Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்க்கும் அதிசய இந்திய கிராமம்... இங்கு பாம்புகளுக்கென்று தனிக்கோவிலே உள்ளதாம்...!
மகாராஷ்டிராவின் எல்லை கோட்டு மூலையில் இருக்கும் ஒரு கிராமத்தில் வழக்கமான செல்லப்பிராணிகள் வளர்க்காமல், அதற்கு பதிலாக மிகவும் அசாதாரணமான மற்றும் ஆபத்தான ஒன்றை வளர்க்கிறார்கள். ஆபத்தான ஒன்று என்றதும் சிங்கம், புலி, மற்றும் சிறுத்தை என யோசிக்காதீர்கள். அது ஊர்வன வகையை சேர்த்த ஒன்று. கண்டுபிடித்து விட்டீர்களா? ஆம் நாகப்பாம்புகள் தான் அவர்களின் செல்ல பிராணிகள்.
அந்த கிராமத்தின் பெயர் ஷெட்பால். இங்கு பாம்புகள் வெறும் ஊர்வன மட்டுமல்ல. இவற்றை மரியாதைக்குரிய விருந்தினர்களாகவும் கருதுகிறார்கள். இங்கு நாகப்பாம்புகள் வீடுகளுக்குள் வரவேற்கப்படுவதோடு தங்குமிடமும் அளிக்கப்படுகிறது. மேலும் இவை புனித சின்னங்களாக மதிக்கப்படுகின்றன. இது பல தலைமுறைகளாகவே வெளியாட்களை குழப்பத்தில் ஆழ்த்த கூடிய ஆழமான கலாச்சாரமாக உள்ளது.

இந்தியாவின் பாம்பு கிராமம்
ஷெட்பாலில், நாய்கள் குரைக்கும் சத்தோமோ அல்லது நெருப்பின் அருகே பூனைகள் ஓய்வெடுத்து கொண்டிருப்பதையோ உங்களால் பார்க்க முடியாது. ஆனால் வீடுகள், வயல்கள் மற்றும் படுக்கையறைகளுக்குள் கூட வசதியாக நாகப்பாம்புகள் கூடு கட்டியிருப்பதை பார்க்கலாம். இந்த கிராமம் "இந்தியாவின் பாம்பு கிராமம்" என அழைக்கப்படுகிறது. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
வீடுகளின் செல்லப்பிராணிகள்
கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் இந்த ஆபத்தான உயிரினத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கிராம மக்களின் இடங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்கிறது. இங்கு குழந்தைகள் கூட கடிக்கும் என்கிற பயம் இல்லாமல் நாகப்பாம்புகளுடன் விளையாடுகிறார்கள் என்பது மிகவும் சுவாரஸ்யமான விஷயம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு போதும் பாம்புகளால் ஒருபோதும் பாதிக்கப்படவில்லை, இது இந்த இடத்தைச் சுற்றியுள்ள மர்மத்தை பற்றி யோசிக்க வைக்கிறது.
பாம்புகளின் கோவில்
இந்த தனித்துவமான பாரம்பரியம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்து வந்து கொண்டிருக்கிறது. கிராம மக்கள் நாகப்பாம்புகள் இந்து மதத்தில் மிகவும் மதிக்கப்படும் கடவுள்களில் ஒருவருனான சிவபெருமானின் அம்சம் என்றும், அவர் எப்போதும் கழுத்தில் பாம்புடனே இருப்பதாகவும் நம்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பாம்புகள் வெறும் ஊர்வன மட்டுமல்ல, வழிபாட்டிற்கும் மரியாதைக்கும் தகுதியான தெய்வீக உயிரினங்கள் கருதப்படுகின்றன. பாம்புகளுக்கு என்றே அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் இந்த கிராமத்தில் இருக்கிறது. இங்கு பாம்புகளை கௌரவிக்க சடங்குகள் செய்யப்படுகின்றன.
பாம்பு யாரையும் கடிக்காத அதிசயம்
இந்த ஆபத்தான உயிரினங்களுக்கு அருகில் இருந்தாலும், கிராம மக்களை பாம்பு கடித்ததாக ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. இதற்கு அவர்களின் பக்தி மற்றும் நாகப்பாம்புகளுடன் பகிர்ந்து கொள்ளும் பரஸ்பர மரியாதை தான் காரணம் என அவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், நாகப்பாம்புகளின் நட்பு என்பது வெளியாட்களுக்கு சரிவராது என்பதால், பார்வையாளர்கள் பாம்புகளுடன் நட்பை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.
பாம்புகளுடனான ஒற்றுமை
பாம்புகளும் மனிதர்களும் கிட்டத்தட்ட புராண ஒற்றுமையுடன் இணைந்து வாழும் கிராமமான ஷெட்பால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஹெர்பெட்டாலஜிஸ்டுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இருந்தாலும் நாகப்பாம்புகளுடன் சேர்ந்து வாழ்வதில் சவால்கள் இல்லாமல் இல்லை. கிராம மக்கள் ஒவ்வொரு செயலிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பாம்புகளுக்கு போதுமான அளவு உணவளிக்கப்படுவதையும் அவை நோயிலிருந்து பாதுகாக்கப்படுவதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஷெட்பாலின் தனித்துவத்தை உணர்ந்து, அரசாங்கம் அதன் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கிறது. இந்த கிராமத்தை ஒரு சுற்றுலா தலமாக மேம்படுத்தவும் திட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் கிராம மக்களுக்கும் அவர்களின் பாம்பு நண்பர்களை பாதுகாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
