For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாரம் இந்த ராசிக்காரங்க எல்லாம் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளியே போகாதீங்க...

ஏப்ரல் மாதத்தில் மூன்றாவது வாரம். இந்த வாரம் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பணம் யாருக்கு வரும் கூடவே விரைய செலவு வருமா என்று யோசிக்கிறீர்களா?

|

ஏப்ரல் மாதத்தில் மூன்றாவது வாரம். இந்த வாரம் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பணம் யாருக்கு வரும் கூடவே விரைய செலவு வருமா என்று யோசிக்கிறீர்களா? இந்த வார ராசி பலன்கள் உங்க கேள்விகளுக்கு விடை தருகிறது. இந்த வாரம் சிம்மம், கன்னி, துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ரொம்ப கவனமாக இருங்க. எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க. வம்பு வழக்கு வரும் வீண் பிரச்சினையில மாட்டிக்காதீங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இந்த வாரம் உங்க ராசிக்கு அற்புதமான நாட்களாக இருக்கிறது. உங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். எல்லா கிரகங்களும் அற்புதமான நிலையில் இருக்கு. பதற்றமாகவே இருந்தாலும் நிறைய யோசிப்பீங்க. உங்க வேலை விசயமாக நல்ல முடிவு எடுப்பீங்க. இப்போ இருக்கிற சூழ்நிலையில நீங்க உங்க உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. சிலருக்கு பதவி உயர்வு வரும். சிலருக்கு சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பழைய கடன்களை அடைப்பீர்கள். உங்க வீட்ல சந்தோஷ நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் தொடர்பாக இந்த வாரம் பேசலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வீட்டிலேயே இருப்பதால் சிலருக்கு மன உளைச்சல் வரலாம் தினசரியும் தியானம் பண்ணுங்க. மன உளைச்சல் சரியாகும். சில விசயங்களில் அனுசரித்து செல்லுங்கள். எதற்கெடுத்தாலும் கோபம் வேண்டாம். பேச்சில் கனிவோடு பேசுங்கள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும். கண் பிரச்சினை வரலாம் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம் கவனமாக இருங்க. தினசரியும் சூரிய பகவானை வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 27

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

ரிஷபம்

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு நிறைய சந்தோஷங்கள் நடக்கும். உற்சாகமான வாரமாக அமைந்துள்ளது. திடீர் அதிர்ஷ்டங்கள் நடக்கும். முகத்தில் உற்சாகம் அதிகமாகும். பொலிவு கூடும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் குறைவாக இருக்கும் சிலருக்கு விரைய செலவுகள் வரலாம். அரசு மூலம் பணம் வரும். உங்களின் கடன் நிவர்த்தியாகும். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். விரைய செலவுகள் வேண்டாம் சிக்கனத்தை கடைபிடியுங்கள். அப்பாவிற்காக செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பொறுமையாக பேசுங்கள் சண்டைகள் வேண்டாம் சமாதானமாக பேசுங்கள். காதலிப்பவர்கள் கவனம். வீட்டிற்குள்ளேயே பத்திரமாக இருந்தால் பாதுகாப்புக்கு பிரச்சினையில்லை.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக்கிழமை

மிதுனம்

மிதுனம்

இந்த வாரம் உங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். குடும்பத்தில எல்லோரும் சேர்ந்து இருப்பதால நீங்க உற்சாகமாக இருங்க. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்க. வீட்டை விட்டு எந்த காரணத்திற்காகவும் வெளியே போகாதீங்க. உடன்பிறந்தவர்கள் உதவி கிடைக்கும். வாய் பேச்சுவார்த்தையில் கவனமாக இருங்க வம்பு வராம பார்த்துக்கங்க, பண விசயங்களில் சிக்கனமாக இருங்கள். சவால்களை சந்திப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. அஷ்டமத்து சனி, குரு ஆட்டிப்படைக்கு உணவு விசயத்தில கவனமாக இருங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. சந்தோஷமாக இந்த மாதத்தை கடத்துங்க. கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

