Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வாஸ்துப்படி மற்றவர்களின் இந்த பொருட்களை பயன்படுத்தாதீங்க.. இல்ல அது துரதிர்ஷ்டத்தை தரும்..
Vastu Tips In Tamil: சிறு வயதில் இருக்கும் போது, நம் பெற்றோர்கள் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். பகிர்தல் என்பது ஒரு நல்ல பழக்கம். ஆனால் எதையெல்லாம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஒன்று உள்ளது. பெரும்பாலானோர் தங்களின் உடைகள், ஆபரணங்கள், காலணிகள் போன்றவற்றை தங்கள் உடன்பிறந்தவர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
ஆனால் வாஸ்துப்படி, இந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் தவறு. நீங்கள் இதுவரை இவற்றை பகிர்ந்து கொண்டிருந்தால், உடனே அவற்றைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் ஒருவர் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினால், அதன் விளைவாக எதிர்மறை ஆற்றல் அவர்களை ஆதிக்கம் செலுத்தி, முன்னேற்றத்தில் இடையூறை ஏற்படுத்துவதோடு, தீங்கை விளைவிக்கும். இப்போது வாஸ்துப்படி எந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதைக் காண்போம்.

ஆடைகள் - உலகில் 90 சதவீத மக்கள் தாங்கள் உடுத்தும் ஆடைகளை நண்பர்கள் அல்லது உடன்பிறந்தவர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. ஆனால் இதை தவிர்க்க வேண்டும். வாஸ்துப்படி, மற்றவர்கள் அணிந்த ஆடைகளை அணியும் போது, அதன் விளைவாக நோய்த்தொற்றுக்களின் அபாயம் அதிகரிப்பதோடு, துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும். ஏனெனில் ஒருவரை சுற்றியிருக்கும் எதிர்மறை ஆற்றலானது, அவர்களின் ஆடைகளை பயன்படுத்தும் போது, அந்த ஆடைகளின் வழியே மற்றவர்களை அடையும். எனவே இதைத் தவிர்க்க வேண்டும்.
மோதிரம் - மற்றவர்களின் மோதிரங்களை அணியக்கூடாது. மோதிரமானது எந்த உலோகத்தினால் வேண்டுமானாலும் இருக்கலாம். உலோகங்களானது ராசிகள் மற்றும் கிரகங்களுடன் தொடர்புடையவை. எனவே மற்றவர்களின் மோதிரங்களை அணியும் போது, அது உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வலுவிழக்கச் செய்து, வாழ்க்கையை மோசமாக பாதிக்கும்.
காலணி - ஆடைகளைப் போன்றே, நிறைய பேர் தங்களின் காலணிகளையும் பகிர்ந்து கொள்வதுண்டு. ஆனால் இதுவும் தவறு. வாஸ்துப்படி, மற்றவர்களின் காலணிகளை அணிந்தால், அது வீட்டிற்கு வறுமையைக் கொண்டு வரும். முக்கியமாக சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
பேனா - பென்சில் அல்லது பேனா போன்ற பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்த கொண்டால், அவர்களுடனான உறவு முறிந்துவிடும் என்பார்கள். ஆனால் வாஸ்துப்படி ஒருவரது பேனா, பென்சிலை வாங்கி பயன்படுத்திய பின், அதை திரம்ப கொடுக்காமல் இருந்தால், செலவு அதிகரிக்கும். எனவே மற்றவர்களின் பேனா அல்லது பென்சிலை வாங்கினால், அதை மறக்காமல் திரும்ப கொடுத்துவிடுங்கள்.
கைக்கடிகாரம் - கைக்கடிகாரம் நேரத்தை செல்வதோடு மட்டுமின்றி, ஒருவரது வாழ்வில் உள்ள நல்ல மற்றும் கெட்ட நேரங்களுடனும் தொடர்புடையது. எனவே மற்றவர்களின் கைக்கடிகாரங்களை அணிந்தால், அது தீங்கை உண்டாக்கும். அதுவும் ஏற்கனவே வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்கும் ஒருவரது கைக்கடிகாரத்தை வாங்கி அணிந்தால், அது உங்கள் வாழ்விலும் பிரச்சனைகளை உண்டாக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications