Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
இந்த முகலாய அரசர் அவருடைய மகளையே திருமணம் செய்து கொண்டாராம்... அதற்கு பின்னால் இருந்த காரணம் என்ன தெரியுமா?
இந்திய வரலாறு என்பது பல்வேறு போர்கள், கலாச்சார மாற்றங்கள் படையெடுப்புகளால் நிறைந்தது. தற்போதைய இந்தியாவின் நிலப்பரப்பு இந்தியாவாக உருவாவதற்கு முன் அண்டை நாடுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. அதனை பல்வேறு ராஜ்ஜியங்களை சேர்ந்தவர்கள் ஆண்டு வந்தார்கள்.
இந்தியாவில் ஒவ்வொரு வம்சமும் தங்களுக்கென தனிப்பட்ட விதிமுறைகளையும், பழக்கவழக்கங்களையும் கொண்டிருந்தார்கள். ராஜ்ஜியங்களுக்கு இடையே திருமண உறவுகள் நிகழ்ந்த பிறகு கலாச்சாரங்களும், பழக்கவழக்கங்களும் இணையத் தொடங்கின.

இந்தியாவின் கலாச்சார மாற்றங்களில் முகலியர்களின் தாக்கம் மிகவும் முக்கியமானது. முகலாயர்களின் வருகை இந்த நிலப்பரப்பு மட்டுமின்றி இந்தியாவின் கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. முகலாயர்கள் கிட்டதட்ட 300 ஆண்டுகள் இந்தியாவில் தங்கள் இராஜ்ஜியத்தை வலிமையாக வைத்திருந்தார்கள்.
முகலாய அரசர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படுபவர் ஷாஜகான். வரலாற்றில் ஷாஜகானின் பெயர் நிலைபெற்றிருக்க அவர் கட்டிய தாஜ்மகால் மட்டும் காரணமல்ல, அவரின் சிறந்த ஆட்சிமுறையும்தான். ஷாஜகானின் ஆட்சி காலம் முகலாயர்களின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. எவ்வளவுதான் சிறந்த ஆட்சியாக இருந்தாலும் அதனைச்சுற்றி சில சர்ச்சைகளும், ரகசியங்களும் இருக்கத்தான் செய்யும். அதற்கு ஷாஜகானின் ஆட்சியும் விதிவிலக்கல்ல.
ஷாஜகான் தன் மகளையே மணந்தார் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தலாம். மும்தாஜ் இறந்த பிறகு, தாஜ்மஹாலைக் கட்டிய முகலாயப் பேரரசர் ஷாஜஹான், தனது சொந்த மகள் ஜஹானாராவை மணந்தார், ஏனெனில் அவர் மும்தாஜை போலவே இருப்பதாக அவர் நினைத்தார். ஷாஜகானின் பதினான்காவது குழந்தையைப் பெற்றெடுக்கையில், மும்தாஜ் ஜூன் 17, 1631 அன்று காலமானார்.
மும்தாஜ் இறந்தபோது, ஜஹானாராவுக்கு 17 வயது. மும்தாஜின் மரணத்தால் ஷாஜஹான் மனம் தளர்ந்துவிட்டார். மும்தாஜின் நினைவாக, ஷாஜஹான் தனது மகளான ஜஹானாராவை மணந்தார், ஏனெனில் அவர் மும்தாஜுடன் உருவ ஒற்றுமையைக் கொண்டிருந்தார்.
ஜஹானாரா இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஏனென்றால் அவரும் தனது தந்தையின் நிலைமையை எண்ணி மிகவும் வருத்தப்பட்டார். மும்தாஜ் மற்றும் ஷாஜகானுக்கு ஜஹானாரா என்ற இரண்டாவது குழந்தை பிறந்தது. ஜஹானாரா ஒரு பிரகாசமான, பக்தியுள்ள குழந்தையாக அவர் இருந்தார், மேலும் அரசியல் பற்றி நிறைய ஞானத்தையும், புரிதலையும் கொண்டிருந்தார் என்று அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் முகலாய அரசவையில் ஜஹானாரா அதிக செல்வாக்கு கொண்டவராக இருந்தார்.
அவர்களது திருமணத்தை மறைக்கவும், அவதூறுகளைத் தடுக்கவும் ஜஹானாராவுக்கு ஷாஜகான் "பாட்ஷா பேகம்" என்ற பட்டத்தை வழங்கினார். ஔரங்கசீப் தனது தந்தையின் தொடர்ச்சியான இந்த செயல்களால் அவர் மீது வெறுப்படைந்தார். அவரது தந்தை ஷாஜகான் சிறையில் அடைக்கப்பட்டதற்கும், அரியணை ஏறுவதற்காக அவரது சொந்த சகோதரர் தாரா ஷிகோ படுகொலை செய்யப்பட்டதற்கும் இது முக்கிய காரணமாக இருந்தது.
ஔரங்கசீப்பிற்குப் வலிமையான முகாலய அரசர்கள் உருவாகதாலும், பிறகு ஆங்கிலேயர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதாலும், வரலாற்றின் இந்த அத்தியாயம் பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டது. ஆனாலும் இந்த செய்தியை மறுப்பவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












