இந்த 5 ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் ரொம்ப யோகமான வாரம்...

2020 ஆம் ஆண்டின் 2 வது மாதமான பிப்ரவரி மாதத்தின் முதல் வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும். 12 ராசிக்காரர்களும் ராசி பலனை படிங்க. வரப்போகும் ஏழு நாட்களும் எப்படி இருக்கும் என்று யோசிக்கும்

2020 ஆம் ஆண்டின் 2 வது மாதமான பிப்ரவரி மாதத்தின் முதல் வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும். 12 ராசிக்காரர்களும் ராசி பலனை படிங்க. வரப்போகும் ஏழு நாட்களும் எப்படி இருக்கும் என்று யோசிக்கும் உங்களுக்காகவே இந்த வார ராசி பலன்கள். சில ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரப்போகிறது. சில ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்திருக்கும். சிலருக்கு இந்த ராசிகள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும். இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் இருக்கும் என்பதை இந்த வார ராசி பலன்களில் கூறியுள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரங்களே, இந்த வாரம் வேலை விஷயத்தைப் பொருத்த வரை சூப்பரா இருக்கும். கஷ்டப்பட்டு வேலை பாத்தீங்கன்னா, அதுக்கேத்த பலன் உங்களை தேடி வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கூடவே உங்களுக்கு ப்ரமோஷனுக்கு சான்ஸ் இருக்கு. இது உங்க கூட வேலை பாக்குறவஙங்களுக்கு புகைச்சலை ஏற்படுத்தலாம். கவனமா இருந்து உங்க பதிலை செயல்ல காட்டுங்க. பிசினஸ் பண்றவங்க புது பிசினஸ்ல இறங்கலாம். டாக்கமெண்ட் வேலை, தகவல் பரிமாற்றத்துல கவனமா இருங்க. வேலை தேடிட்டு இருக்குறவங்களுக்கு புது வேலை கிடைக்க வாய்ப்பிருக்குது. ஃபேமிலி லைஃப பொருத்தவரை, இந்த வாரம் உங்க ஒய்ஃப் கிட்ட வாய்த்தகராறு ஏற்பட வாய்ப்பிருக்கு. அதனால, நீங்க பேசாம உங்க நாக்கை கட்டுப்படுத்தினா உங்களுக்கு நல்லது. இல்லேன்னா உங்களுக்கு தான் சேதாரம் இருக்கும். பண வரவை பொருத்த வரை இந்த வாரம் கொஞ்சம் ஏத்த இறக்கமா தான் இருக்கும். வார தொடக்கத்துல கொஞ்சம் செலவுங்க எட்டிப்பாக்கும். ஆனாலும் வாரக் கடைசில பண வரவும் இருக்கும். இந்த வாரம் உங்க ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது பெட்டர்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நாள் : ஞாயிற்றுக்கிழமை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் ஏத்த இறக்கமாவே இருக்கும். லவ் பண்றவங்க கொஞ்சம் வாயை கட்டுப்படுத்திக்கிறது நல்லது. இல்லேன்னா வாக்குவாதம் முத்தி பிரச்சனை ஏற்படலாம். இருந்தாலும் வார மத்தியில பிரச்சனை சரியாகி நார்மலாகிடும். இதனால லவ்வும் கூடிடும். அதுக்காக லவ்வர் கிட்ட கல்யாணத்தை பத்தி அவசரப்பட்டு பேசிடாதீங்க. மேரேஜ் ஆனவங்களுக்கு இந்த வாரம் சூப்பரா இருக்கும். ஒய்ஃப் கூட பிரச்சனை இருந்தாலும் சரியாகிடும். வேலை விஷயத்தைப் பொருத்த வரை இந்த வாரம் நார்மலாவே இருக்கும். ஏதாச்சும் முக்கியமான முடிவெடுக்குறதா இருந்தா, அதை கொஞ்சம் ஒத்திப்போடுறது நல்லது. இந்த வாரம் பணவரவும் நார்மலா இருக்கும். ஹெல்த்ல சின்னதா பிரச்னை ஏற்பட்டாலும் உடனே கவனிக்கிறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக்கிழமை

