இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தால் புதையல் கிடைக்குமாம்...

மார்ச் மாதத்தின் முதல் வாரம் வரப்போகிற ஏழு நாட்களில் உங்களுக்கு எப்படி இருக்கும் பிரச்சினைகள் தீருமா, புதிய வேலை கிடைக்குமா? புதிய பிரச்சினைகள் வருமா? என்று யோசிக்கிறீர்களா?

மார்ச் மாதத்தின் முதல் வாரம் வரப்போகிற ஏழு நாட்களில் உங்களுக்கு எப்படி இருக்கும் பிரச்சினைகள் தீருமா, புதிய வேலை கிடைக்குமா? புதிய பிரச்சினைகள் வருமா? என்று யோசிக்கிறீர்களா? நவகிரகங்களின் சஞ்சாரத்தினால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்பதை வார ராசிபலன்கள் மூலம் கூறியுள்ளோம் படியுங்கள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களே, சுக்கிரன் உங்க ராசியில் சஞ்சரிப்பதால் உங்களின் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். பொருளாதார மேன்மை ஏற்படும். பணவருமானம் அதிகமாகி வங்கி சேமிப்பும் கூடும். காதல் கைகூடும். கல்யாண கனவுகள் நிறைவேறும். பெண்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். காவல்துறை, தீயணைப்புத்துறையில் இருக்கும் பெண்களுக்கும் அரசு துறையில் இருப்பவர்களுக்கும் நன்மைகள் நடைபெறும். அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு புரமோசன் வரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் அதிகமாகும். நல்ல வாய்ப்புகள் வந்து கதவை தட்டும். பேச்சாற்றல் அதிகமாகும். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். இந்த வாரம் பூர்வ புண்ணிய அனுக்கிரகம் கிடைக்கிறது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சினைகளும் தடைகளும் நீங்கும். சனிபகவான் 10ஆம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு எதிர்பார்த்த வேலையை விட இன்னொரு வேலை கிடைக்கும். நல்ல சம்பளத்தில் கிடைக்கும் அந்த வேலையை ஏற்றுக்கொள்ளுங்கள். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள் நரம்பு பிரச்சினை வரும். வயிறு கோளாறுகள் வரும் எனவே கவனமாக இருங்க. இந்த வாரத்தில் சூரிய வழிபாடு பண்ணுங்க. ஆதித்ய ஹிருதயம் பண்ணுங்க நன்மைகளும் ஆற்றலும் கிடைக்கும். எதிரிகளை வெல்வீர்கள். வீரம் அதிகரிக்கும் வெற்றியும் தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ரொம்ப நல்ல வாரம். வேலையில் புரமோசன் கிடைக்கும். சொந்த ஊரில் இடமாற்றம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்கும். புதன் வக்ரமாக இருப்பதால் தாய்மாமன் உடல் ஆரோக்கியத்தை கவனிங்க. உங்க பேச்சில் நிதானமாக இருங்க. வாக்கு கொடுக்காதீங்க காப்பாற்ற முடியாமல் கஷ்டப்படுவீங்க. நிதித்துறை, வங்கித்துறையில் வேலை செய்பவர்கள் பணத்தை பத்திரமாக கையாளுங்கள். இல்லாவிட்டால் பணம் களவு போக வாய்ப்பு உள்ளது பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். நிதானமும் பொறுமையும் தேவை. குடும்பத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. இந்த வாரம் அதிர்ஷ்டம் அதிகமாகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, கொடுக்கல்-- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் வந்து விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை அடைய முடியும். அசையும், அசையா சொத்துக்கள் விஷயத்தில் கவனம் தேவை. தொழிலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை உண்டாக கூடும் என்பதால் விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு உற்சாகமான வாரம். வெற்றிகள் தேடி வரும். சந்திரன் சஞ்சாரத்தினால் உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் தேடி வரும். உங்களின் திறமை அதிகரிக்கும். என்னதான் திட்டம் போட்டாலும் அது ஜெயிக்க முடியலையே என்று யோசிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் கிடைக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் உண்டாகலாம். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் லாபங்கள் பெருகும். வியாபார ரீதியான பயணங்களால் வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு போய் வர சந்தோஷம் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

கடகம்

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருள், ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்று எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. அசையும், அசையா சொத்துக்கள் வாங்குவதில் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள் நன்மைகள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

அதிர்ஷ்ட எண் 8

அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரம். உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது, மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகள் தொல்லை நீங்கும். குடும்பத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்வீர்கள். பொருளாதார ரீதியாக ஏற்படும் நெருக்கடிகளையும் எதிர்கொள்வீர்கள். எனவே வீட்டிற்குத் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும் அதற்காக போராட வேண்டியிருக்கும். உயர்அதிகாரிகளுடன் பேசும் போது பொறுமையும் நிதானமும் தேவை. மாணவர்களுக்கு இந்த வாரம் ரொம்ப நல்ல வாரம் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். கல்விக்கடன் கிடைக்கும். அரசு வழி சலுகைகள் கிடைக்கும். செவ்வாய்கிழமை முருகப்பெருமானை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு திறமை அதிகமாகும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் வரும். எதிரிகளை வெல்லும் திறமை வரும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் வரும். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். சிக்கனமாக இருந்தால் மட்டுமே சேமிக்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் பிரச்சினைகளை தவிர்க்கவும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சொந்த வீடு வாகனம் வாங்கலாம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக நடக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். வெளிவட்டார தொடர்பினால் நன்மைகள் நடைபெறும். மாணவர்கள் கல்வியில் நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்வீர்கள். கடன்களை வசூலிப்பீர்கள். நண்பர்களை நம்பி எதையும் பேசாதீர்கள். முன்னெச்சரிக்கை தேவை. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகத்தில் வேலைகளை சிறப்பாக செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுக்களை வாங்குவீர்கள். நன்மைகள் நடைபெற குரு பகவானை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும். அருகாமையில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு போயிட்டு வாங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

அதிர்ஷ்ட எண் 8

அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு செய்யும் வேலையில் பிரமோசன் கிடைக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள். திடீர் பணவரவு வரும். உங்களுடைய கடன் பிரச்சினைகள் குறையும். இல்லத்தரசிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும். செய்யும் வேலையில் கவனமாக இருங்க. இல்லாவிட்டால் இருக்கிற வேலையும் பறிபோய்விடும். திடீர் திருமண யோகம் வந்து விட்டது. வரன்கள் தேடி வரும். மாணவர்களுக்கு வெற்றிகரமான வாரம் படிப்பில் கவனமாக இருந்தால் உங்களுக்கு நிறைய மதிப்பெண்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உணவு விசயத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். சனிப்பிரதோஷ நாளில் சிவ ஆலயம் சென்று வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம் : டார்க் ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். நிறைய முன்னெச்சரிக்கையாக இருங்க இல்லாவிட்டால் தேவையில்லாத மனக்குழப்பம் ஏற்படும், இளைய சகோதரர்கள் இடையே விட்டுக்கொடுத்து போங்க. உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் வரும். கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து கதவை தட்டும். கணவன் மனைவி உறவில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். பேச்சில் நிதானம் தேவை. கோபமாக பேசாதீங்க. விட்டுக்கொடுத்து போங்க. பணம் பலவகையில் இருந்தும் வந்து பையை நிரப்பும். செலவுகளும் சேர்ந்தே வரும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை வணங்குங்கள் நல்லதே நடக்கும். இல்லத்தரசிகள் கவனமாக இருங்க இல்லாவிட்டால் பிரச்சினைகள் தேடி வந்து அவமானப்படவேண்டியிருக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கணும். வேலைக்கு போறவங்க ரொம்ப கவனமாக இருங்க.

மாணவர்கள் தெளிவாக புரிஞ்சு படிங்க. தேர்வு முடியும் வரைக்கும் நண்பர்கள் விசயத்தில் எச்சரிக்கையாக இருங்க. சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இல்லை. திருமண பேச்சுவார்த்தை இந்த வாரம் வேண்டாம் சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும். இந்த வாரம் நீங்க எல்லாம் வல்ல முருகப்பெருமானை வணங்குங்கள் நன்மைகள் நாடி வரும். துர்க்கைக்கு போய் விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நாள் : திங்கட் கிழமை

தனுசு

தனுசு

தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும் என்றாலும் வார பிற்பகுதியில் நிதானம் தேவை. சந்திராஷ்டம் இருக்கும் போது பேச்சுவார்த்தையில் நிதானமும் கவனமும் அவசியம். முக்கிய முடிவுகளை எடுக்காதீங்க. எப்பவுமே நீங்க பேச்சில கவனமாக இருக்கவும் காரணம் ராசியில் செவ்வாய் இருக்கிறார் வாக்கு ஸ்தானத்தில் சனி இருக்கிறார் கோபமாக பேசாதீங்க. குடும்பத்தில சிலர் குழப்பத்தை ஏற்படுத்துவாங்க சண்டை வரும். விட்டுக்கொடுத்து போங்க. பூர்வீக சொத்துக்களில் வில்லங்கள் ஏற்படலாம் கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. ஹோட்டலில் சாப்பிடும் போது காரமான உணவுகள், எண்ணெய் பலகாரங்களை தவிர்த்து விடுங்கள். பாதிப்புகள் நீங்கும். முன்னெச்சரிக்கையாக இருங்க. பெண்கள் பேச்சில் கவனமாக இருங்க வண்டி வாகனங்களில் போகும் போது இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்கள். வேலைக்கு போறவங்க நிதானமாக இருங்க. புரமோசன் வரும். புதிய வேலை கிடைக்கும். கல்யாண யோகம் தேடி வந்து விட்டது வரன் வீடு தேடி வரும். மாணவர்கள் தெளிவாக புரிந்து படிங்க. பொருளாதார நிலைமை உங்களுக்கு சுமாராக இருக்கும். குல தெய்வ கோவிலுக்கு போயிட்டு வாங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

மகரம்

மகரம்

மகரம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு கோபம் அதிகம் வரும் கவனமாக இருங்க. முகம் ரொம்ப வசியமாக இருக்கும். நிறைய பேர் உங்களை தேடி வந்து பேசுவாங்க. பொருளாதார நிலைமை அற்புதமாக இருக்கும். செவ்வாய் சூரியன் கோபத்தை தூண்டி விடுவாங்க நிதானமாக பேசுங்க சொந்த பந்தங்கள் கிட்ட வாக்கு கொடுக்காதீங்க அதுவே உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடும். விட்டுக்கொடுத்து போங்க. சுக ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் உங்களுக்கு வண்டி வாகன சேர்க்கையை ஏற்படுத்தி தருவார். கடன்கள் அடைபடும். திடீர் யோகம் வரும். வெளிநாடு யோகம் தேடி வரும். வெற்றிகள் தேடி வரும். கடன் பிரச்சினைகள் தீரும். முதலீடுகள் மூலம் லாபம் வரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை பெண்கள் வாங்குவீர்கள். புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். திடீர் திருமண யோகம் தேடி வருகிறது. ஒருமுறைக்கு இரண்டு முறை விசாரித்து கல்யாணம் பண்ணுங்க. சனிக்கிழமை திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

கும்பம்

கும்பம்

இந்த வாரம் உங்களுக்கு இந்த வாரம் லாபம் நிறைய கிடைக்கும். திடீர் ஜாக்பாட் அடிக்கும். உங்க பொருளாதார நிலைமை இந்த வாரம் அற்புதமாக இருக்கப் போகிறது. கவுரவம் உயரும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தானாக தேடி வரும். தலைமையிடம் உங்க மீது நல்ல பெயர் கிடைக்கும். தடைபட்ட சுப காரியங்கள் சிறப்பாக முடியும். பெண்களுக்கு முன்னேற்றமான வாரம். வேலைக்கு செல்பவர்களுக்கு வருமானம் அதிகமாக இருக்கும். வங்கியில் சேமிப்பும் அதிகமாகும். வருமானம் பல வகைகளில் இருந்தும் வரும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சொந்தங்களில் இருந்து வரன் அமையும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க சோம்பேறித்தனத்தை விட்டு விட்டு சுறுசுறுப்பாக இருங்க. மந்தநிலை என்றாலும் தெளிவாக படிங்க. பிரச்சினைகள் தீர ராகு காலத்தில் காளி கோவிலுக்கு போய் வணங்கிட்டு வாங்க. சனிப்பிரதோசம் நாளில் சிவ ஆலயம் போயிட்டு வாங்க. பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்க.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் இந்த வாரம் ரொம்ப பொறுமையாக இருங்க. கணவன் மனைவி உறவில் கவனமாக இருங்க. சண்டை சச்சரவுகள் அதிகம் நடக்கும். உறவினர்கள் பேசும் போதும் விட்டுக்கொடுத்து போங்க விழிப்புணர்வு அவசியம். பழனி முருகனை கார்த்திகை நாளில் தரிசனம் பண்ணுங்க நிறைய நல்லது நடக்கும். ரொம்ப சுபிட்சமாக இருக்கும் குடும்பத்தில் உள்ள சுக்கிரனை குரு பார்ப்பதால் திடீர் யோகங்கள் தேடி வரும். மனதளவில் நீங்க ரொம்ப தைரியசாலி சந்தோஷமாக இருப்பீங்க. சினிமா கலைத்துறையை சேர்ந்தவங்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்புடன் செயல்பட்டு எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவார்கள். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளில் வேலை செய்யும் யோகம் வரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் அமையும். எல்லாம் வல்ல லட்சுமி நரசிம்மரை வணங்க பாதிப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நாள் : திங்கட் கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, March 1, 2020, 10:00 [IST]
Desktop Bottom Promotion