Latest Updates
-
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஆசிரியர் தினம் பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான உண்மைகள்!
Teacher's Day 2023 In Tamil: ஆசிரியர்கள் நம் வாழ்க்கையை சரியான வழியில் வழி நடத்துவதில் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றனர். இந்த ஆசிரியர் தினத்தில் அவர்களுக்கு மரியாதையையும் அன்பையும் வழங்க வேண்டும். அவர்களின் பெருமையை இந்த நாட்டிற்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றனர். அவர் ஒரு சிறந்த ஆசிரியர் ஆவார். அவர் பாரத ரத்னா விருது பெற்ற கல்வியாளர் ஆவார்.

அவர் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சரி வாங்க ஆசிரியர் தினத்தை பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான உண்மைகள் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பெருமைகள்
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் ஒரு இந்தியக் குடியரசுத் தலைவராக சிறந்து விளங்கியுள்ளார். இவர் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி ஆவார். முதல் துணை ஜனாதிபதியாகவும் திகழ்ந்து உள்ளார். இவர் சிறந்த தத்துவவாதி மற்றும் அரசியல்வாதி ஆவார். இவரது எழுத்து அடிக்கடி மேற்கத்திய மற்றும் இந்திய ஆதாரங்களை உள்ளடக்கியதாக இருந்தது.
இதன் விளைவாக, மேற்கில் இந்து மதத்தின் பிரதிநிதியாக ராதாகிருஷ்ணன் கல்வி வட்டாரங்களில் பாராட்டைப் பெற்றவர். இவர் 1954 ல் சிறந்த பாரத ரத்னா விருதையும் பெற்றார். இவர் 1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி பிறந்தார். அந்த தினத்தையே ஆசிரியர் தினமாக அனைவரும் கொண்டாடுகிறோம்.
ஆசிரியர் தினத்தை பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான உண்மைகள்
சீனாவின் ஆசிரியர் தினம்
சீனாவின் தேசிய மத்திய பல்கலைக்கழகத்தில், ஆசிரியர் தினம் 1931 ல் தொடங்கப்பட்டது. 1932 இல் தான் சீன அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கியது.பின்னர் 1939 இல், கன்பூசியஸின் பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியை ஆசிரியர் தினமாக அறிவித்தனர். இருப்பினும் இந்த அறிவிப்பு 1951 ல் ரத்து செய்யப்பட்டது. பிறகு 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி ஆசிரியர் தினமாக அறிவிக்கப்பட்டது.
சர்வதேச ஆசிரியர் தினம்
சர்வதேச ஆசிரியர் தினம் என்பது அக்டோபர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதே வேளையில் ஒவ்வொரு நாடும் தனித் தனியாக ஆசிரியர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.யுனெஸ்கோ அக்டோபர் 5-ம் தேதியை சர்வதேச ஆசிரியர் தினமாக அறிவித்தது.
1994 முதல் மக்கள் இந்த தினத்தை சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றனர். ஆசிரியர்களின் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காகவும், எதிர்கால சந்ததியினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆசிரியர்களின் பங்கு மிகப் பெரியது என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது தொடங்கப்பட்டது.
அமெரிக்கா மற்றும் தாய்லாந்தில் ஆசிரியர் தினம்
மே மாதத்தின் முதல் முழு வாரத்தின் செவ்வாய்கிழமையன்று அமெரிக்காவில் ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆசிரியர் தினம் வாரம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தாய்லாந்தில், தேசிய ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. 1957 இல், தொடக்க ஆசிரியர் தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளிகளில், இந்த நாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
ஆசிரியர் மீதான மாணவர்களின் அன்பு
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மீது மாணவர்கள் எப்பொழுதும் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டு இருப்பர். ஒரு நாள் ராதாகிருஷ்ணன் அவர்கள் கல்கத்தாவில் பேராசிரியராகப் பொறுப்பேற்கச் சென்ற போது அவருடைய பக்திமிக்க மாணவர்கள் அனைவரும் மைசூர் பல்கலைக்கழகத்தில் இருந்து ரயில் நிலையம் வரை மலர் வண்டியில் அவரை உட்கார வைத்து இழுத்துச் சென்றனர். அந்தளவுக்கு அவர் மீது அன்பும் மரியாதையும் அவர்கள் வைத்திருந்தனர்.
இஸ்லாமிய நாடுகளில் ஆசிரியர் தினம்
ஓமன், சிரியா, எகிப்து, லிபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன், சவுதி அரேபியா, அல்ஜீரியா, மொராக்கோ மற்றும் பல இஸ்லாமிய நாடுகளில் பிப்ரவரி 28 ஆம் தேதியை ஆசிரியர் தினமாக அங்கீகரித்துள்ளனர்.
சிறந்த ஆசிரியர் விருது
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு கல்வித் துறையில் அவர்கள் அளித்த பங்கிற்காக ஒவ்வொரு வருடமும் பாராட்டப்படுவார்கள். கல்வித் துறையில் இருந்து அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. நம் இந்திய அரசு இந்த விருதை வழங்கி கெளரவிக்கின்றனர்.



Click it and Unblock the Notifications