில் ஸ்டாம்ப் செய்து அனுப்பி இருந்தார்கள்.
இந்தச் சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்ட போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் ஆல்பர்ட் எஸ். பர்ல்சன் மனிதர்களை தபாலில் அனுப்புவதை 1914-ல் தடை செய்தார்.
ஆனால், 1914-ல் தடை முயற்சி பலனளிக்கவில்லை.
ஒரு வருடம் கழித்து, புளோரிடாவில் ஒரு பெண் தனது ஆறு வயது மகளை 1158 கிமீ தொலைவில் இருக்கும் வர்ஜீனியாவிற்கு குழந்தையின் தந்தை வீட்டிற்கு அனுப்பினார். இந்த பயணத்திற்கான ஸ்டாம்ப் செலவு 0.13 காசுகள். மேலும் இது ஒரு உயிருள்ள நபர் மேற்கொண்ட மிக நீண்ட அஞ்சல் பயணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1915 இல், மூன்று வயதான மவுட் ஸ்மித், அமெரிக்க தபால் மூலம் பயணம் செய்த கடைசி குழந்தையாக தோன்றினார். அவளுடைய தாத்தா பாட்டி, 40 மைல் தொலைவில் உள்ள கென்டக்கி அவளது நோய்வாய்ப்பட்ட தாயைப் பார்க்க அனுப்பினார். இதற்கு அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு பின் "மனிதர்களை பாதிப்பில்லாத உயிருள்ள விலங்குகள்" என வகைப்படுத்த முடியாது என இரு முறை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.



Click it and Unblock the Notifications
