இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கும் வீடு தேடி யோகம் வரப்போகுது...

மே மாதத்தின் முதல் வாரம் தொடங்கியிருக்கிறது. பருவநிலை மாற்றம் உடம்பிலும் மனதிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அதே போலத்தான் கிரகங்களின் இடப்பெயர்ச்சியும் நன்மை தீமை கலந்த பலன்களை தரும்.

மே மாதத்தின் முதல் வாரம் தொடங்கியிருக்கிறது. பருவநிலை மாற்றம் உடம்பிலும் மனதிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அதே போலத்தான் கிரகங்களின் இடப்பெயர்ச்சியும் நன்மை தீமை கலந்த பலன்களை தரும். இந்த வாரம் முக்கிய கிரகமான செவ்வாயின் இடப்பெயர்ச்சி உள்ளது. இதனால் நமக்கு வேலை நிலைக்குமா? உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும், வீட்டில் பிரச்சினை இல்லாமல் இருக்குமா என்றெல்லாம் யோசிக்கிறீர்களா? இந்த வாரம் உங்க ராசிக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். உங்களின் கேள்விகளுக்கு இந்த வார ராசி பலன்கள் விடை தருகிறது. இந்த வாரம் மகரம், கும்பம், மீனம், மேஷம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ரொம்ப கவனமாக இருங்க. எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க. வீண் வம்பு வழக்கு வரும் வீண் பிரச்சினையில மாட்டிக்காதீங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரங்களே, இந்த வாரம் பணம் கொடுக்கல் வாங்கல்ல கொஞ்சம் நிதானமா இருக்குறது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீங்க. திருமணம் போன்ற சுபகாரியம் சம்பந்தமா இந்த வாரம் பேசலாம். அது வெற்றிகரமா முடியும். இந்த வாரம் உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் அற்புதமா இருக்கும். கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். வீட்டுலயும் உற்சாகமும் மகிழ்ச்சியும் தாண்டவமாடும். சொந்தக்காரங்களோட சப்போர்ட் கிடைக்கும். எடுக்குற காரியம் எல்லாமே சக்ஸஸ்ஃபுல்லா முடியும். உங்க ஹெல்த் கண்டிஷன்ல இருந்து வந்த கோளாறுகள் நீங்க சுறுசுறுப்பா மாறி முகத்துல சந்தோஷம் குடிகொள்ளும். இந்த வாரம் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் இருக்குறதுனால கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க. எந்த வேலையை ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் வெல்லம் சாப்பிட்டுட்டு ஆரம்பிங்க. தேவையில்லாம் வீட்டை விட்டு வெளிய போகாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 27

அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரங்களே, இந்த வாரம் கணவன் மனைவிக்குள்ளாற சின்னச்சின்னதா ஊடல்கள் வரலாம். நீங்க கொஞ்சம் விட்டுக்கொடுத்து போங்க, எல்லாம் சரியாகிடும். பணத்தை எதுலயும் பெரிய அளவுல முதலீடு பண்ணி மாட்டிக்காதீங்க. அதோட யாருக்கும் பணத்தை கடனாவோ இரவலாவோ கொடுக்காதீங்க. அப்புறம் அது கோவிந்தா தான். பிசினஸ்ல சின்னதா தடங்கல், இடைஞ்சல், போட்டி பொறாமைன்னு குறுக்கீடுகள் வரலாம். துர்க்கை அம்மனை கும்பிட்டு வாங்க, எல்லாமே நல்லபடியா நடக்கும். படிக்குற பசங்க படிப்புல மட்டும் கவனமா இருங்க. வீட்டுல இருந்தாலும் கூட பரீட்சைக்கு ப்ரிப்பேர் பண்ணுங்க. இந்த வாரம் பண வரத்து இருந்தாலும், அனாவசிய செலவுங்களை குறைச்சிகிட்டு அத்தியாவசிய செலவுக்கு மட்டும் பணத்தை வெளியில எடுத்தா, சேமிப்பு கூடும். இந்த வாரம் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பும் உதவி, ஒத்தாசையும் உங்களை தேடி வரும். ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை காட்டுங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரங்களே, இந்த வாரம் பண விஷயத்துல கொஞ்சம் கவனமா எச்சரிக்கையா இருக்குறது நல்லது. யாருக்கும் பணத்தை கொடுத்து மாட்டிக்காதீங்க. எந்த முதலீட்டுலயும் பெருசா பணத்தை போய் கொட்டாதீங்க. தண்டச்செலவுங்களும் வந்து கையை கடிக்கும். பிசினஸும் கொஞ்சம் மந்தமாதான் இருக்கும். உலகம் பூராவும் அப்படி தானே இருக்கு. இருக்குற வேலையை காப்பாதிக்க பாருங்க. இந்த சந்தர்ப்பத்துல இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படாதீங்க. இந்த வாரம் பண வரத்துல தடங்கல் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. இருந்தாலும், விரயச் செலவுங்க வரலாம். ஹெல்த் கண்டிஷனும் மந்தமாவும், சோம்பலாவும் தான் இருக்கும். குடும்பத்துல பிரச்சனை ஏற்படுறது கொஞ்சம் குறையும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நாள் : புதன்கிழமை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரங்களே, இந்த வாரம் பிசினஸ்ல போட்டி பொறாமைகளை தைரியா எதிர்கொள்வீங்க. உத்தியோகத்துல உங்க திறமையை வெளிப்படுத்தினா, உங்க சீனியர் அதிகாரிங்களோட பாராட்டு கிடைக்கும். இந்த வாரம் உங்களோட டார்கெட்டை ரீச் பண்றதுக்கு கடுமையா முயற்சி செஞ்சி வேலை பாப்பீங்க. புது வாய்ப்புங்களும் தேடி வரும். படிக்குற பசங்களுக்கு படிப்புல ஆர்வம் கூடிடும். கணவன் மனைவிக்குள்ளாற சின்னதா மனஸ்தாபம் வரலாம், நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போறது நல்லது. அதனால குடும்பத்துலயும் ஒத்துமை கூடும். இந்த வாரம் உங்க ஹெல்த் கண்டிஷனும், மன தைரியமும் கூடிடும். மேலும் நல்லது நடக்குறதுக்கு ஆஞ்சநேயரை கும்பிட்டு வந்தீங்கன்னா தடைக்கற்கள் எல்லாம் தூசு மாதிரி பறந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள் : திங்கட்கிழமை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரங்களே, இந்த வாரம் பண வரத்து ரொம்ப சிறப்பா இருக்கும். கொடுக்கல் வாங்கல்ல கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரிச்சி நடந்துக்குறது நல்லது. பிசினஸ்லயும் உங்க கூட்டாளிங்க கிட்ட தன்மையா நடந்துகிட்டா எதிர்பாத்த லாபம் கிடைக்கும். எடுக்குற முயற்சிங்களுக்கு வெற்றிகள் உங்களை தேடி வரும். படிக்குற பசங்க, பரீட்சைக்கு எந்த நேரமும் தயாரா இருக்க பாருங்க. கணவன் மனைவிக்குள்ளாற அப்பப்போ சின்னதா வாய் தகராறு முளைக்கலாம். வார்த்தையை விட்டுடாதீங்க. சாப்பாட்டு விஷயத்துலயும் வாயை கட்டிப்போடுறது நல்லது. அப்போ தான் ஹெல்த் கண்டிஷன் நார்மலா இருக்கும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைங்குற மாதிரி, சொந்தக்காரங்க கிட்ட விட்டுக்கொடுத்து கரிசனம் காட்டுங்க. பிரச்சனைங்க களையுறதுக்கு தட்ஷிணாமூர்த்தையை வழிபட்டு வாங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

அதிர்ஷ்ட நாள் : ஞாயிறுகிழமை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரங்களே, இந்த வாரம் எதுக்காகவும் வீட்டை விட்டு வெளிய போக நினைக்காதீங்க. பண வரத்தும் தாராளமா இருக்கும். லேவா தேவி விஷயத்துல எச்சரிக்கையோட

நடந்துக்கோங்க. அநாவசிய செலவுங்களை தவிர்க்க பாருங்க. கணவன் மனைவிக்குள்ளாற அநாவசிய மனஸ்தாபம் வரலாம். அனுசரிச்சி போனா ஊடல் குறைஞ்சி கூடல் கூடும்.

உத்தியோகத்துல நிம்மதியா வேலை பாப்பீங்க. புது வாய்ப்புங்களும் தேடி வரும். பழைய கடன் பாக்கியை செட்டில் பண்ணுவீங்க. கல்யாணம், காதுகுத்துன்னு சுபகாரியம் சம்பந்தமா பேச்சு வார்த்தையை இந்த வாரம் நடத்தலாம். சொந்தக்காரங்களை அனுசரிச்சி போங்க. எடுக்குற முயற்சிகள்ல வெற்றிகள் கிடைக்கும். மொத்தத்துல இந்த வாரம் உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நாள் : திங்கட்கிழமை

துலாம்

துலாம்

துலா ராசிக்காரங்களே, இந்த வாரம் சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புங்க தேடி வரும். பண வரத்தும் அற்புதமா இருக்கும். அநாவசிய செலவுங்களை தவிர்க்க பாருங்க. எதுக்கும்

கோபப்படாம நிதானமா பேசி பழகுறது நல்லது. கோபப்பட்டா நிறைய பிரச்சனைகளையும் இழப்பையும் சந்திக்க வேண்டியிருக்கும். கவனமா இருங்க. பிசினஸ்ல போட்டி, பொறாமைங்க வரலாம். இந்த வாரம் ஹெல்த் கண்டிஷன்ல சின்னச்சின்னதா பாதிப்புங்க வரலாம். உஷாரா இருக்க பாருங்க. கொரோனா பீதி இருக்குற இந்த நேரத்துல நிம்மதியா வீட்டுல இருக்க பாருங்க. தேவையில்லாம வெளிய போயி பிரச்சனையில மாட்டிக்காதீங்க. படிக்குற பசங்க விளையாட்டுத்தனமா இல்லாம, பரீட்சைக்கு படிக்குறதுல கவனத்தை செலுத்துனா நல்லது. உத்தியோகத்துல நிம்மதியும் சந்தோஷமும் இருக்கும். சில பேருக்கு கவுரவ பொறுப்புங்க தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரங்களே, இந்த வாரம் கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். பூர்வீக சொத்து பத்து சம்பந்தமா உங்களுக்கு லாபம் கிடைக்கும். இந்த வாரம் கல்யாணம், காதுகுத்துன்னு சுபகாரியங்கள்ல தீவிரமா இருப்பீங்க. பழைய கடன்கள் குறையும். வீட்டுக்கு தேவையான சாமான்களையும் வாங்குவீங்க. உத்தியோகத்துல ப்ரமோஷன், இன்க்ரிமெண்ட்ன்னு உங்களை தேடி வந்து சந்தோஷப்படுத்தும். பிசினஸ்ல கூட்டாளிங்களோட சப்போர்ட் கிடைச்சிடும். பிசினஸ்ல இருந்த போட்டி, பொறாமைகள் காணாம போயிடும். ஹெல்த் கண்டிஷன்ல இருந்த பாதிப்புங்க காணாம போயி மனசுல உற்சாகமும் சந்தோஷமும் கொப்பளிக்கும். அதனால எந்த வேலையையும் சுறுசுறுப்பா செய்வீங்க. குடும்பத்துலயும் சந்தோஷம் தாண்டவமாடும். மொத்தத்துல இந்த வாரம் உங்களுக்கு மேலும் நல்லபடியா இருக்க மஹாலட்சுமியை கும்பிடுங்க.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய்கிழமை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரங்களே, இந்த வாரம் செலவுங்களை கொஞ்சம் கட்டுப்படுத்துறது நல்லது. பிள்ளைங்களால பிரச்சனைங்க முளைக்கலாம், எச்சரிக்கையா இருந்தா குடும்பத்துல பிரச்சனை வராம தவிர்த்திடலாம். வீட்டுல உள்ளவங்க கிட்ட தன்மையா பேசி பழகுறது நல்லது. ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. சத்தான ஆஹாரத்தை சாப்பிடுங்க. இப்போ பாதச்சனி நடக்குற காலம்கிறதுனால கால்ல அடிபடிலாம். எச்சரிக்கையோட இருங்க. முயற்சிகள்ல தடை வந்தாலும் அதை உடைச்சிட்டு முன்னேறுவீங்க. உத்தியோகத்துல சில பேருக்கு பாராட்டும், ப்ரமோஷன் தேடி வரும். படிக்குற பசங்களுக்கு படிப்புல ஆர்வம் கூடிடும். பரீட்டைச்சைக்கு தயாராகுங்க. இந்த வார ஆரம்பத்துல ரெண்டு நாள் கொஞ்சம் எச்சரிக்கையோட இருக்க பாருங்க. பணம் கொடுக்கல் வாங்கல்ல எச்சரிக்கையோட இருக்க பாருங்க. இந்த வாரம் பண வரத்து அமோகமா இருக்குறதுனால, பழைய கடனை பைசல் பண்ணுவீங்க. மொத்தத்துல இந்த வாரம் ரொம்ப தெளிவா சிந்திச்சி செயல்படுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரங்களே, இந்த வாரம் 4ஆம் தேதி வரைக்கும் சந்திராஷ்டமம் இருக்குறதுனால, எதுலயும் நிதானமா நடந்துக்குறது நல்லது. இந்த நாள்ல அநாவசியமா வீட்டை விட்டு வெளிய போக நினைக்காதீங்க. வீட்டுலயே முடங்கி இருக்க பாருங்க. சுப காரியம் சம்பந்தமா எந்த பேச்சுவார்த்தையும் வச்சிக்காதீங்க. பணம் கொடுக்கல் வாங்கல்ல கொஞ்சம் எச்சரிக்கையா இருக்குறது நல்லது. இந்த வாரம் சமூகத்துல பெரிய மனுஷங்களோட சப்போர்ட் கிடைக்கும். இந்த வாரம் அநாவசிய அலைக்கழிப்புகள் வரலாம். இப்போ ஜென்ம சனி நடக்குற சமயம்கிறதுனால, எதையும் ஒரு தடவைக்கு பல தடவை யோசிச்சி முடிவெடுக்குறது நல்லது. மருந்து மாத்திரைன்னு பணத்தை செலவு பண்ண வேண்டியது இருக்கும். பண வரத்து சுமாரா தான் இருக்கும். அதனால அநாவசிய செலவுங்களை குறைக்க பாருங்க. கூடவே, நல்லா சத்தான ஆஹாரங்களை சாப்பிட்டு வாங்க. வீட்டுலயும் சொந்தக்காரங்களை அனுசரிச்சி நடந்துக்கோங்க. சிவபெருமானை மனசார கும்பிட்டு வந்தீங்கன்னா மனசுல தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரங்களே, இந்த வாரம் 4ஆம் தேதியில இருந்து 6ஆம் தேதி காலை வரைக்கும் சந்திரஷ்டமம் இருக்குறதுனால, ஃபேஸ்புக், ட்விட்டர்ன்னு சோஷியல் மீடியாவை கவனமா

கையாளுறது நல்லது. கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வீட்டை விட்டு வெளி போயி பிரச்சனையில மாட்டிக்காதீங்க. பிசினஸ்ல போட்டி பொறாமைன்னு இருந்தாலும், அதையும் மீற திடீர்ன்னு எதிர்பாக்காம லாபம் கிடைக்கும். உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கூடிடும். சொத்து பத்து வாங்குறதுல அவசரப்படாதீங்க. எந்த டாக்குமெண்டையும் நல்லா படிச்சி பாத்து, ஒரு தடவைக்கு நாலு தடவை நிதானமா யோசிச்சி வாங்குறது நல்லது. இந்த வாரம் உங்களோட தைரியமும் தன்னம்பிக்கையும் கூடிடும். பண விஷயத்துல கூடுதல் கவனம் அவசியம். இந்த வாரம் சந்திரன் உங்களுக்கு சாதகமா இருந்தாலும் சொந்தக்காரங்களால சின்னச் சின்ன பிரச்சனைங்க முளைக்கலாம். கணவன் மனைவிக்குள்ளாற நெருக்கம் கூடிடும். ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் எச்சரிக்கை அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரங்களே, இந்த வாரம் நீங்க எதுக்காகவும் வீட்டு வாசல் படியை தாண்டி வெளிய போக நினைக்காதீங்க. யார் கிட்டயும் பேசாம மவுன விரதம் இருந்தா எந்த வம்பு தும்புலயும் மாட்டி பிரச்சனை வராம சமாளிக்கலாம். பிசினஸ்ல இந்த வாரம் லாபம் அமோகமா இருக்கும். பிரச்சனை வராம இருக்க சமூக இடைவெளி விட்டு பழகுறது நல்லது. இந்த சமயத்துல நல்லா சத்தான ஆஹாரங்களை எடுத்துக்கிட்டா நோய் எதிர்ப்பு சக்தியும் கூடிடும். இந்த வாரம் பண வரத்து அமோகமா இருக்கும். லேவா தேவி மேட்டர்ல கூடுதல் எச்சரிக்கையோட நடந்துகிட்டா நல்லது. சுப விரைய செலவுங்க வந்துடும். இந்த வாரம் 6ஆம் தேதியில இருந்து 8ஆம் தேதி காலை வரைக்கும் சந்திராஷ்டமம் இருக்குறதுனால கொஞ்சம் எச்சரிக்கையோட இருங்க. குடும்பத்துலயும் சந்தோஷமும், சுபிட்சமும் நிறைஞ்சிருக்கும். கணவன் மனைவிக்குள்ளாற சின்னச்சின்னதா ஊடல வரலாம். உத்தியோகத்துல உங்களோட திறமைக்கு ஏத்த மாதிரி எதிர்பாத்த பாரட்டும், ப்ரமோஷன், ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கலாம். இந்த வாரம் சமூகத்துல உங்களோட மதிப்பும் மரியாதையும் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, May 3, 2020, 10:00 [IST]
Desktop Bottom Promotion