Latest Updates
-
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க
வார ராசிபலன் (29 January to 04 February 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

வார ராசிபலன் (29 January to 04 February 2023): நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே ஜனவரி 29, 2023 முதல் பிப்ரவரி 04, 2023 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வணிகர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். நிதி விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வீட்டு பொறுப்புக்கள் மற்றும் அலுவலக பணி உங்களை சோர்வடையச் செய்யும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நாள்: புதன்

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த வாரத்தில் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புக்கள் உண்டு. வணிகர்கள் வாரத்தின் தொடக்கத்தில் பெரிய சவால்களை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆனால் படிப்படியாக நிலைமை உங்களுக்கு சாதகமாக மாறும். வார இறுதியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வசதிகள் பெருகும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். முழுமையடையாத கடந்த வார பணிகள் இந்த வாரத்தில் முடிவடையும். பணிபுரிபவர்கள் இந்த வாரம் சற்று ரிலாக்ஸாக இருப்பார்கள். சம்பளம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், இந்த வாரம் அது தீர்க்கப்படும். வணிகர்களுக்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரம் மேம்படும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நாள்: பச்சை

கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் துணையுடன் மூன்றாம் நபரால் சண்டை வரலாம். நிதி நிலையில் சரிவு ஏற்படலாம். பண இழப்பிற்கு வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்களின் திட்டஙகளை ரகசியமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் எதிரிகள் உங்கள் வீழ்த்த முயற்சிப்பார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் சகாக்களுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை பிஸியாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில் உங்களின் பணிச்சுமை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த வாரம் ஒரு நல்ல வேலை கிடைக்கும். உங்களின் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் காதலி/காதலனுடன் குறுகிய பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! நீங்கள் தொழிலதிபராக இருந்து, கடன் வாங்க நினைத்தால், இந்த வாரத்தில் நல்ல பலனைப் பெறுவீர்கள். இருப்பினும் வணிக முடிவை கவனமாக எடுக்க வேண்டும். சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தால், நெருங்கியவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்கும். உங்களின் பெரிய பிரச்சனைகள் தீர்க்கப்படும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். இந்த வாரம் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் இருக்க போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் அலுவலகத்தில் நடக்கும் அரசியலில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். தொழிலதிபர்கள் சில பெரிய சவாலை சந்திக்க நேரிடும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் சிந்தனையுடன் செலவிட அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தில் பெரும் சரிவு ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: மெரூன்

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! வாரத்தின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். திடீரென்று பணம் கைக்கு வரும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! தொழிலதிபர்கள் சமீபத்தில் வணிகம் தொடர்பான பயணத்தை மேற்கொண்டிருந்தால், இந்த வாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள், கடினமாக உழைத்தால், வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். உணர்ச்சி ரீதியாக மிகவும் பலவீனமாக உணருவீர்கள். உங்களின் நிலையில் விரைவில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: புதன்

மகரம்
மகர ராசிக்காரர்கள்! இந்த வாரம் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். வேலையைப் பொறுத்தவரை, கலவையாக இருக்கும். உங்கள் வழியில் தடைகள் வந்தாலும், அதை மீறி முன்னேறி செல்வீர்கள். நிதி நிலை சாதகமாக இருக்காது. இந்த வாரத்தில் பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணைக்கு போதுமான நேரத்தை கொடுக்க முயற்சி செய்யுங்கள். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இந்த வாரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையை சந்திப்பீர்கள். உங்கள் பெற்றோர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். வேலைகளைச் செய்பவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப பலன்களைப் பெறுவார்கள். எலக்ட்ரானிக்ஸ், தங்கம்-வெள்ளி, ஹோட்டல்கள் அல்லது உணவகங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் ஊதாரித்தனமாக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கடன் வாங்க வேண்டியிருக்கும். வேலையில் எந்த வித அலட்சியமும் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. திடீரென்று ஏதேனும் பெரிய பிரச்சனை ஏற்பட்டு நஷ்டத்தை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், ஒற்றுமையும் நிலவும். ஆரோக்கியமாக இருக்க, உங்கள் தினசரி வழக்கத்தில் சிறு மாற்றங்களை செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை



Click it and Unblock the Notifications
