Latest Updates
-
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...!
இந்த வாரம் இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்கணும்...
இந்த வாரம் உங்க வாழ்க்கையில என்ன மாற்றங்கள் ஏற்படப்போகுது. வரப்போகிற ஏழு நாட்களும் நமக்கு நல்லது நடக்குமா வருமானம் கிடைக்குமா? அப்படின்னு பல கேள்விகள் எழலாம். இதோ இந்த வாரம் ராசி பலன்களை படிங்க..
சிலருக்கு பணம் பற்றி எதிர்பார்ப்பு இருக்கும் சிலருக்கு வேலை பற்றிய கவலை இருக்கும். குடும்பத்தில் அமைதியாக இருந்தாலே மனம் அமைதியாக இருக்கும். இந்த வார ராசி பலன்கள் உங்களின் வாழ்க்கையில் நடக்கப் போகும் முக்கிய சம்பவங்களையும் உங்களின் அதிர்ஷ்டமான நாள், அதிர்ஷ்ட நிறம் அதிர்ஷ்ட எண்களை கூறியுள்ளது. படித்து பார்த்து ஃபாலோ பண்ணுங்க வெற்றி கிடைக்கும்.

மேஷம்
இந்த வாரம் உங்களுக்கு நிறைய நல்ல விசயங்கள் நடக்கும், அப்பாவோட உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. உங்க உடல் நிலை ரொம்ப நல்லா நடக்கும். உங்க குடும்ப சூழ்நிலை ரொம்ப நல்லா நடக்கும். மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். குழந்தை விசயத்தில உங்களுக்கு ரொம்ப நல்லது நடக்கும். உங்க எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்க அன்பானவரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள், உங்க அன்பிற்குரியவருடன் நேரத்தை செலவழியுங்கள். பண வருமானம் இந்த வாரம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். வருமானம் அதிகமாவதற்கான வழி பிறக்கும். காதல் வாழ்க்கையில் நீங்கள் சில விசயங்களை சந்திக்க வேண்டியிருக்கும். உங்க பார்ட்னரோட மனதை புரிஞ்சு நடந்துக்கங்க. எந்த விசயமாக இருந்தாலும் இருவரும் ஆலோசனை செய்து முடிவு எடுங்க.
அதிர்ஷ்ட நிறம் : பீச்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

ரிஷபம்
இந்த வாரம் உங்க குடும்ப வாழ்க்கையில பல சந்தோஷங்களை காண்பீர்கள். உங்க மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அன்பானவர்களிடம் நீங்க உங்க காதலை வெளிப்படுத்துவீங்க. ஆன்மீக பயணம் செல்வீர்கள். சின்ன சின்ன செல்லச்சண்டைகள் இந்த வாரம் முடிவுக்கு வரும். உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கண்ட உணவுகளை கண்ட நேரத்தில் சாப்பிடாதீங்க. உடல் வலிகள் எட்டிப்பார்க்கும். வர்த்தகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் வரும். அலுவலகத்தில வேலை செய்யிறவங்களுக்கு பொறுப்புகள் கூடும். வீட்ல பண விசயத்தில கவனமாக இருங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. பிரச்சினைகளை ஸ்மார்ட் ஆக ஹேண்டில் பண்ணுங்க.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

மிதுனம்
இந்த வாரம் உங்களுக்கு கண் பிரச்சினைகள் வரலாம். கவனிக்காமல் விட்டால் வாரம் முழுக்க உங்களை சிரமப்படுத்தி விடும். உங்க பேச்சும் நடவடிக்கையும் உங்களை கவனிக்க வைக்கும். பேச்சில கவனமாக இருங்க இல்லாட்டி வம்புல கொண்டு போய் விட்டு விடும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல வாரம் மனதுக்கு பிடித்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். வெளிநாடு போக வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு நனவாகும். வேலை செய்யும் இடத்தில் நல்லதும் கெட்டதுமாக சில சம்பவங்கள் நடக்கும். உங்க பிரச்சினைகளை அனுபவங்களின் மூலம் சமாளிப்பீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான வேலையில் நல்ல லாபம் கிடைக்கும். பண விசயத்தில் உங்களுக்கு ரொம்ப நல்ல வாரம் பாக்கெட்டில் பணம் நிறையும் வங்கி சேமிப்பும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : டார்க் ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 45
அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக இருக்கும். சில பிரச்சினைகளையும் சவால்களையும் சந்திப்பீங்க. உங்க தன்னம்பிக்கையால நிங்க உங்க பிரச்சினைகளை எதிர்கொள்ளுவீங்க. உங்க நண்பர்கள், உறவினர்களிடம் பேசும் போது கவனமாக இருங்க இல்லாட்டி உறவு முறிந்து போய்விடும். உங்க உடல் ஆரோக்கியம் இந்த வாரம் ரொம்ப சுமாராக இருக்கும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம். குடும்ப வாழ்க்கையில அமைதியும் சந்தோஷமும் ஏற்படும். உங்க கல்யாண வாழ்க்கையில சந்தோஷத்தை அனுபவிப்பீங்க. உங்க வாழ்க்கை அல்லது காதல் துணையை ரொம்ப சாப்ட் ஆக ஹேண்டில் பண்ணுங்க. உங்க கோபத்தை அதிகப்படுத்தாதீங்க அதுவே பிரச்சினையில கொண்டு போய் விடும் ரொம்ப அமைதியாக ஹேண்டில் பண்ணுங்க.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே இந்த வாரம் வேலை செய்யும் இடத்தில உங்களுக்கு எதிர்பார்த்த ரிசல்ட் வராது. வணிகர்கள் இந்த வாரம் நிறைய ஸ்டாக் வாங்கி வைக்காதீங்க அப்புறம் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். பிசினஸ் செய்யிறவங்க கவனமாக இருங்க நஷ்டத்தை பார்த்து கவலைப்படாதீங்க அதுவே மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்க பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிங்க . வார மத்தியில உங்களுக்கு நிறைய நல்ல தகவல்கள் வந்து சேரும். உங்க குழந்தைகள் விசயத்தில கவனமாக இருங்க. மிகப்பெரிய சாதனையை படைப்பீர்கள். அதுவே உங்களை பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தும். நீங்க மாணவர்களாக இருந்தால் பரிட்சைக்கு தயாராகுங்கள். அப்புறம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். பண விசயத்தைப் பொறுத்தவரைக்கும் பழைய கடன்கள் எட்டிப்பார்க்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க இல்லாட்டி பிரச்சினையாகி விடும் ரொம்ப ஸ்டெரெஸ் ஆகாதீங்க. மன அழுத்தம் பிரச்சினையை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நாள் : திங்கட் கிழமை

கன்னி
இந்த வாரம் ரொம்ப கஷ்டங்கள் நிறைந்த வாரம். நீங்க செய்யிற சின்னத்தப்பு உங்க வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். வேலை செய்யிறவங்களுக்கு பொறுப்புகள் கூடும். வணிகர்களுக்கு இந்த வாரம் உங்க போட்டியாளர்கள் கிட்ட கவனமாக இருங்க. நீங்க சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுத்தால் வெற்றி வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். உங்க வீட்ல இந்த வாரம் சூழ்நிலை சரியாக இல்லை. பண விவகாரம் நார்மலாக இருக்கிறது. கொஞ்சம் கவனமாக இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை

துலாம்
இந்த வாரம் பிசினஸ்ல மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும். உங்க பிசினஸ் பார்ட்னர் உங்களுக்கு நல்லதே செய்வார். வேலை செய்யிறவங்களுக்கு ரொம்ப நல்லது நடக்கும். குடும்பத்தில அமைதி இருக்கும். உங்க நல்ல நடத்தை எல்லோருக்கும் நிம்மதியை தரும். காதல் கல்யாண வாழ்க்கையில நீங்க சந்தோஷமாக இருங்க. மாணவர்களுக்கு படிப்பில கவனம் சிதறும் இதுவே உங்களுக்கு சிக்கலாயிரும். நீங்க ஹார்ட் ஒர்க் பண்ணுங்க. நல்லா படிச்சா மட்டுமே உங்களுக்கு எதிர்காலம் நல்லா இருக்கும். உங்க கனவுகள் நனவாகும். பண விசயத்தில நீங்க கவனமாக இருங்க இந்த வாரம் பட்ஜெட் போட்டு செலவு செய்தால் மட்டுமே உங்களுக்கு நல்லது நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்க உடல் ஆரோக்கியத்தில நல்ல முன்னேற்றம் ஏற்படும். நோய்கள் இருந்தாலும் அது இந்த வாரத்தில சரியாகும். குடும்ப பிரச்சினைகள் சரியாகி சந்தோஷ உறவுகள் அதிகரிக்கும். உங்க வாழ்க்கையில வாழ்க்கை துணையோட சந்தோஷம் அதிகரிக்கும். உங்க ரொமான்டிக் வாழ்க்கையும் சந்தோஷத்தை தரும். வேலை செய்யும் இடத்தில் பிரசர் அதிகரிக்கும். நீங்க உங்க டார்கெட்டை கம்ப்ளீட் பண்ணுங்க. உங்க பிசியான வேலைக்கு இடையிலும் உங்க லைப் பார்ட்டனரை சந்திச்சு பேசுங்க. நீங்க திட்டமிட்டபடி செயல்படுத்துங்க வெற்றி உங்களுக்கு நிச்சயம்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நாள் : திங்கட் கிழமை

