Latest Updates
-
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
வாஸ்துப்படி ஒருவருக்கு கடன் கொடுக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல பணம் திரும்ப கிடைக்காது..
Vastu Tips In Tamil: இன்று பலர் என்ன தான் சம்பாதித்தாலும், சம்பாதிக்கும் பணம் போதாமல் கடன் வாங்கி செலவழித்து வருகிறார்கள். இப்படி கடன் வாங்குபவர்களை விட, கடன் கொடுத்தவர்கள் தான் திரும்ப அந்த பணத்தை பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். இப்படி கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப பெற முடியாமல் போவதற்கு, கடன் கொடுக்கும் போது செய்த சில தவறுகள் தான் காரணமாக இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
ஆம், வாஸ்து சாஸ்திரத்தில் பண பரிவர்த்தனை குறித்த சில விதிகள் கூறப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றாமல் இருந்தால், கடனாக கொடுத்த பணத்தை பெற முடியாமல் போகும். அதுவே அந்த விதிகளைப் பின்பற்றினால், கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். இப்போது ஒருவருக்கு கடன் கொடுக்கும் போது வாஸ்துப்படி எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.

* வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவருக்கு கடன் கொடுக்கும் போது, பணத்தை எப்போதும் தெற்கு திசையை நோக்கியவாறு கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்காமல் போகும். கடன் கொடுப்பதாக இருந்தால், வடக்கு திசையை நோக்கியவாறு கொடுங்கள். மேலும் கடனாக பணத்தை வாங்கும் போது மேற்கு திசையை நோக்கி வாங்காதீர்கள். இல்லையெனில் மருத்துவ செலவிற்கு அந்த பணம் செலவாகும்.
* பணத்தை எண்ணும் போது, சிலர் எச்சிலைத் தொட்டுக் கொண்டு எண்ணுவார்கள். ஆனால் வாஸ்துப்படி எச்சிலைப் பயன்படுத்தி நோட்டுக்களை எண்ணினால், அது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கி, பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வைக்கும்.
* கஷ்டத்தில் இருந்த ஒருவருக்கு கொடுத்த பணம் திரும்ப கிடைக்காமல் கவலைப்படுக்கிறீர்கள் என்றால், வாஸ்துப்படி அந்த பணத்தை வடக்கு திசையில் பரிவர்த்தனை செய்ய வேண்டும். அதுவும் அந்த பணத்தை இடது கையில் கொடுப்பதே நல்லது.
* கடன் வாங்கும் பலரும் தங்களால் கடன் வாங்குவதை நிறுத்த முடியவில்லை; கடன் சுமை குறையாமல் அதிகரித்துக் கொண்டு உள்ளது என்று புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள். நீங்களும் இப்படி கடன் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், வாங்கிய கடன் பணத்தை செவ்வாய் கிழமைகளில் செலுத்துங்கள். இதனால் உங்கள் கடன் வேகமாக குறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications