Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
உங்களுக்கு சுக்கிர திசை நடக்கிறதா? செல்வம், காதல், கல்யாணம் கைக்கூடும்..!
சுக்ரதிசை பொதுவாக 20 ஆண்டுகள் நீடிக்கும். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் வந்தால் செல்வம் பெருகும் என்பது மக்களின் பொதுவான நம்பிக்கை. மேலும் சுக்கிரனின் திசையில் யாருக்கு கோடீஸ்வர யோகம் வரும்? , யாருக்கு காதல் கைக்கூடும்? யாருக்கு திருமணம் நடக்கும்? சுக்கிரன் திசை என்ன செய்யும்? என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
சுக்கிரன் திசை என்றல் என்ன?
சுக்கிரன் அசுர குரு என்று சொல்லப்படுகிறார். நவ கிரகங்களில் சுக்கிரன் ஒரு சுப கிரகம். காதல் நாயகன். அன்பு மற்றும் ஆசையின் தலைவன். சுக்கிரன் இல்லற வாழ்க்கையில் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருகிறார். ஜாதகத்தில் சுக்ரன் வலுவாக இருந்தால் சுக்ர திசையின் போது யோகங்கள் ஏற்படும். சுக்கிரன் கோடி கோடியாய் அள்ளி தருவார்..

சுக்கிரன் யாருக்கு யோகம் தருவார்?
சுக்கிரன் ஒருவரின் ஜெனன கால ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்திருந்தால் மட்டுமே சுக்கிரதிசை காலத்தில் நற்பலன்களை பெற முடியும். சுக்கிரன் பலம் பெற்றிருந்து நட்பு கிரகங்களான புதன், சுக்கிரன், சனி போன்றவற்றின் வீட்டில் அமைந்தோ, சேர்க்கைப் பெற்றோ இருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திர பாக்கியம் உண்டாக கூடிய யோகம், செல்வம் செல்வாக்கு சேர்க்கை, வண்டி வாகனம், பூமி, மனை வாங்கும் யோகம். ஆடை, ஆபரணங்கள் அமையும் வாய்ப்பு போன்ற யாவும் அமையும். பண வரவுகளுக்கும் பஞ்சாமில்லாமல் போகும். கடன்கள் யாவும் நிவர்த்தி யாகும்.
பரணி-பூரம்-பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பிறந்த திசை சுக்கிர திசையாகும். பலரின் கூற்றுப்படி, அஸ்வினி-மகம்-மூல நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சுக்கிரன் இரண்டாவது திசையில் இருக்கிறார், இது அவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் பாதிக்கிறது. இதை சில ஜோதிடர்கள் சொன்னாலும் ஒன்றும் ஆகாது என்ற கருத்து நிலவுகிறது. ஒரு ஆணின் ஜாதகத்தில் சனியின் மகன் குளகம் களத்திர காரக சுக்ரத்தில் இருந்தால் மனைவியால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் ஜோதிடர்கள்.
அஸ்வினி, மகம், தாரா நட்சத்திரங்களிலும் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களிலும் பிறந்தவர்களுக்கு இளமையில் சுக்ரகிரக திசை நடக்கும். இளமையில் சுக்கிர தசையும் புக்தியும் ஜாதகருக்கு வலுவான காதல் உணர்வுகளைத் தரும். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து நெஞ்சில் காதலை ஒலிக்கச் செய்த இருவரை திடீரென்று அறிமுகப்படுத்தி திருமணங்களையும் செய்து வைப்பார்.
சுக்கிர திசை பலன்கள்
ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அதிர்ஷ்டத்தைத் தானாகப் பெறுவார்கள் என ஆன்மீகம் கூறுகிறது. எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றி பெறும். சுக்கிரன் உங்களுக்கு ஆடம்பர வாழ்க்கை அன்பும் நிறைந்த வாழ்க்கையும் கொடுப்பார். ஆனால் சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் பல்வேறு விதமான போராட்டங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். சுக்கிரனின் மகாதசை அந்த நபருக்கு அசுப பலன்களைக் கொடுக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைந்துவிடும். பல்வேறு விதமான அசுப பலன்கள் கிடைக்கும். அதனைப் பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்யலாம்.
பரிகாரங்கள்
சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும். வெள்ளிக்கிழமை அன்று லட்சுமியுடன் சுக்கிர பகவானை வழிபட்டால் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. லட்சுமி தேவியை வழிபாடு செய்துவிட்டு அரிசி அல்லது பாலால் செய்யப்பட்ட இனிப்புகளைத் தானமாகக் கொடுத்தால் சுக்கிரன் பலமாகும்.
வெள்ளிக்கிழமை அன்று எறும்புகளுக்கு மாவு அல்லது சர்க்கரையை உணவாகக் கொடுத்து வழிபடலாம். இந்த பரிகாரத்தின் மூலம் பல சுக்கிர தோஷத்திலிருந்து விடுபட்டிருக்கிறார்கள் என கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று நெய், தயிர், பால், வெள்ளை முத்து, வெள்ளை ஆடை உள்ளிட்ட பொருட்களைத் தானமாக கொடுத்தால் சுக்கிரனின் பலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மகாலட்சுமியை வெண்ணிற வஸ்திரம் மற்றும் வெள்ளை தாமரை மலரால் வழிபடுவது நன்மை தரும். பச்சை மிளகாய், தாலி கயிறு, மஞ்சள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யலாம். வைரத்தை விரலில் அணியலாம். சுக்ர தசா காலத்தில் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரையும், அம்மையையும் வழிபட்டால் அசுப பலன்கள் குறைந்து நற்பலன்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை...



Click it and Unblock the Notifications