Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
இந்தியாவின் சிறந்த காவல் துறை பட்டியலில் தமிழ்நாடு காவல் துறை எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
Top 10 Indian States With Best Police Force: உலகம் முழுக்க மக்களை பாதுகாக்கும் முக்கிய வேலையை அந்தந்த நாட்டின் காவல்துறையினர் கவனித்துக் கொள்கின்றனர். இந்தியாவில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் காவல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
140 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கும் இந்தியாவில் சட்ட ஒழுங்கை பராமரிப்பதும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒன்றிய அரசும், மாநில அரசும் தங்களால் முடிந்தவரை சட்ட ஒழுங்கை பராமரிக்க முயலுகின்றன.

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் மேம்பட்ட தொழில்நுட்பம், மேம்பட்ட பயிற்சி மற்றும் குடிமக்களை பாதுகாக்கும் நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் தங்கள் காவல் துறையை மேம்படுத்த கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, இந்த முயற்சிகள் பொதுமக்கள் மற்றும் காவல்துறை மீதான நம்பிக்கையையும் அதிகரித்துள்ளன.
சில மாநிலங்கள் தங்கள் திறமையான காவல் துறையின் உதவியால் தங்களுடைய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. இந்த மாநிலங்கள் குற்ற வழக்குகளை விரைவாகக் கையாளுதல், வெளிப்படைத்தன்மை மற்றும் சைபர் கிரைம் போன்ற நவீன பிரச்சினைகளைச் சமாளிக்க ஆக்கப்பூர்வமான தீர்வுகளுக்குப் பெயர் பெற்றவையாக உள்ளன. சமூகக் காவல் பணிக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே அதிக ஒத்துழைப்பை ஊக்குவிக்கின்றன.
இந்திய நீதி அறிக்கை
நீதி வழங்குவதன் அடிப்படையில் நாட்டில் சிறந்த காவல்துறையைக் கொண்டிருக்கும் பட்டியலை இந்திய நீதி அறிக்கை(India Justice Report ) வெளியிட்டுள்ளது. வழக்கம்போல இந்த ஆண்டும் இந்த பட்டியலில் தென் மாநிலங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த அறிக்கை நான்கு முக்கிய தூண்களில் மாநிலங்களை மதிப்பிடுகிறது: காவல்துறை, நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் சட்ட உதவி. இந்த நான்கு கூறுகளின் அடிப்படையில் இந்தியாவில் சிறந்த காவல்துறையைக் கொண்ட டாப் 10 மாநிலங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கர்நாடகா
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கர்நாடகா. காவல் துறையின் தொழில் நுட்பம் மற்றும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. கடந்த வருடமும் கர்நாடகாவே முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம் இந்த பட்டியலில் இப்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த அறிக்கையில் ஆந்திர பிரதேச காவல்துறை ஐந்தாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சட்ட ஒழுங்கு பராமரிப்பும், புகார்கள் மீது எடுக்கப்டும் துரித நடவடிக்கையும் இந்த பட்டியலில் ஆந்திரப் பிரதேசத்தை முன்னேற வைத்துள்ளது.
தெலுங்கானா
தெலுங்கானா போன வருடமும், இந்த வருடமும் மூன்றவது இடத்தில் உள்ளது. காவல் துறையின் நிலையான செயல் திறனும், துரித நடவடிக்கையும் தெலுங்கானா காவல் துறையை சிறப்பானதாக மாற்றியுள்ளது.
கேரளா
கடவுளின் தேசமான கேரளாவின் காவல்துறை இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இங்குள்ள குறைவான மக்கள் தொகையும், மக்களின் செயல்பாடுகளும், காவல் துறையின் செயல்திறனும் குற்றங்களை குறைக்க வெகுவாக உதவுகிறது.
தமிழ்நாடு
உலகிலேயே ஸ்காட்லாந்து காவல்துறைக்கு அடுத்தது தமிழ்நாடு காவல் துறை என்று நாம் கூறினாலும் இந்த பட்டியலில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில்தான் உள்ளது. குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க காட்டப்படும் மெத்தனமும், பொதுமக்களுக்கு காவல் துறை மீதுள்ள நம்பிக்கையின்மையுமே இதற்கு காரணம். இருப்பினும், தொழில் நுட்ப வளர்ச்சி, பெண்களை பாதுகாக்கும் ஆப்கள் போன்றவை கணிசமாக உதவுகின்றன.
சத்தீஸ்கர்
நக்சல் செயல்பாடுகள் அதிகமுள்ள சத்தீஸ்கரில் தற்போது சட்ட ஒழுங்கு பராமரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 9 வது இடத்திலிருந்த சத்தீஸ்கர் இப்போது 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம் சிறிது முன்னேற்றம் அடைந்து, கடந்த ஆண்டு 8-வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. காவல் துறையின் தொழில் நுட்ப வளர்ச்சியும், குற்றப் பத்திரிகை தாக்கலும் இப்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
ஒடிசா
ஒடிசா சட்ட ஒழுங்கு மற்றும் கண்காணிப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளது, 2022 இல் 11 வது இடத்திலிருந்து 2025 இல் 8 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பஞ்சாப்
கடந்த அறிக்கையில் 10-வது இடத்திலிருந்த பஞ்சாப் இப்போதும் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கு சட்ட ஒழுங்கு தற்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியுள்ளது.
மஹாராஷ்டிரா
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமும், பொருளாதார தலைநகரமுமான மஹாராஷ்ட்டிரா சட்ட ஒழுங்கு மற்றும் காவல் துறையில் பத்தாவது இடத்தில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் கடந்த அறிக்கையில் 12 வது இடத்திலிருந்த மகாராஷ்டிரா இப்போது 10 வது இடத்திற்கு முன்னேறி இருப்பது சற்று ஆறுதலானது.



Click it and Unblock the Notifications

