Just In
- 29 min ago
ஆயுர்வேதத்தின் படி இந்த 5 பொருட்கள் உங்கள் எடையை நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் குறைக்குமாம்..!
- 46 min ago
ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த ருத்ராட்சத்தை அணிந்தால் அதிர்ஷ்டம் அடிக்கும் தெரியுமா?
- 3 hrs ago
எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் தேங்காய் ஏன் உடைக்கிறார்கள் தெரியுமா? ஷாக் ஆகம காரணத்த தெரிஞ்சிக்கோங்க!
- 3 hrs ago
பாலுடன் இந்த பழங்களை சேர்த்து சாப்பிடுவது உங்களை பல ஆபத்துகளுக்கு ஆளாக்குமாம்... ஜாக்கிரதையா இருங்க!
Don't Miss
- News
வாயில் துணி கட்டிய அடுத்த நாளே, எம்.பி. சீட்டுக்காக அறிவாலயத்திற்கு போயாச்சு காங்.! அண்ணாமலை கிண்டல்
- Sports
ஐபிஎல் 2022: ரன் ரேட் முறை என்றால் என்ன? எப்படி கணக்கிடப்படுகிறது?.. எளிய விளக்கம் இதோ!
- Movies
மாரி செல்வராஜ் ரொம்ப மோசம்.. 50 டேக் எடுக்கிறார்... 'மாமன்னன்' பட அனுபவம் குறித்து உதயநிதி ஸ்டாலின்!
- Technology
கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பயன்படுத்தும் போன் இதுதான்- ஐபோன் இல்ல., அவரே இதைதான் யூஸ் பண்றாரு!
- Finance
தங்கம் விலை தொடர்ந்து உயருமா..? இப்போ தங்கம் வாங்குவது சரியா..?
- Automobiles
எந்த நாட்டிலிருந்தும் காரை இறக்குமதி செய்ய மாட்டோம்... பாக் தடாலடி முடிவு இந்தியாவிற்கு புதிய தலைவலி
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 5 ராசிக்காரங்களுக்கு கல்யாணம்னாலே பிடிக்காதாம்... இவங்கள கல்யாணம் பண்றவங்கதான் ரொம்ப பாவம்...!
திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனையாக இருக்கிறது. திருமணம் அனைவரின் வாழ்க்கையையும் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது. ஆனால் சிலருக்கு திருமணம் செய்வது பிடிக்காது. வாழ்நாள் முழுவதும் ஒருவருடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம், அவர்களைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதும், அது குறித்த யோசனையும் நல்ல பலனைத் தரப்போவதில்லை.
நீங்கள் யாரையும் திருமணம் செய்து கொள்ள ஒரு நபரை வற்புறுத்த முடியாது. சிலர் காலப்போக்கில் உறவுகளின் உணர்வை வளர்த்துக் கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள், ஆனால் சிலர் பல ஆண்டுகளாக தங்கள் கருத்திலேயே பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்கள் காலப்போக்கில் திருமணம் செய்து கொண்டாலும் அது மற்றவர்களுக்காக இருக்குமேத் தவிர அவர்களுக்காக இருக்காது. ஜோதிடத்தின்படி, இந்த வகையான நபர்களை அடையாளம் காண்பது பயனுள்ளதாக இருக்கும். எனவே தங்கள் வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
இவர்கள் மிகவும் நிலையற்ற மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள் தங்கள் முடிவை மிக விரைவாக மாற்றிக்கொள்கிறார்கள், அதனால் வாழ்நாள் முழுவதும் ஒருவருடன் இருப்பது அவர்களுக்கு நம்பத்தகுந்த விருப்பமாக இருக்காது. யாராவது அவர்களைத் துரத்தும்போது அவர்கள் அதை விரும்புகிறார்கள், ஏனென்றால் அவர்கள் அதைக் கண்டு சிலிர்க்கிறார்கள். ஆனால் விரைவில் அல்லது பின்னர், அவர்களுக்கு அது சலித்துவிடும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணம் மற்றும் உறவுகளின் மீதான ஆர்வம் விரைவில் குறையும். விஷயங்கள் சலிப்பாக இருக்கும்போது அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள். அவர்கள் வேடிக்கை, உற்சாகம் மற்றும் அன்புக்காக உள்ளனர். ஆனால் திருமணத்தில் சண்டை, பிரச்சனைகள் என்று வரும்போது பின்வாங்குகிறார்கள். அதனாலேயே இவர்கள் திருமணத்தை விரும்புவதில்லை. குழப்பங்கள் இல்லாத உறவுகளையே இவர்கள் விரும்புகிறார்கள்.

தனுசு
இவர்கள் ஒருவரிடம் கமிட்மெண்ட்டுடன் இருப்பதற்கு மிகவும் பயப்படுகிறார்கள், இதயம் உடைவதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் உறவில் ஈடுபடுவதையே தவிர்ப்பார்கள். இவர்கள் தனிமையில் இருப்பதை விரும்புகிறார்கள், ஏனெனில் அது அவர்களின் சுதந்திரமான ஆளுமைக்கு மிகவும் பொருத்தமானது. இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. திருமணம் செய்தாலும் இவர்களின் வாழ்க்கையை அனுபவித்து வாழ மாட்டார்கள்.

கும்பம்
இவர்கள் ஒருவருடன் இருப்பதை நேசிப்பது போலவே தனிமையையும் விரும்புகிறார்கள். இவர்கள் யாருடனும் விரைவாகப் பழகுபவர்கள் அல்ல. இவர்கள் அட்டகாசமான காதலில் ஈடுபடுவார்கள், ஆனால் திருமணம் செய்வது என்பது நிறைய பொறுப்புகளை குவிப்பதாகும், மேலும் குடும்ப வாழ்க்கையின் பொறுப்புகளும், சுமைகளும் இவர்களை மிகவும் அச்சுறுத்துவதாக இருக்கும்.

மீனம்
இவர்கள் தங்கள் எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படும் என்று பயப்படுவதாலும், கடமைகள் குறித்தும் மிகவும் பயப்படுகிறார்கள். மீன ராசிக்காரர்கள் தாங்கள் நினைத்தபடி வாழவில்லை என்றால், அந்த வாழ்க்கையை விட்டு இவர்கள் விரைவில் வெளியேறிவிடுவார்கள். இவர்கள் விஷயங்களை இலகுவாக வைத்திருப்பார்கள், ஆனால் இவர்கள் ஒருபோதும் கூடுதல் உறுதியாக இல்லாமல் திருமணத்தை அணுக மாட்டார்கள்.