Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ரத்தன் டாடா அவரை அவமதித்த ஃபோர்டு நிறுவனத்தை எப்படி பழிவாங்கினார் தெரியுமா? சாதனைனா இப்படித்தான் இருக்கணும்...
இந்திய தொழில்துறையின் அடையாளம், பரோபகாரர், அன்பான தேசியத் தலைவர் மற்றும் மக்கள் விரும்பும் கார்ப்பரேட் முதலாளி ரத்தன் டாடா தனது 86வது வயதில் புதன்கிழமை பிற்பகுதியில் காலமானார். இந்தியா மட்டுமின்றி உலகளாவிய வணிக வட்டாரங்களில் அனைவராலும் மதிக்கப்படும் நபராகத் திகழ்ந்த அவரின் இறப்பு தேசம் முழுவதும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாடா நிறுவனத்தின் கார்கள் இந்தியாவின் சாலைகளை ஆக்கிரமித்துள்ளது. டாடா நிறுவனக் கார்கள் அவற்றின் தரத்திற்கும், பாதுகாப்பு அம்சங்களுக்கும் புகழ் பெற்றவை. ஆனால் பலரும் அறியாதது ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் போன்ற நிறுவனங்களும் டாடா நிறுவனத்துக்கு சொந்தமானவைதான். இண்டெர்நேஷனல் கார் நிறுவனங்களான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவரை ரத்தன் டாடா எப்படி வாங்கினார்? அதற்கு பின்னால் உள்ள பழிவாங்கும் கதை என்ன தெரியுமா?

மார்ச் 2008-ல் உலகம் முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நாளிதழ்களும், ஃபோர்டுக்கு சொந்தமான பிரிட்டிஷ் மார்க்கீ பிராண்டுகளான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவரை , மற்றொரு இந்திய நிறுவனமான மஹிந்திரா மற்றும் மஹிந்திராவை வீழ்த்தி, டாடா குழுமம் $2.3 பில்லியன் டாலர் செலுத்தி வாங்கிய செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டன.
இது இந்திய வாகனத் துறையின் 'நீல் ஆம்ஸ்ட்ராங் தருணம்' என்று அழைக்கப்படுகிறது, 'டாடாக்களுக்கு இது ஒரு சிறிய படி, நாட்டின் கார்ப்பரேட் பிராண்டிற்கு இது ஒரு மாபெரும் பாய்ச்சல்'. ரத்தன் டாடாவைப் பொறுத்தவரை, இது டாடாவின் உற்பத்திப் பிரிவை விற்கும் முயற்சியில் அமெரிக்கப் பிராண்டால் ஏமாற்றப்பட்ட பிறகு அவரின் தனிப்பட்ட வெற்றிக்கான தருணமாக இருந்தது.
இந்த வரலாற்று வெற்றி 1998 இல் டாடா இண்டிகா அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தொடங்கியது. இந்தியாவின் முதல் டீசலில் இயங்கும் ஹேட்ச்பேக்கான இண்டிகா, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட காராக பரவலாகக் காணப்பட்டது. ரத்தன் டாடாவின் இதயத்திற்கு நெருக்கமான காராக அது இருந்தது.
இருப்பினும், அந்த காரின் விற்பனை மிகவும் மோசமாக இருந்தது, எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மேலும் தனது நஷ்டத்தைக் குறைக்க நினைத்த ரத்தன் டாடா, அப்போதைய ஃபோர்டு முதலாளி பில் ஃபோர்டிற்கு தொழிற்சாலையை விற்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றார். ஆனால் மீட்டிங் திட்டமிட்டபடி நடக்கவில்லை.
போர்டு நிறுவனத்தின் முதலாள, திரு டாடாவைத் அவமதிதததாகக் கூறப்படுகிறது, இந்திய நிறுவனம் ஒருபோதும் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியிருக்கக் கூடாது என்றும், ஆலையை வாங்குவது டாடாக்களுக்குச் சாதகமாக மாறும் என்றும் கூறினார்.
அவமதிக்கப்பட்ட ரத்தன் டாடா ஃபோர்டு நிறுவனத்துக்கு அவர் கொடுத்த வாய்ப்பைத் திரும்பப் பெற்று, ஒரு தெளிவான குறிக்கோளுடனும், கவனத்துடனும் மற்றும் உறுதியுடனும் வீடு திரும்பினார், தன் திறமையை சந்தேகித்தவர்களையும், விமர்சிப்பவர்களையும் வாயடைக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இண்டிகாவை வெற்றிகரமாக மாற்றிய பிறகு,
2004 இல் ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க ஏற்றுமதிகள் மற்றும் உள்நாட்டு விற்பனை 2007 இல் 1.42 லட்சமாக உயர்ந்தது. ரத்தன் டாடா தனது குறிக்கோளை நிறைவேற்றினார். அதேசமயம் 2008-ல் ஃபோர்டு நிறுவனம் தள்ளாடத் தொடங்கியது.
அமெரிக்க பொருளாதாரத்தை உலுக்கிய மந்தநிலை ஃபோர்டு நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை மற்றும் நிறுவனம் கிட்டத்தட்ட திவாலானது.உண்மையில், அரசாங்கக் கடன் கொடுக்காமல் இருந்திருந்தால் நிறுவனம் மொத்தமாக கவிழ்ந்திருக்கும். ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவரைக் கைப்பற்ற ரத்தன் டாடா காய் நகர்த்தி, வேகமாக முன்னேறினார். ஃபோர்டு அறிக்கையின் படி டாடா நிறுவனம் அதை ஒரு உதவியாக செய்வதை ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியது.
ரத்தன் டாடாவைப் பொறுத்தவரை, இந்த பழிவாங்கும் சந்தர்ப்பமாக இருந்திருக்காலம், ஆனால் அவருக்கு அது நல்ல வியாபாரமாகவும் இருந்தது. டாடா நிறுவனம் ஃபோர்டின் JLR ஐ வாங்கிய பிறகு, பில் ஃபோர்டு ரத்தன் டாடாவிடம் " எங்கள் நிறுவனத்திற்கு ஒரு பெரிய உதவியைச் செய்கிறீர்கள்" என்று கூறினார்.
ஜாகுவார், அப்போது தள்ளாடிக் கொண்டிருந்தாலும், உலகின் மிகவும் பிரத்தியேகமான மற்றும் சிறந்த அங்கீகாரம் பெற்ற ஸ்போர்ட்ஸ் மற்றும் சொகுசு கார் தயாரிப்பாளர்களில் ஒன்றாகும், மேலும் லேண்ட் ரோவர் முந்தைய மூன்று ஆண்டுகளில் விற்பனையில் சாதனை படைத்திருந்தது.
ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, சுவிட்சர்லாந்தில் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் திரு டாடா கூறுகையில், "பிராண்டுகளுடன் டிங்கர் செய்வதற்கு எந்த காரணமும் இல்லை... அவற்றை வளர வைப்பதே எங்கள் சவால்" என்று கூறினார். அவர் சொன்னதை சாதிக்கவும் செய்தார், Jaguar Land Rover, விற்பனை 2011 இல் £9,871 மில்லியனில் இருந்து 2018 க்குள் £25,000 மில்லியனாக உயர்ந்தது. 2024 ஆம் நிதியாண்டில் நிறுவனம் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்றதாக அறிவித்தது.



Click it and Unblock the Notifications