மிதுனம்

மிதுனம்

இந்த வாரம் நீங்க எடுக்குற முடிவுங்க நல்ல ரிசல்ட்டை கொடுத்தாலும், கவனமா இருக்குறது நல்லது. பேச்சை கம்மி பண்ணி எல்லோரையும் அன்பா நடத்தப்பாருங்க. யார்கிட்டயும் தடித்த வார்த்தையை பிரயோகிக்காதீங்க. அது உங்களை பிரச்சனையில கொண்டு போய் விட்டுடும். இந்த சமயத்துல உங்க அப்பாவும் உங்ககிட்ட தகராறு பண்றதுக்கு சான்ஸ் இருக்கு. வீட்டுலயும் சூழ்நிலை உங்களுக்கு பாதகமாவே இருக்கு, கவனமா நடந்துக்கோங்க.மேரேஜ் லைஃபை பொருத்தவரைக்கும், ஒய்ஃப் என்ன சொன்னாலும் சரி சரின்னு சொல்லி ஒத்துப்போக பாருங்க. லவ் பண்றவங்க கொஞ்சம் லவ்வரோட ஃபீலிங்ஸை புரிஞ்சி நடந்துக்கிறது நல்லது. அதோட, மேரேஜை பத்தி பேசுறதுக்கு இது நல்ல சந்தர்ப்பம் கிடையாது. கொஞ்சம் பொறுமையா இருக்குறது நல்லது. ஆஃபீஸ் வேலை நலல படியா நகரும். பிசினஸ் பண்றவங்களுக்கு இந்த வாரம் நல்லபடியா இருக்கும்னு எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு கம்பெனியோட லிங்க் வச்சிருக்குறவங்களுக்கு இந்த வாரம் ஒரு பெரிய ஆர்டர் கிடைக்க வாய்ப்பிருக்கு.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நாள் : வியாழக்கிழமை

கடகம்

கடகம்

இந்த வாரம் நீங்க ரொம்பவே சுறுசுறுப்பா இருப்பீங்க. அந்த சுறுசுறுப்பு உங்க வேலையிலயும் தெரியும். இது வரைக்கும் உங்க பசங்க உடம்புக்கு முடியாம இருந்தா, இந்த வாரம் நார்மலாகிடும். இருந்தாலும், அசட்டையா இருக்காம, எதுக்கும் உங்க ஃபேமிலி டாக்டர்கிட்ட காட்டி செக்கப் பண்ணிக்கிறது நல்லது. இல்லேன்னா பின்னாடி பிரச்சனையை உண்டாக்கிடும். லவ் பண்றவங்க இந்த வாரம் கொஞ்சம் பொறுமையா இருந்துக்குறது நல்லது. லவ்வரை சந்தேகப்பட்டு கேள்வி கேட்டுடாதீங்க. அப்புறம் ரெண்டு பேருக்குள்ள கேப் விழ ஆரம்பிச்சிடும். மேரேஜ் லைஃப் அமோகமா இருக்கும். ஒய்ஃப் கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கும் வாய்ப்பிருக்கும். இந்த வாரம் பணவரவும் நார்மலா இருக்கும். ரொம்ப வருஷமா சொத்துப்பிரச்சனை தீர்க்கப்படாம இருந்தா, இந்த வாரம் அது உங்களக்கு சாதகமா தீர்ப்பு வர வாய்ப்பிருக்கு. அதனால உங்களுக்கு ஃபைனான்ஸ் சைடுல பக்கபலமா இருக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு இந்த வாரம் சூப்பரா இருக்கும். வெளியூர் ட்ராவல் பண்றதுக்கும் வாய்ப்பிருக்கு.

அதிர்ஷ்ட நிறம் :ஸ்கைப்ளூ

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரங்களே, இந்த வாரம் உங்களுக்கு திருப்புமுனையா அமைய வாய்ப்பிருக்கு. நிமிர முடியாம வேலை இருக்குறதுனால, வீட்டு ஆளுங்க கூடயும் சரிவர பேசமுடியாம தவிச்சிட்டு இருக்கீங்க. கூடவே வெளியூர் பிரயாணமும் வந்து நெருக்கடி கொடுக்கும். ஆஃபீஸ் வேலை பாக்குறவங்க சீனியர் கூட பக்குவமா பழகுறது நல்லது. அது உங்களுக்கு உற்சாகத்தையும் தெம்பையும் கொடுக்கும். அதோட உங்களை நம்பி பெரிய பொறுப்பையும் உங்க தலையிட கட்டிடுவாங்க. அதனால கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலை பாக்குறது நல்லது. இந்த வாரம் உங்க அப்பாவோட ஹெல்த் கண்டிஷனும் கூடிடும். இந்த வாரம் பண வரவும் நார்மலா இருக்கும்கிறதுனால, செலவழிக்குறதுல எந்த பிரச்சனையும் இருக்காது. வாரக் கடைசியில பணவரவு சம்பந்தமா நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

கன்னி

கன்னி

இந்த வாரம் அநாவசிய செலவுங்களை அவாய்ட் பண்ணி, உங்க செலவுகளை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டீங்கன்னா பணப் பிரச்சனை எழாது. பண வரவு ஏத்த இறக்கமா இருக்குறதுனால, அதுக்கேத்த மாதிரி உங்க ஃபைனான்ஸியல் ப்ளானை தயார் செஞ்சிக்குறது நல்லது. கடன் வாங்குறதுக்கு ட்ரை பண்ணுனீங்கன்னா நிச்சயம் கிடைக்க வாய்ப்பிருக்குது. சொத்துப்பிரச்சனை இருந்தா இந்த வாரம் அது கொஞ்சம் தீவிரமடையலாம். அதனால அவசரப்பட்டு எந்த முடிவையும் நீங்க எடுத்துடாதீங்க. லவ் பண்றவங்களுக்கு இந்த வாரம் அமோகமா இருக்கும். ரெண்டு பேரும் புரிஞ்சி நடந்துக்கிறது நல்லது. மேரேஜ் ஆனவங்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் போராட்டமாவே இருக்கும். அநாவசிய வார்த்தையை விட்டு அவஸ்தைப்படாதீங்க. ஆஃபிஸ் வேலை பாக்குறவங்க முக்கிய வேலையை சீக்கிரம் முடிக்கிறதுனால, உங்க சீனியரோட பாராட்டும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரங்க இந்த வாரம் பெர்சனல் லைஃப்ல கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது. இல்லேன்னா சிக்கல் ஏற்படலாம். அதனால குடும்ப சூழ்நிலையும் அமைதியில்லாம் அல்லாடும். ஆஃபீஸ் வேலையில சின்ஸியரா இருந்தாலும் கொஞ்சம் குடும்பத்தை பத்தி யோசிக்கிறதும் நல்லது. அதோட வெளிவட்டார பழக்கத்தையும் கொஞ்சம் கூட்டிக்கிறது நல்லது. அதனால உங்களுக்கு நல்ல பேர் கிடைக்கும். ஜெர்னலிஸ்ட், பேங்க் சம்பந்தப்பட்ட வேலையில இருக்குறவங்க ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பாக்க வேண்டியதிருக்கும். லவ் பண்றவங்களுக்கு இந்த வாரம் சாதகமாவே இருக்கும். பணவரவும் இந்த வாரம் சுமூகமா இருக்கக்கூடும். அதனால பணப்பிரச்சனையில அதிக ரிஷ்க் எடுக்காம இருக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நாள் : ஞாயிற்றுக்கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

இந்த வாரம் வேலை, பிசினஸ், குடும்பம் என எல்லாத்துலயும் அக்கறையோட நடந்தக்குவீங்க. பிசினஸ் பண்றவங்க யாரையும் நம்பாம, சுயமா முடிவெடுத்து பிசினஸ் பண்ணினா, இந்த வாரம் கொழுத்த லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு. பிசினஸ்ல புதுசா கூட்டு சேர்த்துக்கலாம். ஆஃபீஸ் வேலை பாக்குறவங்களுக்கு இந்த வாரம் நார்மலா இருக்கும். ரொம்பா சலிப்பா ஃபீல் பண்ணுவீங்க. இருந்தாலும் வேறை வழியில்லாம செஞ்சி முடிப்பீங்க. பண வரவு இந்த வாரம் ஏத்த இறக்கமாவே இருக்கும். அதனால பழைய பாக்கி கடனை நினைச்சு ஃபீல் பண்ணுவீங்க. குடும்ப வாழ்க்கையிலயும் ஏத்த இறக்கும் இருக்கும். வார தொடக்கத்துல குடும்பத்துல ஒரு சின்ன பிரச்சனை பெரிய அளவுல வெடிக்க வாய்ப்பிருக்கு. கவனமா கையாள்றது நல்லது. வீட்டுல பெரியவங்க சொல்ற அறிவுறையை கேட்டு நடந்துக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நாள் : வியாழக் கிழமை

 தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் நார்மலா இருந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கையோட நடந்துக்குறது நல்லது. இல்லேன்னா இடியாப்ப சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்குது. அதனால எந்த முடிவெடுத்தாலும் கவனமா எடுக்குறது நல்லது. ஆஃபீஸ்ல பெண்டிங் வச்ச வேலையை இந்த வாரம் முடிச்சிடுவீங்க. வேலை விஷயத்துல சில மாற்றத்தையும் நீங்க செய்வீங்க. அது உங்க எதிர்கால முன்னேற்றத்துக்கு படிக்கல்லா இருக்கும். புது வேலைக்கு ட்ரை பண்ணுனா, தைரியமா அதுக்கு அப்ளை பண்ணினா கிடைக்குறதுக்கும் சான்ஸ் இருக்கு. பிசினஸ் பண்றவங்க ரொம்ப அமைதியா இருக்குறது நல்லது. பிசினஸ்ல சின்னதா வாக்குவாதம் உண்டாக வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா நடந்துக்குறது அவசியம். இந்த வாரம் அநாவசிய செலவுங்களை குறைச்சிக்கிட்டா நல்லது. இல்லேன்னா உங்க பட்ஜெட்டுல பெரிய ஓட்டை விழுந்துடும். இந்த வாரம் உங்க ஹெல்த் கண்டிஷனும் நார்மலா இல்லை. வயிறு அல்லது தொண்டை பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கு. கவனமா இருந்துக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நாள் : ஞாயிற்றுக்கிழமை

மகரம்

மகரம்

இந்த வாரம் உங்களுக்கு மனசலவுள குழப்பமா இருந்தா, உங்களுக்கு நெருக்கமானவங்க கிட்ட மனசுவிட்டு பேசி ரிலாக்ஸ் ஆகிடறது நல்லது. அப்படி நடந்துக்கிட்டா, சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்க வீட்டுக் கதவை தட்டிடும். பிசினஸ் பண்றவங்க சரியான அறிவுரையை கேட்டு நடந்துகிட்டா லாபம் கிடைக்கும். இல்லேன்னா, வருத்தப்பட்வேண்டியதிருக்கும். அது பிசினஸையும் பாதிக்கக்கூடும். அதனால சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திட்டு இருக்குறது நல்லது. கூடவே, நீங்க பிசினஸ் டீலிங்ஸ் வச்சிட்டு இருக்குறவங்க கிட்ட நல்லவிதமா பக்குவமா பேசி பழகுறது நல்லது. இந்த வாரம் ஹெல்த் கண்டிஷன்ல அக்கற காட்டுறது நல்லது. பணவரவை பொருத்த வரை, திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகலாம். கஷ்டப்பட்டு வேலை பாக்குறதுக்கு ஏத்தமாதிரி பலனையும் எதிர்பார்க்குறீங்க. சீக்கிரமே நல்லது நடக்கும். வீட்டுக்கு தேவையான காஸ்ட்லி பொருள் ஒண்ணு வாங்குறதுக்கு வாய்ப்பிருக்கு. பெர்சனல் லைஃப் ரொம்ப சந்தோஷமா நகரும். குடும்பத்துலயும் அமைதியான சூழல் நிலவும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

கும்பம்

கும்பம்

லவ் பண்றவங்களுக்கு இந்த வாரம் ரொம்ப முக்கியமான வாரமா இருக்கும். இது நாள் வரைக்கும் லவ்வர் கூட ஒட்டுதல் இல்லாம பழகிட்டு இருந்து வந்தீங்க. ஆனா இந்த வாரம் அதுக்கு முற்றுப்புள்ளி விழுந்து திடீர் திருப்பம் ஏற்பட வாய்ப்பிருக்குது. உங்க லவ்வர் உங்களை எந்த அளவுக்கு சீரியஸா லவ் பண்றார்ங்கிறதை நீங்க புரிஞ்சிக்குவீங்க. அதனால நீங்க தைரியமா மேரேஜ் பத்தி வாக்குறுதியை கொடுத்துடலாம். மேரேஜ் பண்ணினவங்க லைஃப் ரொம்ப அமைதியா சந்தோஷமா நகரும். எல்லோரும் உங்ககிட்ட அந்நியோன்யமா பழகுவாங்க. படிக்குற பசங்களுக்கு இந்த வாரம் சாதகமா இருக்கு. படிப்புல முழு கவனத்தையும் காட்டுறது நல்லது. எதிர்கால படிப்புக்கு ஏத்தமாதிரி ப்ளான் பண்ணி, அதுக்கேத்த மாதிரி படிக்குறது நல்ல பலனை கொடுக்கலாம். இந்த வாரம் பண வரவு கொஞ்சம் மந்தகதியாவே இருக்கும். அதனால யார்கிட்டயாவது கையேந்துற நிலை ஏற்பட வாய்ப்பிருக்குது. இந்த வாரம் உங்க ஹெல்த் கண்டிஷனும் நார்மலாவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கைப்ளூ

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

மீனம்

மீனம்

இந்த வாரம் உங்க பெர்சனல் லைஃப் ரொம்ப சந்தோஷமா நகரும். வீட்டு சூழ்நிலையும் ரொம்பவே அமைதியாவே இருக்கும். இந்த சமயத்துல நீங்க ஏதாச்சும் சிக்கல்ல மாட்டியிருந்தா கூட அதை உங்க குடும்பத்து பெரியவங்ககிட்ட சொன்னீங்கன்ன அதுக்கு சரியான வழியை காட்டுவாங்க. உங்களை பெத்தவங்களும் உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. அதனால இந்த வாரம் முழுக்க உங்களுக்கு சந்தோஷமாவே இருக்கும். மேரேஜ் ஆனவங்க ஒய்ஃப் கூட அந்நியோன்யமா இருப்பீங்க. லவ் பண்றவங்களுக்கு இந்த வாரம் புது அனுபவமா இருக்கும். லவ்வரை கூட்டிட்டு எங்கயாவது ட்ராவல் பண்றதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு இந்த வாரம் புதுசா ஒரு பிசினஸ் ஆர்டர் கிடைக்க வாய்ப்பிருக்குது. கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சா, பெருசா பலன் கிடைக்கும். பணவரவும் இந்த வாரம் ரொம்ப அமோகமா இருக்கும். விரலுக்கு ஏத்த வீக்கம்னு சொல்றது மாதிரி, வரவுக்கு ஏத்த மாதிரி செலவழிக்க கத்துக்கோங்க பாஸ்.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள் : திங்கள் கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, February 2, 2020, 10:00 [IST]
Desktop Bottom Promotion