Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சுக்கிர பெயர்ச்சியால் ஜூன் 12 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப்போகுது...
Venus Transit In Gemini On 12 June 2024: அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் இவர் அழகு, ஆடம்பரம், செழிப்பு, காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஜோதிடத்தில் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
இந்த சுக்கிரன் தற்போது தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 12 ஆம் தேதி புதனின் ராசியான மிதுன ராசிக்கு செல்லவுள்ளார். சுக்கிரன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதுவும் மிதுன ராசிக்கு சுக்கிரன் செல்வதால், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க நேரிட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இப்போது சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதானால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகள் வெளிவரும். இதனால் நிறைய பணத்தை சம்பாத்திப்பீர்கள். நிதி நிலைமை வலுவடையும். நிறைய பணத்தை சேதிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் சிறந்த செயல்திறனால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும். இதனால் உங்கள் இலக்கை எளிதில் அடைவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மகத்தான செல்வத்தைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணை உங்களை புரிந்து கொள்வார்கள் மற்றும் அவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சுக்கிரனின் அருளால் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். இதனால் உங்களின் நிதி நிலை மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
