Latest Updates
-
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
50 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணம் அதிகம் சேரும்...
Akhand Samrajya Rajyoga After 50 Years: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இயக்கங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், 12 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைந்தார். சூரியன் சிம்ம ராசிக்குள் நுழைந்ததால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதே வேளையில் நவாம்ச ஜாதகத்தில் சூரியன் உயர்ந்த நிலையில் உள்ளார். இதனால் அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகமானது 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திடீர் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைம் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இக்காலத்தில் நம்பிக்கை அதிகம் இருக்கும். திருமணமான புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். முக்கியமாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படக்கூடும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், அவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும்.
மேஷம்
அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் பல விஷயங்களில் சாதகமான முடிவுகளைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எந்த ஒரு காரியத்திலும் நல்ல வெற்றியைக் காண்பார்கள். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். திடீர் பண வரவு கிடைக்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். முக்கியாக தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகம் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகமானது மங்களகரமாக இருக்கும். பல முக்கிய கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால், இக்காலத்தில் பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் இக்காலத்தில் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல பண ஆதாயத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாகனம், சொத்தும் வாங்கும் வாய்ப்புக்களும் உள்ளன. முக்கியமாக இக்காலத்தில் வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல பண ஆதாயத்தைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications