சனி சந்திர சேர்க்கையால் உருவாகும் விஷ யோகம்: ஆகஸ்ட் 30 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..

Vish Yoga On 30 August 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களில் மிகவும் கொடிய கிரகமாக சனி கருதப்படுகிறது. இதற்கு காரணம் சனி பகவான் பாரபட்சம் பாராமல் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார்.

ஒருவர் தீய செயல்களை செய்தால், அதற்கான தண்டனையை நிச்சயம் சனி பகவான் வழங்குவார். எனவே சனி பகவான் என்றாலே பலருக்கும் மனதில் பயம் இருக்கும். இந்த சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.

Saturn Moon Make Vish Yoga On 30 August 2023: These Zodiac Signs Should Be Careful In Tamil

அப்படி சனியின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் உள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சந்திரன் கும்ப ராசிக்குள் நுழைகிறார்.

இதனால் சனி-சந்திரன் சேர்க்கை கும்ப ராசியில் நிகழவுள்ளது. இவ்விரு கிரகங்களின் சேர்க்கையின் போது அசுப யோகமான விஷ யோகம் உருவாகவுள்ளது. இந்த விஷ யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி, சந்திரன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இக்காலத்தில் பணிபுரிபவர்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில உடன் வேலை செய்வோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனால் அந்நபருடனான உறவு மோசமாகும். தன்னம்பிக்கை சற்று குறைந்து இருக்கும். எந்த ஒரு வேலை செய்தாலும் ஒருவித மன குழப்பத்துடனேயே இருக்க நேரிடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.

கடகம்

கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி, சந்திரன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக இக்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும். எப்பேற்பட்ட பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள். மேலும் இக்காலத்தில் மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்க நேரிடும்.

கும்பம்

கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி, சந்திரன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இக்காலத்தில் சற்று அதிக பதட்டத்துடன் இருப்பீர்கள். உடல் மற்றும் மன ரீதியான அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எந்த வேலையை செய்தாலும், அதில் தடையை சந்திக்க நேரிடும். இதனால் மன வருத்தமடையக்கூடும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை சற்று மோசமாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும். எனவே சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, August 18, 2023, 9:25 [IST]
Desktop Bottom Promotion