Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
லட்சுமி தேவியின் ஆசி வேண்டுமா? அப்ப வாஸ்துப்படி தினமும் வீட்டுல இந்த விஷயங்களை செய்யுங்க..!
Vastu Tips In Tamil: பணத்திற்காக தான் நாம் ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு உழைக்கிறோம். ஆனால் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், அந்த பணம் சில சமயங்களில் நம் கையில் நிற்காது.
சிலருக்கு கடின உழைப்பிற்கான பலன் கிடைக்காதிருக்கும் மற்றும் சிலருக்கு வெற்றி கிடைக்காதிருக்கும். இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பது அவர்களைச் சுற்றி எதிர்மறை ஆற்றல் நிரம்பியிருப்பது தான்.

சாஸ்திரத்தின் படி, ஒருவர் குடியிருக்கும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்திருந்தாலோ அல்லது அந்த வீட்டில் உள்ளோருக்கு லட்சுமி தேவியின் ஆசி இல்லாமல் இருந்தாலோ, அந்நபர் வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க வாஸ்துப்படி ஒருசில விஷயங்களை தினமும் வீட்டில் பின்பற்றி வந்தாலே போதும்.
இதனால் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதோடு, செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் ஆசி கிடைத்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது லட்சுமி தேவியின் ஆசியைப் பெற ஒருவர் தினமும் எந்த மாதிரியான விஷயங்களை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.
கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்
தினமும் மாலை வேளையில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி, அதில் 2 கிராம்புகளை வையுங்கள். அதுவும் இந்த தீபத்தை வீட்டு வாசலின் இரண்டு பக்கங்களிலும் வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், லட்சுமி தேவியின் ஆசி கிடைப்பதோடு, முன்னோர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.
கற்பூரத்தை ஏற்றவும்
நல்ல வாசனை மிகுந்த மங்களகரமான பொருள் தான் கற்பூரம். கடவுள் வழிபாட்டில் முக்கிய பங்கை வகிக்கும் கற்பூரமானது வாஸ்து சாஸ்திரத்திலும் முக்கியமான பொருளாக கருதப்படுகிறது. அதுவும் இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றுவதோடு, வாஸ்து தோஷத்தை நீக்கும். குறிப்பாக கற்பூரத்தை தினமும் வீட்டில் எரிக்கும் போது, அத்துடன் 2 கிராம்பை சேர்த்து எரித்தால், வீடு நல்ல மணத்துடன் இருப்பதோடு, லட்சுமி தேவியும் வீட்டில் குடியேறி, செல்வம் அதிகரிக்க வழிவகை செய்வார்.
கோமாதாவிற்கு உணவளிக்கவும்
கோமாதா அனைத்து தெய்வங்களும் குடியிருக்கும் விலங்காக கருதப்படுகிறது. இந்த கோமாதாவிற்கு தினமும் உணவளிப்பது மிகவும் நல்லது. இதனால் அனைத்து தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும் மற்றும் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
பறவைகளுக்கு உணவளிக்கவும்
தினமும் பறவைகளுக்கு உணவளிப்பது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் தானியங்களை பறவைகளுக்கு தினமும் உணவாக அளிக்கும் போது, வாழ்வில் சந்திக்கும் பலவிதமான பிரச்சனைகள் நீங்கும். மேலும் வாழ்வில் நல்ல முன்னேற்றமும், செல்வ செழிப்பும் உண்டாகும்.
வீட்டை பெருக்கக்கூடாது
மாலை வேளையானது வீட்டிற்கு லட்சுமி தேவி வரும் நேரமாகும். எனவே சூரியன் அஸ்தமனமான பின் வீட்டைப் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை அவமதிப்பதற்கு சமம் மற்றும் லட்சுமி தேவியின் கோபத்திற்கும் ஆளாகக்கூடும். இதன் விளைவாக வீட்டில் வறுமை அதிகரிக்கும். எனவே இந்த காரியத்தை எக்காரணம் கொண்டும் செய்யாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications