Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
8 லட்சம் கோடி இருந்தாலும் ரத்தன் டாடா பெயர் ஏன் உலக பணக்காரர் பட்டியலில் இருந்ததேயில்லை தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரும், மிகச்சிறந்த மனிதருமான ரத்தன் டாடா நம்மை விட்டு பிரிந்துவிட்டார். இது இந்திய தொழில் துறைக்கு மட்டுமல்ல இந்திய மக்களுக்கே பேரிழப்பாகும். நேற்று இரவு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரத்தன் டாடா அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், அவருக்கு வயது 86.
உலகிலேயே பெரிய பணக்காரர் யார் என்றால் அனைவரும் எலான் மஸ்க், ஜெப் பிசோஸ் போன்றவர்களின் பெயர்களைக் கூறுவார்கள். அதேபோல இந்தியாவில் பணக்காரர் என்றால் அனைவரும் முகேஷ் அம்பானியைத்தான் கூறுவார்கள். ரத்தன் டாடா எப்போதும் ஒரு உலக பணக்காரராக கருதப்படவில்லை. ஆனால் ரத்தன் டாடா பற்றிய உண்மைத் தெரிந்தால் இந்த பட்டியல் வேறு மாதிரி இருக்கும்.

ரத்தன் டாடா சந்தேகத்திற்கு இடமின்றி நம் நாட்டில் மிகவும் பிரியமான மற்றும் மரியாதைக்குரிய நபர்களில் ஒருவர். அவரது விதிவிலக்கான வணிக புத்திசாலித்தனம் மற்றும் தாராளமான குணத்தாலும், அவர் புகழ் அல்லது வெற்றியால் ஆணவம் தலைக்கேறாத ஒரு உண்மையான மனிதாபிமானியாக விளங்குகிறார்.
சமூக ஊடகங்களில் அதிக மக்களால் பின்தொடரும் இந்திய தொழிலதிபர் என்ற போதிலும், நாட்டின் பணக்கார தனிநபர்கள் பட்டியலில் ரத்தன் டாடா இல்லாதது குறிப்பிடத்தக்கது. IIFL Wealth Hurun India Rich List 2022 இன் படி, அவர் 3,800 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 421வது இடத்தைப் பிடித்துள்ளார். 3,500 கோடியுடன் அவர் 2021 ஆம் ஆண்டு 433வது இடத்தில் இருந்தார். அவரது செல்வம் முதன்மையாக டாடா சன்ஸ் நிறுவனத்திடமிருந்து வந்தது, டாடா டிரஸ்ட்கள் மூலம் மக்கள் சேவைகளுக்காக வருமானத்தின் பெரும்பகுதி செலவிடப்படுகிறது.
டாடா சன்ஸ், மூலதன முதலீட்டு நிறுவனம் மற்றும் பல்வேறு டாடா நிறுவனங்கள், டாடா டிரஸ்ட்கள் மூலம் 66 சதவீத லாபத்தை மக்களின் சேவைக்காக ஒதுக்குகிறது. இவை கல்வி, சுகாதாரம், வாழ்வாதார உருவாக்கம் மற்றும் கலாச்சார செறிவூட்டல் ஆகியவற்றில் வெற்றிகரமான முயற்சிகளுக்காக செல்வடிபடுகின்றன.
டாடா குழுமம் மார்ச் 2022 நிலவரப்படி $311 பில்லியன் மொத்த சந்தை மூலதனத்துடன் 29 பொதுவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ளது. உப்பு முதல் தகவல் தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு துறைகளுக்குப் பெயர் பெற்ற டாடா நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக $128 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளன. கிட்டதட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டாடாவின் பல்வேறு நிறுவனங்களில் பணிப்புகிறார்கள்.
டாடா குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்கள்
டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த மதிப்பு கிட்டதட்ட 8 லட்சம் கோடியாகும். டாடா குழுமம் என்பது உலோகங்கள் மற்றும் சுரங்கம், தகவல் தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, வாகனம், ஹோட்டல் நிறுவனங்கள், இரசாயனங்கள், போக்குவரத்து மற்றும் பலவற்றில் வெற்றிக்கொடி நாட்டிய வணிகப் பேரரசு ஆகும். இந்த குழுமம் 29 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களையும் மேலும் பட்டியலிடப்படாத நிறுவனங்களையும் கொண்டுள்ளது.
இத்தனை லாபகரமான நிறுவனங்கள் இருந்தபோதிலும், டாடா சன்ஸ் நிறுவனத்தில் அவர்கள் சம்பாதித்ததில் பெரும்பகுதி டாடா அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் வகையில், ஜம்செட்ஜி டாடா ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார், டாடா குடும்பத்தினர் தங்கள் சொந்த நிறுவனப் பங்குகளை ஒருபோதும் வைத்திருக்கவில்லை. பில் கேட்ஸ் போன்றவர்கள் தொடங்குவதற்கு முன்பே டாடா குடும்பத்தினர் முதன்மையான பரோபகாரர்களாக இருந்துள்ளனர்.
டாடா குழுமத்தில் பல லட்சம் இருந்தாலும் அதில் ரத்தன் டாடா அவருக்கென வைத்துக்கொண்டது சில ஆயிரம் கோடிகள் மட்டுமே. அதனாலதான் உலகப் பணக்காரர் வரிசையில் அவர் எப்போதும் இடம்பெறவில்லை.
ரத்தன் டாடா உலகப் பணக்காரராக இல்லாமல் போகலாம், ஆனால் அவர் நிச்சயமாக மிகச்சிறந்த மனிதர் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கியவர். அவர் மறைந்திருந்தாலும் மக்கள் இதயத்தில் எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.



Click it and Unblock the Notifications












