Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
புதன் கிழமை இந்த விஷயங்களை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க அதிர்ஷ்டத்தோட ஆயுளும் குறையுமாம்...!
ஜோதிடத்தின் படி வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. எனவே அந்தந்த நாட்களில் அதற்குரிய கிரகத்தை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும்.
அதேபோல குறிப்பிட்ட நாட்களில் நீங்கள் செய்யும் செயல்கள் அந்த நாளுக்குரிய கிரகத்தை கோபப்படுத்தும். ' பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது ' என்று கூறப்படும் புதன் கிழமை வார நாட்களில் மிகவும் முக்கியமான நாளாகும்.

இந்த நாளில் நீங்கள் செய்யும் சில தவறான செயல்கள் உங்களின் நல்வாழ்க்கையையும், அதிர்ஷ்டத்தையும் பாதிக்கும். இந்த பதவில் புதன் கிழமை நீங்கள் செய்யக்கூடாத செயல்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
பெண்களை அவமதிக்கக்கூடாது
புதன் கிழமை பெண்களை ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. உங்கள் மனைவி, சகோதரி மற்றும் மகள் போன்றவர்களை அவமதிக்கக்கூடாது. இந்த நாளில் பெண்களுக்கு பச்சை நிறத்துணிகள் மற்றும் வளையல் போன்றவற்றை கொடுக்கலாம்.
கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது
புதன் கிழமை கடன் வாங்குவதோ அல்லது கொடுப்பதோ மிகவும் துரதிர்ஷ்டமான செயலாக கருதப்படுகிறது. இது உங்களுக்கு பொருளாதாரரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும். இந்த நாளில் கடன் வாங்குவது உங்கள் நிதிரீதியான இழப்பை ஏற்படுத்தும்.
மோசமான வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது
புதன் கிழமை மோசமான வார்த்தைகளை உபயோகிப்பது உங்கள் ஜாதகத்தில் புதனின் நிலையை பலவீனமாக்கும். எனவே இந்த நாளில் மோசமான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.இதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிதிரீதியான பின்னடைவும், சிரமங்களும் ஏற்படும்.
முதலீடுகள் கூடாது
புதன் கிழமைகளில் புதிய முதலீடு தொடங்குவது மிகப்பெரிய நஷ்டத்திற்கு வழிவகுக்கும். பொருளாதாரரீதியான பின்னடைவைத் தவிர்க்க புதன் கிழமைகளில் முதலீட்டை தவிர்க்கவும். வெள்ளிக்கிழமை புதிய முதலீட்டைத் தொடங்குவதற்கான சிறந்த நாளாகும்.
திருநங்கைகளை அவமதிக்கக்கூடாது
புதன் கிழமை திருநங்கைகளை ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. மாறாக இந்த நாளில் அவர்களின் ஆசீர்வாதம் பெறுவது உங்களுக்கு நன்மைகளை அளிக்கும். இந்த நாளில் அவர்களுக்கு அவர்களுக்கு தானம் கொடுப்பது சிறந்தது.
மேற்குதிசை பயணம் கூடாது
புதன் கிழமையன்று மேற்கு திசை பயணம் செய்யக்கூடாது. இந்த நாளில் விநாயகரை வழிபடுவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
பெண்கள் கருப்பு உடை அணியக்கூடாது
கணவரின் நீண்ட ஆயுளுக்கு பெண்கள் இந்த நாளில் கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது, இந்த நாளில் கருப்பு நிற அணிகலன்களை அணிவதும் தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். இந்த நாளில் பச்சை நிற ஆடையணிவது பெண்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications
