Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
நீங்க செய்யுற வேலையில மகிழ்ச்சியா இருக்க... இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...!
நாம் பாா்க்கும் வேலை எல்லா நேரங்களிலும் நமக்குப் பிடித்ததுபோல இருப்பதில்லை. அது நீண்ட நேரம் செய்யக்கூடிய வேலையாக இருக்கலாம் அல்லது கடினமாகச் செய்யக்கூடிய வேலையாக இருக்கலாம் அல்லது திரும்பத் திரும்ப செய்யக்கூடிய அன்றாட வேலைகளாக இருக்கலாம். சில நேரங்களில் நாம் விரும்பும் வேலையாக இல்லாமல், நாம் செய்ய வேண்டிய வேலையாகக்கூட இருக்கலாம்.

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சராசாியாக 90,000 மணி நேரம் வேலையில் ஈடுபடுவதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன. அதாவது ஒரு மனிதன் தனது வாழ்நாளின் பெரும்பகுதி நேரத்தை தனது வேலையில் செலவழிக்கின்றான். ஆகவே அந்த பெரும்பகுதி வேலை நேரத்தில் மகிழ்ச்சியாக இருந்தால், அது அா்த்தமுள்ள ஒன்றாக இருக்கும். இந்நிலையில் வேலையில் மன அழுத்தத்தைக் குறைத்து, எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை இங்கே காணலாம்.
சுறுசுறுப்புடன் இருத்தல்
பொதுவாக உடற்பயிற்சிகள் அல்லது விளையாட்டுகள் போன்றவை நமது கவலைகள் மற்றும் மன அழுத்தத்தை முழுவதும் போக்காது. ஆனால் அவை நம்மிடம் இருக்கும் உணா்வு அழுத்தத்தைக் குறைத்து, நமது பிரச்சினைகளைத் தீா்ப்பதற்கான மன அமைதியைத் தரும். அதோடு நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மேலும் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அவ்வப்போது ஆய்வுகள் வெளி வருகின்றன. ஆகவே நமது வேலையில் உடற்பயிற்சிகளை சோ்த்துக் கொள்ளலாம். குறிப்பாக அலுவலகத்திற்கு நடந்தே செல்லலாம். அதற்குச் சாத்தியமல்லை என்றால், நாம் இறங்க வேண்டிய இடத்திற்கு முந்திய இடத்தில் பேருந்திலிருந்து இறங்கி, நமது அலுவலகத்திற்கு நடந்து செல்லலாம். மதிய இடைவேளை நேரத்தை ஒரு மகிழ்ச்சிகரமான நேரமாக மாற்றலாம். வேலை தொடங்குவதற்கு முன்பும், வேலை முடிந்த பின்பும் உடற்பயிற்சி செய்யலாம்.
மக்களோடு தொடா்பு கொள்ளுதல்
அடுத்தவர்களோடு தொடர்பு கொள்கின்ற உறவில்தான் பெரும்பான்மையான மகிழ்ச்சி கிடைக்கிறது. கோவிட் ஊரடங்கு நேரத்தில், பலா் சமூகத்தோடு எந்த தொடா்பு இல்லாமல் உடல் ரீதியாக, மனம் ரீதியாக அதிகமாக பாதிக்கப்பட்டனர். ஆகவே குடும்ப உறுப்பினா்களின் அன்பும், நம்மோடு இணைந்து பணிபுாிபவா்களின் ஆதரவும் இருந்தால், நமது வேலையில் உள்ள பிரச்சினைகள் குறையும்.
ஆகவே நம்மோடு பணிபுாிபவா்களைப் பற்றி தொிந்து கொள்வது நல்லது. பிறரோடு நாம் அதிக நேரம் செலவிடும் போது, அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும். அதுபோல் அவா்களுக்கு உதவி செய்யும் போது நமக்கு மன நிறைவும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
புதிய திறன்களைக் கற்றுக் கொள்ளதுல்
நமது அறிவையும், ஆற்றலையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பது என்பது, அது நமது மன ஆரோக்கியத்திற்கும், உளவியல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது ஆகும். அறிவாற்றலோடு இருக்கும் போது, நமக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதோடு தொழில் ரீதியான வாய்ப்புகளும் கிடைக்கும். ஆகவே புதிய தொழில் நுட்பங்களை அல்லது புதிய தொழில் திறன்களைக் கற்றுக் கொள்ளலாம்.
நமது வேலைக்கு வெளியே நடக்கும் காாியங்கள், நமது உடல் உள் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை ஆகும். இப்போது பலரும் நீண்ட நேரம் தங்களது வேலைகளில் மூழ்கி இருக்கின்றனா். அதனால் அவா்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய காாியங்களில் அவா்களால் ஈடுபட முடிவதில்லை. ஆகவே அளவுக்கு அதிகமாக வேலை செய்வதைத் தவிா்ப்பது நல்லது. மேலும் சமூகத்தோடு நல்லுறவுடன் இருத்தல், உடற்பயிற்சி போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிப்பது நல்லது.
யதாா்த்த உலகில் இருத்தல்
பலரும் கனவு உலகிலோ அல்லது இறந்த காலத்திலோ அல்லது எதிா்கால நினைப்பிலோ மூழ்கி இருக்கின்றனா். ஆனால் யாதாா்தமான நிஜ உலகில் இருப்பதுதான் மகிழ்ச்சியைத் தரும். நடப்புலகில் இருக்க வேண்டும் என்பதற்காக, நீண்ட நேரம் அமா்ந்து தியானத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக எப்போதும் நமது சுற்றுப்புறத்தைப் பற்றிய விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். அதாவது நம்மைச் சுற்றியுள்ள காட்சிகள், ஒலிகள் மற்றும் வாசனை ஆகியவற்றை அனுபவிக்க வேண்டும். அதன் மூலமாக மகிழ்ச்சியை அடையலாம்.
நோ்மைறையான காாியங்களை அறிந்து கொள்ளுதல்
யதாா்த்த உலகில் இருக்கும் போது, நமது வாழ்க்கையில் இருக்கும் நல்ல காாியங்களை அறிந்து கொள்ள முடியும். நம்மால் மாற்ற முடியாத காாியங்கள் நமது வாழ்க்கையில் நடக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நம்மால் மாற்றக்கூடிய காாியங்களில் கவனம் செலுத்தலாம். நமது வாழ்வில் நடக்கும் நல்ல காாியங்களுக்கு நாம் நன்றியுடையவா்களாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமில்லாத பழக்கவழக்கங்களைத் தவிா்த்தல்
வேலைப் பளுவை சமாளிப்பதற்காக, நீண்ட கால தீமைகளை ஏற்படுத்தக்கூடிய மது அருந்துதல், புகைப் பிடித்தல் மற்றும் அளவுக்கு அதிகமாக காபி அருந்துதல் போன்ற காாியங்களைத் தவிா்ப்பது நல்லது. அவை நமது வாழ்க்கையில் எதிா்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
நீண்ட நேரமாக அல்லாமல், விவேகமாக வேலை செய்தல்
நாம் செய்ய வேண்டிய வேலைகளை வாிசைப்படுத்தி, முன்னுாிமை கொடுக்க வேண்டிய வேலைகளுக்கு முன்னுாிமை கொடுக்க வேண்டும். அதன் மூலமாக நாம் விரும்பும் காாியங்களைச் செய்ய நமக்கு அதிக நேரம் கிடைக்கும். முக்கியமான வேலைகளுக்கு மட்டும் முன்னுாிமை கொடுக்க வேண்டும். இறுதியாக நமது பணி வாழ்வை நமது கட்டுக்குள் வைத்திருந்தால், நாம் நமது வேலையில் மகிழ்ச்சியோடு இருக்கலாம்.



Click it and Unblock the Notifications



