Latest Updates
-
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம்
வாஸ்துப்படி வீட்டுல இந்த 4 பொருட்களை காலியா வெச்சுருக்காதீங்க.. இல்ல அது வறுமையை கொண்டு வரும்..
Vastu Tips In Tamil: ஒருவரது வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டுமானால், அவர் குடியிருக்கும் வீடு அல்லது வேலை செய்யும் பணியிடம் வாஸ்துப்படி இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, நமது வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்கள் மற்றும் அது இருக்கும் இடம் போன்றவை வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேப் போல் வாழ்க்கை செழிப்பாக இருக்க வேண்டுமெனில் லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டும். வாஸ்துப்படி கட்டப்பட்டுள்ள வீடுகளில் லட்சுமி தேவி எப்போதும் குடியிருப்பாள். ஒருவேளை வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால், அது வீட்டுச் சூழலை மோசமாக பாதிப்பதோடு, வீட்டில் உள்ளோரிடையே பிரச்சனைகளை அதிகரிக்கும் மற்றும் பண பிரச்சனைகளை கொண்டு வரும். இது தவிர ஆரோக்கியத்திலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இது தவிர வாஸ்துப்படி, வீட்டில் வைத்துள்ள ஒருசில பொருட்களை காலியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை அந்த பொருட்களை காலியாக வைத்திருந்தால், அது வீட்டிற்கு வறுமையை கொண்டு வரும். குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும். இப்போது எந்த பொருட்களை வீட்டில் காலியாக வைத்திருக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
பணம் வைக்கும் பெட்டி அல்லது பர்ஸ்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பணம் வைக்கும் பெட்டி அல்லது பர்ஸை எப்போதும் காலியாக வைத்திருக்கக்கூடாது. எப்போதுமே சிறிது பணத்தையாவது வைத்திருக்க வேண்டும். பர்ஸை முழுமையாக காலி செய்து வைத்தால், லட்சுமி தேவிக்கு கோபம் வரும். மேலும் பணம் வைக்கும் பெட்டி அல்லது பர்ஸில் வலம்புரி சங்கு, சோளி, கோமதி சக்கரம் போன்றவற்றை ஒரு சிவப்பு துணியில் கட்டி வைத்தால், லட்சுமி தேவி சந்தோஷப்பட்டு, வீட்டில் செல்வத்தை அதிகரிக்க வழிவகை செய்வார்.
காலி பாத்திரம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் பூஜை அறையில் உள்ள தண்ணீர் பாத்திரத்தை எப்போதும் காலியாக வைத்திருக்கக்கூடாது. தினமும் அந்த பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் சிறிது துளசியைப் போட்டு வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், பூஜையறையில் உள்ள தெய்வங்கள் தாகத்தின் போது அந்நீரைப் பருகும் என்று நம்பப்படுகிறது. அதோடு வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேறி, வீடு எப்போதும் நேர்மறை ஆற்றல் சூழ்ந்திருக்கும். ஒருவேளை காலி பாத்திரத்தை வைத்திருந்தால், அது பணப் பிரச்சனையை வீட்டில் அதிகரிக்கும்.
குளியலறை வாளி
பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் உள்ள குளியலறையில் இருக்கும் வாளியை காலியாக வைத்திருப்பார்கள். ஆனால் வாஸ்துப்படி குளியலறையில் உள்ள வாளியை காலியாக வைத்திருக்கக்கூடாது. அதேப் போல் கருப்பு நிற வாளி மற்றும் உடைந்த வாளிகளை பயன்படுத்தக்கூடாது. இப்படி செய்தால், அது வீட்டில் பணப் பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
அரிசி பருப்புகள்
எப்போதும் வீட்டில் அரிசி, பருப்பு போன்ற சமையலுக்கு தேவையான பொருட்கள் உள்ள டப்பாவை காலியாக வைத்திருக்கக்கூடாது. அப்படி வைதிருந்தால், அது அன்னை அன்னப்பூரணியின் கோபத்திற்கு ஆளாக்கி, உணவு கிடைக்காமல் செய்துவிடும். எனவே வீட்டில் சமையல் பொருட்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எப்போதும் சமையலுக்கு வேண்டிய பொருட்களை மாதந்தோறும் தவறாமல் வாங்கி வைத்துவிடுங்கள். இது செழிப்பை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications