Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
இந்த 5 ராசிக்காரங்க மட்டும் உங்க வாழ்க்கை துணையா வந்தா? அவ்வளவு தானாம்...என்ன பண்ணுவாங்க தெரியுமா?
நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல விஷயங்கள் புதைந்து இருக்கலாம். தங்களை பற்றி அல்லது சில விஷயங்களை பற்றி சிலர் மற்றவர்களிடம் அதிகம் பகிரலாம். சிலர் தங்களை பற்றி எந்த விஷயத்தையும் மற்றவர்களிடம் பகிராமல் இருக்கலாம்.
விஷயங்களை நாம் அதிகமாக பகிரும்போது, அவர்கள் நம்மை பற்றி நன்றாகவோ அல்லது மோசமாகவோ உணரக்கூடும். பெரும்பாலான மக்களுக்கு எப்போது எதை யார் முன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். ஆனால், வாழ்க்கை ஓட்டத்தில் பலர் தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு பின்னர் வருத்தப்படுகிறார்கள்.

விஷயங்களை நாம் யாரிடம் பகிர்ந்து கொள்கிறோம் என்பதில், நாம் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்று இருக்கும் நபர்களை ஜோதிடத்தின் மூலம் அடையாளம் காணலாம். ராசி அறிகுறிகளின் அடிப்படையில், மற்றவர்களை பொருட்படுத்தாமல், அதிகமாக விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் சிலர் உள்ளனர். உங்கள் சக ஊழியர், நண்பர் அல்லது வாழ்க்கை துணை அவர்களில் ஒருவரா என்பதை அறிய இக்கட்டுரையை படியுங்கள்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களின் வாழ்க்கை என்பது அனைவரும் அறிந்த விஷயமாக இருக்கும். அவர்கள் அதிர்வை உணராவிட்டாலும், எல்லாரிடமும் எப்படியாவது ஒன்றாக இணைந்துவிடுவார்கள். இந்த ராசிக்காரர்கள் நல்ல தொடர்பு கொள்வதிலும் தங்களை வெளிப்படுத்துவதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாரிடம் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பேசுவார்கள்.
இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு அருகே இருக்கும்போது மக்களை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்வார்கள். அவர்கள் சொல்லும் கதைகள், நகைச்சுவைகள் மற்றும் தனிப்பட்ட கோட்பாடுகளால் மக்கள் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். இதனால், மிதுன ராசிக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த செயல்பாட்டில், அவர்கள் விஷயங்களை அதிகமாக பகிர்ந்து கொள்கிறார்கள்!
சிம்மம்
காந்த ஆளுமை பண்பின் காரணமாக மக்கள் பெரும்பாலும் சிம்ம ராசிக்காரர்களை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த இராசி அடையாளத்தின் ஆளுமை, நடத்தை மற்றும் தங்களை வெளிப்படுத்தும் விதத்தால், மக்களை எளிதில் கவர்ந்திழுக்கிறார்கள். ஆதலால், சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் சமூகமானவர்கள். அவர்கள் தங்களை பற்றி எல்லா விஷயங்களையும் மற்றவர்களிடம் சொல்வார்கள்.
வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் சுமந்துகொண்டு தாங்கள் அதிகமாக கஷ்டப்படுவதற்கு பதிலாக விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதில், மன அமைதியை பெறுகிறார்கள். எல்லாரையும் நண்பர்களாக நினைத்து, எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வது சிம்ம ராசிக்காரர்களின் இயல்பு.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் பேசுவதை அதிகம் விரும்புகிறார்கள். அதில் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், அந்நியர்கள் மற்றும் அவர்களும் கூட அடங்குவர். அவர்கள் தங்களை மற்றவர்களிடம் வெளிப்படுத்தும்போது, அது அவர்களுக்கு ஒரு பிணைப்பை உருவாக்க உதவுகிறது. இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் உரையாடலில் இருக்கும்போது, முக்கியமான விஷயங்கள், தத்துவங்கள், மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி ஆழமாக பேசலாம்.
தனுசு ராசிக்காரர்கள் விவாதிக்கும் தலைப்புகளைப் பற்றி நேர்மையான கருத்துக்களைக் கொடுக்கிறார்கள் மற்றும் அவர்களின் வெளிப்பாடுகளை ஒருபோதும் கட்டுப்படுத்த மாட்டார்கள். இது சில நேரங்களில் அவர்கள் அதிகமாக விஷயங்களைப் பகிர்வதற்கு வழிவகுக்கிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மக்களை அதிகம் விரும்புகிறார்கள் மற்றும் மக்கள் அவர்களை அதிகம் விரும்புகிறார்கள். யாரும் இல்லாமல் அவர்களால் தனியாக இருக்க முடியாது. இந்த ராசிக்காரர்கள் நகைச்சுவையானவர்கலாகவும் நேர்மையானவர்கலாகவும் இருப்பார்கள். கும்ப ராசிக்காரர்கள் தங்களின் புதிய யோசனைகளைப் பற்றி பேசும் போது மிகவும் உற்சாகமாக இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் மிகவும் உண்மையான சிந்தனையாளர்கள் மற்றும் தன்னிச்சையானவர்கள் என்பதால் அவர்கள் என்ன சொல்வார்கள் அல்லது செய்வார்கள் என்பதைக் கணிப்பது மற்றவர்களுக்கு கடினமாக இருக்கும். சில நேரங்களில் அவர்கள் ஒரு நபருடன் நம்பிக்கை உணர்வு கொள்கிறார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மிகவும் வெளிப்படையானவர்கள் மற்றும் மனக்கிளர்ச்சி கொண்டவர்கள். அவர்கள் பொதுவாக தங்கள் மனதில் உள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால் மக்கள் எளிதில் காயமடையலாம். இந்த ராசிக்காரர்களால் பெரும்பாலும் தங்கள் உணர்வுகளையும் கருத்துக்களையும் தங்களுக்குள் வைத்திருக்க முடியாது. மற்றவர்களிடம் விஷயங்களை பகிரும்போதுதான், அவர்கள் நன்றாக உணருவார்கள்.
ரிஷபம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் யாரிடமும் தங்களை பற்றிய விஷயங்களை அதிகம் பகிர்ந்துகொள்ள மாட்டாரகள். மற்றவர்களிடம் எதையும் பேசுவதற்கு முன், அதிகமாகப் பகிர முடியாத அளவுக்கு அமைதியாக இருக்கலாம். அதனால், இந்த ராசிக்காரர்கள் தங்களை பற்றிய விஷயங்களை தங்களுக்குள்ளே மட்டுமே வைத்திருப்பார்கள்.



Click it and Unblock the Notifications

