Latest Updates
-
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம்
மனிதர்களின் உள்ளங்கை மற்றும் பாதங்களில் மட்டும் ஏன் முடி வளர்வதில்லை என்று தெரியுமா?
மனிதர்களின் உள்ளங்கை மற்றும் பாதங்களில் முடி வளராமல் இருப்பதன் பின்னிருக்கும் அறிவியல் காரணம் என்ன என்பது குறித்து பென்சில்வேனியா பல்கலைக்கழக தோல் நிபுணர் சாரா மில்லர் வலைதளம் ஒன்றில் கூறியுள்ளார்.
பல உயிரினங்களின் உள்ளங்கை மற்றும் பாதங்களில் முடி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் மனிதர்களின் உள்ளங்கைகளிலும், பாதங்களிலும் முடி வளர்வதில்லை. இது ஏன் என்று எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? இதற்கு பின்னிருக்கும் காரணம் என்னவென்பதை தெரிந்து கொள்ள ஆவலவாக இருக்கிறீர்களா? அப்படியானால், இக்கட்டுரையில் மனிதர்களின் உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் மட்டும் ஏன் முடி வளர்வதில்லை என்பது குறித்து கூறவுள்ளோம்.

ஒரு அறிவியல் வலைதளத்தின் அறிக்கையின் படி, உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்களுக்கு நீண்ட காலமாக இது ஒரு மர்மமாகவே இருந்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த மர்மத்தின் பின்னிருக்கும் காரணத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மனிதர்களின் உள்ளங்கை மற்றும் பாதங்களில் முடி வளராமல் இருப்பதன் பின்னிருக்கும் அறிவியல் காரணம் என்ன என்பது குறித்து பென்சில்வேனியா பல்கலைக்கழக தோல் நிபுணர் சாரா மில்லர் பின்வருமாறு கூறியுள்ளார்.

உடலில் முடி ஏன் வளர்கிறது?
தோல் நிபுணரான சாரா மில்லர் இணையதளம் ஒன்றில் தலைமுடி குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். அதில் முடி ஏன் உள்ளங்கை மற்றும் பாதங்களில் வளர்வதில்லை என்பது பற்றிய ஆய்வையும் மேற்கொண்டுள்ளார். மனித உடலில் Wnt என்ற ஒரு வகை புரோட்டீன் உள்ளது. இந்த புரோட்டீன் தான் ஒரு தூதுவராக செயல்படுகிறது. அதாவது இந்த புரோட்டீன் தான் முடியின் வளர்ச்சி, இடைவெளி மற்றும் செல்களிடையே வளர்ச்சி பற்றிய தகவல்ளை வழங்குகிறது. இந்த புரோட்டீனால் பெறப்படும் சமிக்ஞைகள் முடியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம்.

எலி ஆய்வு
மனித உடலில் முடிகள் வளராத பகுதிகளில் Wnt புரோட்டீன்களின் வேலையை செய்ய அனுமதிக்காத தடுப்பான்கள் இருப்பதாக தோல் நிபுணரான சாரா மில்லர் கூறுகிறார். அந்த தடுப்பான்களானது Dickkopf 2 (DKK2) எனப்படும் ஒரு வகை புரோட்டீனாகும் என்றும் கூறினார். இந்த கண்டுபிடிப்பை எலிகளைக் கொண்டு ஆய்வு செய்ததாக சாரா கூறினார்.

முயல் ஆய்வு
இந்த ஆய்வில் எலிகளின் உடலில் இருந்து இந்த DKK2 புரோட்டீன் அகற்றப்பட்ட போது, அவற்றின் உள்ளங்கைகளிலும் முடி வளர ஆரம்பித்தன என்றும் கூறினார். அதன் பின் முயல் மீது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முயல்கள் மீதான ஆய்வில், இந்த புரோட்டீன் அவற்றின் உடலில் மிகச்சிறிய அளவில் காணப்படுவதாகவும், அதனால் தான் அவற்றின் கைகள் மற்றும் கால்களில் முடி அதிகம் இருப்பதாகவும் தெரிய வந்தது. இப்போது அனைவரது மனதிலும் எழும் ஓர் கேள்வி, இந்த புரோட்டீன் ஏன் உள்ளது என்பதாகவே இருக்கும்.

DKK2 புரோட்டீன் ஏன் உள்ளது?
உடலில் DKK2 புரோட்டீன்கள் இருப்பதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வாளர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் உயிர் பரிணாம வளர்ச்சியின் காரணமாக, உயிரினங்களிடம் இந்த புரோட்டீன்கள் காணப்படுகின்றன என்று தோல் நிபுணர் சாரா விளக்கினார். மேலும் கரடிகள், முயல்கள் போன்ற விலங்குகள் பாறைகள் மற்றும் கரடுமுரடான சாலைகளில் நடப்பதனால், அவற்றின் கைகள் மற்றும் பாதங்களில் முடி வளர்கிறது. மனிதர்களின் உள்ளங்கை மற்றும் பாதங்களில் முடி வளர்ந்தால், பிரச்சனை இன்னும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
