Latest Updates
-
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும்
இந்தியாவின் இந்த கிராமம்தான் ராஜநாகங்களின் தலைநகரமாம்... இங்கு மனிதர்களை விட பாம்புகள்தான் அதிகமாம்...!
உலகின் மிகவும் மர்மமான உயிரினங்களில் பாம்புகள் மிகவும் முக்கியமானதாகும். விஷத்தன்மை வாய்ந்த இந்த உயிரினங்கள் பல கலாச்சாரங்களின் ஒரு பகுதியாக உள்ளது. சில கலாச்சாரங்களில், இந்த உயிரினங்கள் தீமையின் சின்னமாக இருக்கின்றன, சில கலாச்சாரங்களில் அவை கடவுள்களைப் போல வணங்கப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் இந்த உயிரினங்களை தெய்வமாக வணங்குகிறார்கள். குறிப்பாக நாகப்பாம்புகள் இந்து புராணங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இந்திய நாகப்பாம்பு இந்து மதத்தின் முக்கியக் கடவுள்களான சிவன் மற்றும் விஷ்ணுவுடன் தொடர்புடையது.

பாம்புகளை வழிபடுவதற்கு இந்துக்கள் நாக பஞ்சமியைக் கொண்டாடுகிறார்கள். இந்த விஷ பாம்புகள் கடவுளின் அம்சமாக வழிபடபட்டாலும் இயற்கையின் ஆபத்தான உயிரினங்களில் இவை முக்கியமானதாககும், மேலும் அவை தங்கள் இரையின் மீது எந்த கருணையும் காட்டுவதில்லை. அது தங்களை வழிபாடுபவர்களாக இருந்தாலும் சரி.
புராணங்கள் மற்றும் வழிபாடுகளைத் தவிர, இந்தியாவில் அதிக பாம்புகளின் எண்ணிக்கைக்கு பெயர் பெற்ற சில பகுதிகள் உள்ளன. அப்படி ஒரு ஆபத்தான ஒரு இடம் கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இந்த ஆபத்தான இடத்தைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அகும்பே கிராமம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,700 அடி உயரத்தில் 3 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட இந்த சிறிய கிராமம், அதன் வானிலை மற்றும் அதிக மழைப்பொழிவு காரணமாக இது "தெற்கின் சிரபுஞ்சி" என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் சுமார் 600 பேர் வசிக்கின்றனர். அகும்பே கிராமம் அடர்ந்த மழைக்காடுகள், அழகான நீர்வீழ்ச்சிகள் மற்றும் பிரமாண்டமான மலைகளால் சூழப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இயற்கையை விரும்புபவர்களுக்கு இந்த இடத்தை சொர்க்கமாக மாற்றுகிறது.
இயற்கை காட்சிகள் மட்டுமின்றி இந்த கிராமத்தில் Meliola agumbensis, Tarenna agumbensis, Hygromaster agumbensis மற்றும் Dactylaria agumbensis போன்ற தனித்துவமான மற்றும் அரிதான பூஞ்சைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் இந்த கிராமத்தின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.
ராஜநாகங்களின் தலைநகரம்
அகும்பே கிராமம் ராஜநாகத்தின் தாயகமாக விளங்குகிறது, மேலும் இது இப்பகுதியின் முதன்மையான இனமாக உள்ளது. இந்த கிராமத்தில் பிரபல பாம்புகள் ஆராச்சியாளர் பத்மஸ்ரீ ரோமுலஸ் விட்டேக்கர் அகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலையத்தை (ARRS) நிறுவினார். ராஜநாகங்கள் குறித்த நாட்டின் முதல் ரேடியோ டெலிமெட்ரி திட்டம் இங்கு தொடங்கப்பட்டது.
ஹெர்பெட்டாலஜிஸ்ட்கள் பொதுவாக உயிரினங்களை தொந்தரவு செய்யாமல் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களிலேயே அவற்றை கண்காணிக்கிறார்கள். அவர்கள் அவற்றின் நடத்தை, உடலியல், மரபியல் மற்றும் பரிணாம வளர்ச்சியையும் கவனிக்கிறார்கள். குறிப்பாக அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதில் ஹெர்பெட்டாலஜிஸ்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
ராஜநாகங்களின் முக்கியத்துவம்
உலகின் மிக நீளமான விஷப் பாம்பான ராஜ நாகம், சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சிறந்த வேட்டையாடுபவராக, இது முக்கியமாக கிரெய்ட்ஸ் மற்றும் நாகப்பாம்புகள் போன்ற ஆபத்தான பிற பாம்புகளைக் கூட உண்கிறது. இது பாம்புகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது, இது ஆரோக்கியமான உணவுச் சங்கிலியைப் பராமரிக்க உதவுகிறது. ராஜநாகம் போன்ற வேட்டையாடுபவர்கள் இல்லையெனில், மற்ற விஷ பாம்பு இனங்கள் மிக விரைவாக எண்ணிக்கையில் வளரக்கூடும், இது இருப்பிட பற்றாக்குறை, நோய் பரவுதல் அல்லது பிற விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications
