Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
Beela Rajesh : தமிழ்நாட்டில் கொரோனவை எதிர்த்து போராடும் இந்த பீலா ராஜேஷ் யார் தெரியுமா?
பல இடங்களில் ஆய்வு செய்வது என கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அயராது உழைத்து வருகிறார் பீலா ராஜேஷ்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது.நாளுக்கு நாள் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும், பாதிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்ககளில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. இந்நிலையில், தற்போது தமிழகமே உற்று நோக்கும் ஒரு நபராக வலம்வருகிறார் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மிகவும் துரிதமாகவும், அதேநேரம் நிதானமாகவும் மேற்கொண்டு வருகிறார்பீலா ராஜேஷ். இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. யார் இந்த பீலா ராஜேஷ்? இவர் வகித்த பதவிகள் என்னென்ன? இவரின் குடும்ப பின்னனி குறித்து இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பீலா ராஜேஷ் பிறப்பு
1969 ஆம் ஆண்டு நவமர் 15ஆம் தேதி பிறந்தார் பீலா ராஜேஷ். இவரது பெற்றோர் எல்.என்.வெங்கடேசன்-ராணி. தமிழக காவல்துறை டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் வெங்கடேசன். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் வாழையடி. ராணி, வெங்கடேசன் தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களின் மகன் கார்த்திக், மகள் பீனா இருவரும் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட, மற்றொரு மகளான பீலா மட்டும் சென்னையில் இருக்கிறார்.

அரசியல் பின்புலம்
பீலா ராஜேஷின் தாயார் ராணி வெங்கடேசன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட ராணி வெங்கடேசன், 2006 சட்டமன்றத் தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர். அதன்பின்னர், 2016 தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தேர்தலில் போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதனிடம் தோல்வியைத் தழுவினார்.

காதல் திருமணம்
பீலா படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னை கொட்டிவாக்கத்தில்தான். மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் முடித்த பீலா, ஒடிசா கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான ராஜேஷ் தாஸை 1992இல் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கணவர் ஏடிஜிபி
திருமணத்துக்குப் பிறகு, ராஜேஷ் தாஸ் தமிழகத்துக்கு தன் பணியிடத்தை மாற்றிக்கொண்டதால் தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாகக் குடும்பத்தை நடத்தினர். இவர்களுக்கு பிங்கி, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் ஏ.டி.ஜி.பி-யாக ராஜேஷ் தாஸ் உள்ளார்.

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி
கணவர் ராஜேஷ் தாஸைப் பார்த்து தானும் ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் படித்து, 1997இல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றியும் பெற்றார்பீலா ராஜேஷ். முதன்முதலில் இவருக்கு பீகார் மாநில கேடர்தான் ஒதுக்கப்பட்டது. ஐ.பி.எஸ் அதிகாரியான தன் கணவர் தமிழகத்தில் பணிபுரிவதை மேற்கோள்காட்டி 2000ஆம் ஆண்டு தமிழகத்துக்கு தன் பணியிடத்தை தற்காலிகமாக மாற்றிக்கொண்டார்.

பணிமாற்றம்
அதனை தொடர்ந்து, 2003ஆம் ஆண்டு பீகார் மாநிலத்திலிருந்து புதிதாக உதயமான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். பின்னர் மத்திய அரசின் பணிக்குச் சென்ற பீலா ராஜேஷ், இந்திய ஹோமியோபதி மருத்துவம், மத்திய ஜவுளித்துறைகளில் பணியாற்றினார். இறுதியாக தமிழகத்துக்கு பணி மாறுதல் பெற்று வந்தார். இங்கும் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்து, பின்னர் சுகாதார துறைக்கு மாற்றப்பட்டார்.

பல்வேறு பொறுப்புகள்
இதற்கு முன்னதாக செங்கல்பட்டு துணை கலெக்டர், நகர ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர், மீன்வளத்துறை இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பணி மாற்றப்பட்டு, சென்ற ஆண்டு (2019) பிப்ரவரி 17இல் அப்பொறுப்பு பீலா ராஜேஷுக்கு வழங்கப்பட்டது. தொடக்கத்திலிருந்தே பீலா ராஜேஷ் துடிப்பாகவும், நிதானமாகவும்பணியாற்றி வருகிறார்.

கொரோனா பணி
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருகிறது. தமிழ்நாட்டிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கொரோனா பற்றிய விழிப்புணர்வு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கொரோனா தடுப்பு பணிகள் என தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுக்கும் மக்களும் தெரிவித்து வருகிறார். பல இடங்களில் ஆய்வு செய்வது என கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அயராது உழைத்து வருகிறார் பீலா ராஜேஷ். இவரின் இந்த பணிக்கு பலர் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications
