Latest Updates
-
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
Vaikunta Ekadasi 2025: வைகுண்ட ஏகாதசி நாளில் இந்த பொருட்களை தானம் செய்யுங்க.. விஷ்ணுவின் ஆசி கிடைக்கும்..
Vaikunta Ekadasi 2025: வைகுண்ட ஏகாதசி என்பது விஷ்ணு பகவானுக்கு உரிய நாளாகும். இந்த வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசியில் விரதம் இருக்க முடியாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்தால், அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து கிடைக்கும் பலனைப் பெறலாம்.
வைகுண்ட ஏகாதசியின் சிறப்பே, அந்நாளில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது தான். பெருமாளின் ஆசியைப் பெற நினைப்பவர்கள், இந்த நாளில் விரதமிருந்து வழிபாடு செய்தால், இந்த ஜென்மத்தில் மட்டுமின்றி, ஏழு ஜென்மத்திலும் செய்த பாவம் நீங்கும். மேலும் இந்நாளில் ஒருவர் இறந்தால், அவருக்கு மறுபிறவி கிடையாது.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். இது தவிர இந்த நல்ல நாளில் அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் வாழ்நாள் முழுவதும் பெற ஒருசிலவற்றை தானம் செய்வது நல்லது. இப்போது வைகுண்ட ஏகாதசி நாளில் எவற்றை தானம் செய்யலாம் என்பதைக் காண்போம்.
1. பழங்கள்
வைகுண்ட ஏகாதசி நாளில் உணவுகள் மற்றும் பழங்களை தானம் செய்யலாம். இந்துக்களின் நம்பிக்கைகளின் படி, ஏழை எளியோருக்கும், பசியுடன் இருப்பவர்களுக்கும் உணவை தானம் செய்தால், விஷ்ணுவின் ஆசியைப் பெறலாம். அதுவும் இந்நாளில் பழங்கள் மட்டுமின்றி, அரிசி, கோதுமை, பருப்பு போன்றவற்றை தானம் செய்யலாம்.
2. ஆடைகள் மற்றும் போர்வைகள்
வைகுண்ட ஏகாதசி நாளில் ஆடைகள் மற்றும் போர்வைகளை தானம் செய்வது நல்லது. ஏழை மக்களுக்கு இப்படி ஆடைகளையும், போர்வைகளையும் தானமாக வழங்குவதன் மூலம் விஷ்ணுவின் ஆசி கிடைப்பதாக இந்து மக்கள் நம்புகின்றனர். எனவே நீங்கள் வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளின் ஆசீர்வாதத்தைப் பெற விரும்பினால், தேவைப்படுபவர்களுக்கு ஆடைகளை தானமாக வழங்குங்கள்.
3. நெய் மற்றும் எண்ணெய்
வைகுண்ட ஏகாதசி நாளில் நெய் மற்றும் எண்ணெயை தானம் செய்வது மிகவும் சிறப்பான செயல். இவ்விரண்டையும் ஒருவர் வைகுண்ட ஏகாதசி நாளில் தானம் செய்யும் போது, அது விஷ்ணுவின் ஆசீர்வாதத்தை பெற உதவுவதாக இந்துக்கள் நம்புகின்றனர். வேண்டுமானால் இந்நாளில் கோவிலுக்கு நெய், எண்ணெயை நன்கொடையாக அளிக்கலாம். இது ஆன்மீக வளர்ச்சியையும் அறிவொளியையும் தருவதாக நம்பப்படுகிறது.
4. அன்னதானம்
பொதுவாக அன்னதானம் ஒருவருக்கு புண்ணியத்தை சேர்க்கும். அதுவும் வைகுண்ட ஏகாதசி நாளில் பசியுடன் இருக்கும் ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்தால், விஷ்ணு பகவானின் ஆசி கிடைப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் தான் இந்நாளில் பல கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. நீங்களும் விஷ்ணுவின் ஆசியை பெற நினைத்தால், அன்னதானம் செய்யுங்கள்.
5. பாத்திரங்கள் அல்லது வீட்டு உபயோகப் பொருட்கள்
வைகுண்ட ஏகாதசி நாளில் பாத்திரங்கள் அல்லது வீட்டு உபயோகப் பொருட்களை தானம் செய்வது மிகவும் சிறந்தது. தேவைப்படுபவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது விஷ்ணுவின் ஆசீர்வாதத்தைப் பெறுவதாக இந்துக்கள் நம்புகிறார்கள். எனவே முடிந்தால், இந்த நாளில் பாத்திரங்கள் அல்லது பிற வீட்டு உபயோகப் பொருட்களை தானமாக வழங்குங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