தனுசு
இந்த வாரம் நீங்க ஹார்ட் ஒர்க் பண்ணுங்க உங்க நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். வார மத்தியில் வெற்றிகள் உங்களைத் தேடி வரும். பணம் முதலீட்டில் கவனமாக இருங்க. உங்க பெற்றோர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. போன வாரம் உங்க உடல் ஆரோக்கியத்தில பிரச்சினை ஏற்பட்டது இப்போது அது சரியாகி அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படும். கல்யாணமான தம்பதிகளுக்கு இந்த வாரம் ரொம்ப நல்லது நடக்கும். மாணவர்கள் படிப்புல கவனமாக இருங்க அப்பத்தான் தேர்வுல கவனம் செலுத்த முடியும். கல்யாணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். விடுமுறை நாட்களில் குடும்பத்தோட சந்தோஷமாக பயணம் கிளம்புவீங்க. மனதளவில் நீங்க மகிழ்ச்சியா இருப்பீங்க. உங்க குழந்தைகளோட நேரம் செலவு செய்வீங்க. வேலை செய்யிற இடத்தில இன்னைக்கு நார்மலாக இருக்கும். உங்க வேலைப்பளு குறையும் உங்க எனர்ஜியை நீங்க சரியாக செலவு பண்ணுங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண் 8
அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

மகரம்
இந்த வாரம் வேலை செய்யிறவங்களுக்கு ரொம்ப நல்ல வாரம். உங்க சீனியர்ஸ் சொல்வதை காது கொடுத்து கேளுங்க கவனம் செலுத்துங்க. அதுவே உங்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட்டை கொடுக்கும். உங்க பீலிங்ஸ் எல்லாத்தையும் மறைச்சு வைக்காதீங்க. உங்க வாழ்க்கை துணையோட நீங்க சந்தோஷமாக இருங்க. இந்த வாரம் உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மகிழ்ச்சியான வாரம் மனதளவில் நீங்க நீங்க ரொம்ப ஸ்டிராங் ஆன முடிவு எடுங்க. அது கவனமாக இருக்கணும். பணம் இந்த வாரம் உங்களுக்கு நிறைய கிடைக்கும் அதே போல செலவும் அதிகமாக இருக்கும். சிறு பயணங்களை நீங்க எதிர்பாக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை

கும்பம்
இந்த வாரம் உங்களுக்கு வேலை செய்யிற இடத்தில திறமைக்கு ஏற்ப மதிப்பு கிடைக்கும். நீங்க தைரியமாக எந்த முடிவும் எடுக்கலாம். உங்க சைடு நீங்க ரொம்ப ஸ்டிராங்கா இருப்பீங்க. குடும்பமும் அமைதியாக இருக்கும். உங்க பொருளாதார நிலை ரொம்ப சந்தோஷமாக இருக்கும். உங்க பழைய முதலீடுகள் எல்லாம் அதிக லாபத்தை கொடுக்கும். காதல் ரொமான்ஸ் அதிகரிக்கும். நீங்க சிங்கிளாக இருந்தால் உங்களுக்கு இந்த வாரம் காதல் மலர வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் பயணம் போறதுக்கு சரியான வாரம் இல்லை.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

மீனம்
ரொம்ப நாள் கழித்து இந்த வாரம் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும் ரொம்ப உற்சாகமாக பாதுகாப்பாக பீல் பண்ணுவீங்க. உங்க தன்னம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்க பெர்பாமென்ஸ் அதிகமாக இருக்கும். உங்க பிசினஸ்ல நீங்க புத்திசாலின்னு நிரூபிப்பீங்க. உங்க குடும்பத்தில சந்தோஷங்கள் அதிகமாக இருக்கும். காதல் காதல் இது. இந்த வாரம் கல்யாணமான தம்பதிகளுக்கும் நல்ல செய்தி தேடி வரும். உங்க நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். பணம் சேமிப்பீர்கள். பெர்சனல் லைப்ல நீங்க சந்தோஷமாக ஃபீல் பண்ணுவீங்க. இந்த வாரம் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் அமைதியாக இருப்பீர்கள். இந்த வாரம் மாணவர்களுக்கு ரொம்ப நல்ல வாரம் சந்தோஷமான வாரம்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை



Click it and Unblock the Notifications











