Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
Valentines Day 2025: காதலர் தினத்தன்று உங்க துணையோட ராசிப்படி பரிசை கொடுங்க.. காதல் இன்னும் ஸ்ட்ராங் ஆகும்...
Valentines Day 2025: காதலர் தினம் வரப்போகிறது. காதலிப்பவர்கள், காதலை தெரிவிக்க நினைப்பவர்கள், திருமணமான தம்பதிகள் என அனைவரும் தங்கள் துணைக்கு ஏதாவது பரிசுகளை வாங்கி கொடுத்து அசத்த வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஏனெனில் பரிசுகளானது ஒருவரது அன்பை சிறப்பாக உணர வைக்கும்.
பழங்காலம் முதலாக காதலர் தினத்தில் ரோஜா பூ, சாக்லேட், டெடி பியர் போன்றவற்றைக் கொடுப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் உங்கள் அன்பை, காதலை, உறவை வலுப்படுத்த விரும்பினால், ராசிப்படி பரிசுகளை வாங்கி கொடுங்கள்.

ஜோதிடத்தின் படி, ஒருவரது ராசிக்கேற்ற பரிசுகளை வாங்கி கொடுக்கும் போது, அது உறவில் இனிமையைக் கொண்டு வருவதோடு, உறவுகளையும் வலுப்படுத்தும். நீங்கள் உங்கள் காதலை வலுப்படுத்த நினைத்தால், உங்கள் காதலரின் ராசிக்கேற்ப பரிசுகளை வாங்கி கொடுங்கள். கீழே எந்த ராசியினருக்கு எந்த பொருளை காதலர் தின பரிசாக கொடுக்கலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம்
உங்க லவ்வர் மேஷ ராசி என்றால், இந்த காதலர் தினத்தன்று அவர்களை ஒரு அழகான இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அதோடு அவர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச், காலணிகள், ஜாக்கெட்டுகள், கேஜெட்டுகள் போன்றவற்றை பரிசாக கொடுங்கள். இது உறவில் இனிமையைக் கொண்டு வரும்.
ரிஷபம்
உங்க லவ்வர் ரிஷப ராசியெனில், உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப முடிந்தால் அழகான மோதிரம், கேஜெட்டு, நெக்லேஸ் செயின் போன்றவற்றை வாங்கி கொடுக்கலாம். இல்லாவிட்டால் ஒரு நல்ல ரெஸ்டாரண்ட்டிற்கு டின்னர் அழைத்துச் செல்லாம். இதனால் அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.
மிதுனம்
இந்த ராசிக்காரர்களுக்கு பிரேஸ்லெட், ஷூ, நகை போன்றவற்றை காதலர் தின பரிசாக வழங்கலாம். இதனால் அது காதலை ஆழமாக்குவதோடு, வலுவாக்கவும் செய்யும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பெர்ஃப்யூம், மேக்கப் பாக்ஸ், ஜாக்கெட் போன்றவற்றை காதலர் தின பரிசாக கொடுக்கலாம். காதலியாக இருந்தால் மேக்கப் பொருட்களை வழங்குவது நல்லது. இது உங்கள் உறவுகளை மேலும் சிறப்பாக்கும்.
சிம்மம்
உங்கள் லவ்வர் சிம்ம ராசி என்றால், உங்கள் பட்ஜெட்டை மனதில் கொண்டு அவர்களுக்கு ஒரு மொபைல் போனை பரிசாக வழங்கலாம். இது உங்கள் இருவருக்கும் இடையேயான உறவை இன்னும் நெருக்கமாக்கும். மேலும் மொபைல் போன் மூலம் எப்போதும் இருவரும் தொடர்பில் இருக்கலாம்.
கன்னி
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு சிறப்பான காதலர் தின பரிசை அளிக்க நினைத்தால், பாடல்கள் நிறைந்த பென்டிரைவ், பெர்ஃப்யூம், லெதர் ஜாக்கெட் அல்லது பிளாட்டினம் செயின் போன்றவற்றை பரிசாக கொடுக்கலாம். இது இருவருக்கும் இடையே காதலை நீடித்து நிலைக்கச் செய்யும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஃபார்மல் பேண்ட், ஷர்ட், ஷூ, டை, வாட்ச் போன்றவற்றை காதலர் தின பரிசாக கொடுக்கலாம். இது இருவருக்கும் இடையிலான காதலையும், பிணைப்பையும் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் உங்கள் காதலராக இருந்தால், அவர்களுக்கு பெர்ஃப்யூம், பர்ஸ், லெதர் பெல்ட், ஷூ, புதிய கலெக்ஷன் ஷர்ட், ஜாக்கெட் என்று இவற்றில் ஒன்றை பரிசாக வழக்லாம். இது உங்கள் துணையுடனான உங்கள் உறவை வலுப்படுத்தவும் புதிய பரிமாணங்களையும் வழங்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் உங்கள் அன்புக்குரியவரானால், அவருக்கு காதலர் தின பரிசாக அவர்களை கோயில் போன்ற புனிதமான ஸ்தலங்களுக்கு அழைத்துச் செல்லலாம். இச்செயல் உங்கள் இருவருக்கும் இடையேயான சந்தோஷத்தை அதிகரிக்கும். இது தவிர, இவர்களுக்கு டிராவல் பேக், வாட்ச் மற்றும் ஆடைகளை பரிசாகவும் வழங்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஒரு பழக்கூடையை பரிசாக அளிக்கலாம். இது தவிர மொபைல் போன், லேப்டாப், எலக்ட்ரானிக் டைரி போன்றவற்றையும் காதலர் தின பரிசாக வழங்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உங்கள் காதலர் என்றால், அவருக்கு மேக்கப் பாக்ஸ், எலக்ட்ரானிக் கேஜெட், நெக்லேஸ், தங்க மோதிரம் போன்றவற்றை காதலர் தின சிறப்பு பரிசாக வழங்கலாம். இந்த பரிசுகளை வழங்கினால், உங்கள் காதலரின் முகத்தில் புன்னகையை காணலாம்.
மீனம்
காதலர் தினத்தின்று மீன ராசிக்காரர்களுக்கு கொடுக்க ஏற்ற சிறந்த காதலர் தின பரிசு என்றால், அது ஸ்மார்ட்வாட்ச், ப்ளூடூத் இயர்ஃபோன், ஸ்மார்ட்போன், பர்ஸ் மற்றும் பெர்ஃப்யூம் தான். இவற்றில் எதை வாங்கி கொடுத்தாலும், அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications