மதராஸ் ஏன் தமிழ்நாடு ஆனது? தமிழ் மொழி மற்றும் கலச்சாரம் பற்றி உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?

Tamilnadu Formation Day In Tamil: தமிழர்கள் என்பதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம். ஏனெனில், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் என தமிழ்நாடு பல தனிச்சிறப்புக்களை கொண்டுள்ளது. தமிழ்நாடு நாள் என்பது தமிழருக்கென்று தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும்.

இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்த நிலையில் அதை இந்திய ஒன்றிய அரசு ஏற்க மறுத்து வந்தது. ஆனால் இக்கோரிக்கை முதலில் ஆந்திர மக்களால் கடுமையாக செயல்படுத்தப்பட்டது. இதனால், நாடு முழுவதும் பல கலவரங்கள் ஏற்பட்டன. இந்திய ஒன்றிய அரசு வேறு வழியின்றி 1 நவம்பர் 1956-இல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது.

Tamilnadu Formation Day: History, Language, Tradition, Culture In Tamil

இதன்படி, சென்னை மாநிலத்திலிருந்து மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. சென்னை மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளும், திருவிதாங்கூரின் தமிழ் பகுதிகளும் இணைக்கப்பட்டு சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டது.

மொழிவாரி மாநிலங்கள் பிறக்கப்பட்டத்தை தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 18 ஜூலை 1967 அன்று, மதராஸ் மாநிலம் என்பதை அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தது. இதை செய்தது, அன்றைய முதலமைச்சரான பேரறிஞர் அண்ணா.

சென்னை மாநிலத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு 25 அக்டோபர் 2019 அன்று அரசாணை வெளியிட்டது. அதன்படி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ரூ 10 இலட்சம் ஒதுக்கப்பட்டு 2019 நவம்பர் முதல் நாளில் அரசு விழா கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் 2021 இல் புதியதாக பொறுபேற்ற மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்ற மாற்றுச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக, ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதை பல அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்த்தனர்.

தமிழர்களின் கலாச்சாரம்

தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழ் கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்களின் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவியலை வெளிப்படுத்துகிறது.

தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, தமிழ் இலக்கிய படைப்புகள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும். தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்ட, திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்திற்கு உட்பட்டு நிற்கும் ஓர் இயங்கியல் பண்பாடாகவே உள்ளது.

தாய் மொழியான தமிழ்மொழி

மிகவும் பழமையான மற்றும் தொன்மையான மொழியான தமிழ் மொழி தமிழர்களின் தாயமொழியாக உள்ளது. தமிழ் மொழி, உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

1997 ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் ஒரு மொழியாக தமிழ் மொழி உள்ளது. ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் தமிழ் மொழி உள்ளது. பல்வேறு இலக்கியங்களும் நூல்களும் தமிழ் எழுதப்படுள்ளன. அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியானது, செம்மொழியாக 2004 அக்டோபர் 12 இல் இந்திய அரசு அறிவித்தது.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரியம்

தமிழ்நாட்டின் கலாச்சாரம் பண்டைய மரபுகள், கலை, இசை மற்றும் இலக்கியங்களின் கலவையாகும். தமிழ்நாட்டு மக்கள் தங்கள் திராவிட கலாச்சாரத்தில் பெருமை கொள்கிறார்கள். இது அதன் தனித்துவமான மொழி, தமிழ் மற்றும் தனித்துவமான கட்டிடக்கலை, கலை மற்றும் நடனம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், குறிப்பாக மதுரைக்கு அருகிலுள்ள அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் பண்டிகையின் போது ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

Story first published: Tuesday, July 18, 2023, 18:45 [IST]
Desktop Bottom Promotion