Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
வீட்டுல சப்பாத்தி செய்யும்போது எண்ணக்கூடாதாம்...ஏன் தெரியுமா? இன்னும் என்னெல்லாம் பண்ணக்கூடாது?
Chapati In Tamil: இந்திய உணவில் சப்பாத்தி மிகவும் முக்கியமானது. நாம் அனைவரும் தினமும் அல்லது அடிக்கடி விரும்பி சாப்பிடும் உணவான சப்பாத்தியை பற்றி நமக்கு தெரியாத பல ரகசியங்களும், தகவல்களும் உள்ளன. அவற்றை அறிந்தபின் சப்பாத்தியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்று ஆச்சரியப்படுவீர்கள்.
பெதுவாக வீட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏற்ப சப்பாத்தி செய்யும் பழக்கம் நம் அனைவரிடத்திலும் உள்ளது. உணவு மிச்சபடாமல் இருக்க நம் இவ்வாறு செய்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் வசிக்கும் உறுப்பினர்களும் சப்பாத்தியை எண்ணித்தான் சாப்பிடுவார்கள். அதனால் ரொட்டி எதுவும் மிச்சப்படுவதில்லை. நீங்கள் இந்த தந்திரத்தை பின்பற்றுகிறீர்கள் என்றால், முதலில் இந்த தவறை நிறுத்துங்கள்.

வாஸ்து படி, எண்ணி சப்பாத்தி செய்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லதல்ல என்று கூறப்படுகிறது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ரொட்டி தொடர்பான வேறு சில சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.
சப்பாத்திகளை எண்ணுவது
கோதுமை தானியங்கள் சூரியக் கடவுளுடன் தொடர்புடையவை என்பதால், சப்பாத்திகளை செய்யும்போது போது அதை எண்ணக்கூடாது என்று கூறப்படுகிறது. மீறி எண்ணினால், அது சூரிய கடவுளை அவமதிப்பதாகவும், உங்களது ஜாதகத்தில் சூரியனின் பார்வையை பலவீனப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. அவ்வாறு செய்வது குடும்பத்தின் மகிழ்ச்சியையும் அமைதியையும் பாதிக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
மீந்துபோன மாவில் சப்பாத்தி செய்யக்கூடாது
நாம் பலமுறை சப்பாத்தி செய்யும்போது, கொஞ்சம் மாவு மீந்திருக்கலாம். அதை மறுநாள் பயன்படுத்த, குளிர்சாதன பெட்டியில் வைப்போம். அப்படி மீந்துபோன மாவில் நீங்கள் சப்பாத்தி செய்தால், அது ராகுவை மோசமாக பாதிக்கும்.
உங்கள் ஜாதகத்தில் ராகு மோசமான பார்வையை வீசுவதால், அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதனால்தான், குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மாவில் செய்த சாப்பாத்தியை நீங்கள் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. மேலும், இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உருவாக்குவதால், அதை சாப்பிடாமல் தவிர்ப்பதற்கு அறிவியல் காரணங்களும் உள்ளன.
தட்டில் 3 சப்பாத்தி
இந்து நம்பிக்கைகளின்படி, ஒருவர் ஒரு தட்டில் 3 சப்பாத்திகளுக்கு மேல் வைத்து பரிமாறக்கூடாது எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், ஒரு நபர் இறந்துவிட்டால் அவருக்கு த்ரயோதசி சடங்கு செய்யப்படுகிறது. அந்த சடங்கில் இறந்தவருக்கு 3 சப்பாத்திகள் வைத்து படையலிடப்படுகிறது. இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக 3 சப்பாத்திகள் தட்டில் வைத்து படைக்கப்படுவதால், உயிருடன் இருப்பவர்களுக்கு தட்டில் 3 சப்பாத்தி வைக்கக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை.
விலங்குகளுக்கு ரொட்டி
பித்ரு தோஷத்தினால், நிதி பிரச்சனை, குடும்ப பிரச்சனை, மனம் நிம்மதியில்லாமல் இருப்பது போன்ற சிக்கல்கள் வாழ்க்கையில் எழக்கூடும். இந்த பித்ரு தோஷத்தை நீக்குவதற்கு பசுவிற்கு முதலில் சப்பாத்தி செய்து கொடுக்க வேண்டும். மேலும், கடைசி சப்பாத்தி நாய்க்கு கொடுக்க வேண்டும். ஏனெனில் இது சிக்கல்கள் மற்றும் பகை பயத்திலிருந்து விடுபட உதவுகிறது.
அன்றைய தினத்திற்கு கூடுதல் சப்பாத்தி
'விருந்தினர்கள் கடவுளை போன்றவர்கள்' என்பது இந்தியாவில் உள்ள ஒரு கருத்தாகும். அவர்களை நாம் ஏமாற்றுவதைத் தவிர்க்க வேண்டும். எனவே, நீங்கள் சப்பாத்திகளை செய்யும் போதெல்லாம், உங்கள் வீட்டு வாசலில் வரக்கூடிய தெரியாத விருந்தினர்களுக்காக எப்போதும் 2-4 கூடுதலாகச் செய்ய வேண்டும். இது நம் பாரம்பரிய முறை. இனிமேல் அன்றைய தினத்திற்கான சப்பாத்திகளை விட கூடுதலாக செய்யுங்கள்.
மறுப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் விதிகள் பாரம்பரிய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் அறிவியல் தகவலால் ஆதரிக்கப்படவில்லை.



Click it and Unblock the Notifications

