Latest Updates
-
உங்களுக்கு மாரடைப்பு வருமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த 5 இரத்த பரிசோதனைகளை செய்யுங்க.. -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் மாதத்தில் அற்புத பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தட்டைப்பயறு தேங்காய்ப்பால் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
முட்டையை வைச்சு இந்த மாதிரி மசாலா கீமா பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத உலகின் அதிசய நாடு எது தெரியுமா? நம்ம பக்கத்து நாடுதானாம் -
காரசாரமான ஆந்திரா பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும்
மது அருந்துவதற்கு முன் அனைவரும் சியர்ஸ் என்று சொல்ல காரணம் என்ன? அந்த வார்த்தையின் உண்மையான என்ன தெரியுமா?
மது அருந்தும் அனைவருமே ஒவ்வொரு முறை குடிக்கத் தொடங்குவதற்கு முன்னரும் தங்கள் அருகில் உள்ளவர்களுடன் 'சியர்ஸ்' என்ற வார்த்தை சொல்லி அவர்களின் டம்ளருடன் இடித்துக் கொள்வார்கள். இது மதுவிற்கு மட்டுமல்ல காபி, டீ மட்டுமின்றி தண்ணீர் குடிப்பவர்கள் கூட தற்செயலாகவோ அல்லது தெரிந்தோ சியர்ஸ் என்று கூறுவார்கள்.
இது திடீரென்று தொடங்கிய பழக்கமல்ல, பல நூற்றாண்டுகளாக இந்த பழக்கம் நிலவி வருகிறது. இது தற்போது வாழ்க்கைமுறையில் தவிர்க்க முடியாத ஒரு பழக்கமாக மாறிவிட்டது. ஆனால் மக்கள் ஏன் சியர்ஸ் என்று சொல்கிறார்கள், அது வெறும் பழக்கமா அல்லது அந்த வார்த்தைக்கு ஏதேனும் அர்த்தம் உள்ளதா? இந்த பதிவில் இந்த வார்த்தைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

'சியர்ஸ்' என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது?
மது பிரியர்களுக்கு பிடித்த சொல்லான 'சியர்ஸ்' என்ற வார்த்தை பழைய பிரெஞ்சு வார்த்தையான 'சியர்' என்பதிலிருந்து உருவானது, இதன் பொருள் முகம் அல்லது தலை. 18 ஆம் நூற்றாண்டில், இந்த வார்த்தை மகிழ்ச்சி மற்றும் ஊக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக பயன்படுத்தத் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மது அருந்துவதற்கு முன் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க இது பயன்படுத்தப்படுகிறது. ஆன்மீக நம்பிக்கை முதல் பாதுகாப்பு வரை, மக்கள் தங்கள் மது கோப்பைகளை ஒன்றாக இடித்து சியர்ஸ் சொல்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
பாதுகாப்பை உறுதி செய்கிறது
வரலாற்று குறிப்புகளின் படி, கடந்த காலங்களில் விஷம் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய மக்கள் தங்கள் டம்ளரை உயர்த்தி சத்தமாக ஆரவாரம் செய்தனர். அந்த நேரத்தில், ஒருவரின் பானத்தில் விஷம் கலப்பதே அவர்களைக் கொல்லும் பொதுவான வழியாக இருந்தது. எனவே, கண்ணாடிகளை முழுதாக நிரப்பி ஒன்றாக இடித்தால், ஒவ்வொரு கிளாஸிலிருந்தும் சில துளிகள் மற்றொரு டம்ளருடன் பரிமாறப்படும் என்று நம்பப்பட்டது. இதனால், கைதட்டி ஆரவாரம் செய்து, பின்னர் பானத்திலிருந்து ஒரு சிப் குடித்து அவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்தனர்.
காதுகளின் உணர்வை மேம்படுத்த
இது நகைச்சுவை மன்னன் கவுண்டமணி கூறிய விஷயம்தான். மது அருந்துதல் என்பது அனைத்து புலன்களையும் உள்ளடக்கியது என்று கூறப்படுகிறது. நீங்கள் மதுவைப் பார்க்கலாம், தொடுவதன் மூலம் உணரலாம், சுவைக்கலாம் மற்றும் அதன் வாசனையை நுகரலாம். ஆனால் காதுக்கு இதனால் எந்த அனுபவமும் கிடைப்பதில்லை. எனவே ஐந்தாவது புலனான காதை இதில் ஈடுபடுத்தவும், அதன்மூலம் கிடைக்கும் அனுபவத்தை நிறைவு செய்யவும், மக்கள் தங்கள் டம்ளர்களை அழுத்தி சியர்ஸ் சொல்கிறார்கள்.
தீய ஆவிகளை விரட்டுதல்
இடைக்காலத்தில், டம்ளர்களை இடித்து, பேய்கள் அல்லது தீய சக்திகளை விரட்ட மக்கள் சத்தமாக சியர்ஸ் செய்தனர். சியர்ஸ் என்று சொல்லிவிட்டு மக்கள் சிறிதளவு மதுவை கீழே சிந்தி விடுவார்கள். கெட்ட ஆவிகள் அந்த பானத்தை அருந்திவிட்டு அவர்களை விட்டுவிடும் என்று மக்கள் நம்பினார்கள்.



Click it and Unblock the Notifications