இப்போது இருக்கிற சூழ்நிலை உடல் ஆரோக்கியம்தான் ரொம்ப முக்கியம் நோய்கள் ஏற்படலாம் கவனமாக இருங்க. இந்த வாரத்தில் சுப காரிய பேச்சுவார்த்தை எதுவும் வேண்டாம். காதலை புரபோஸ் பண்ண இது நல்ல வாரம் இல்லை. ஒத்திப்போடுங்க மக்களே.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

கடகம்

கடகம்

உங்களுக்கு இந்த வாரம் பண வரவு அதிகமாக இருக்கும். உங்களின் நேர்மறை எண்ணம் அதிகமாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அற்புதமாக இருக்கும். உங்க ஆற்றல் அதிகமாகும். உங்க வருமானம் அதிகமாகும். உங்களின் பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாகும். இதனால் திறமை அதிகமாகும். சொந்த வாழ்க்கையில பிரச்சினை வரலாம் கவனமாக இருங்க. குடும்ப வாழ்க்கையில கவனமாக இருங்க. உங்க பெர்சனல் வாழ்க்கையில விட்டுக்கொடுத்து போங்க. திருமணம் செய்தவர்கள், காதலிப்பவர்கள் தேவையில்லாத பேச்சுக்களை பேசாதீங்க. வீட்டில் இருந்தே வேலை செய்தாலும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரம் உங்க நிதி நிலைமை இந்த வாரம் நல்லாவே இருக்கும். 20 ஆம் தேதி இரவு வரை சந்திராஷ்டமம் உள்ளது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நாள் : திங்கட்கிழமை

சிம்மம்

சிம்மம்

உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும் அதிர்ஷ்டம் தேடிவரும். புதிய வேலைகள் கிடைக்கும். இருக்கிற வேலையை விடலாமா புதிய வேலைக்கு போகலாமா என்று யோசிக்காதீங்க. இந்த வாரம் வேலை விசயமாக எந்த முடிவும் எடுக்காதீங்க. எதிரிகள் தொல்லை நீங்கும் என்றாலும் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். எதிர்ப்பும் தடைகளும் ஏற்படும். ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருங்க. ரொம்ப கவனமாக இருங்க. காதலை சொல்ல இது நல்ல நாள் இல்லை. யார் கூடவும் ரொம்ப கோபமாக பேசாதீங்க. வண்டி வாகனங்களில் வெளியே போகவே போகாதீங்க. போனாலும் அடிதான் விழும் வீட்டுக்குள்ள இருக்கும் போதும் சண்டை சச்சரவு வீணான விவாதங்கள் வரும் கவனமாக பேசுங்க. இப்ப இருக்கிற சூழ்நிலையில ரொம்ப அமைதியாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

கன்னி

கன்னி

இந்த வாரம் திடீர் அதிர்ஷ்டம் மூலம் பண வருமானம் வரும். பண விசயங்களில் சில முன்னேற்றங்கள் வரும். எந்த முடிவு எடுப்பதற்கு முன்னாடியும் ஒருதடவைக்கு இரண்டு தடவை தெளிவா பேசி முடிவு பண்ணுங்க. திருமணம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். சூரியன் எட்டில் இருப்பதால் பேச்சில் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில் போகும் போது நிதானமாக இருக்கணும் கூடுமானவரைக்கும் வெளியே போகாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுப காரிய முயற்சிகள் வெற்றியடையும். உங்க பொருளாதார தேவைகள் பூர்த்தியடையும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் முதலீடுகள் எதுவும் வேண்டாம். வேலையில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை ஏற்படும். சூரியனால் வயிற்றில் சில பிரச்சினைகள் வரும். சத்தான சாப்பாடா சாப்பிடுங்க. கவலைப்படாதீங்க. எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கலாம். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருந்தாலும் வார இறுதியில் ஏப்ரல் 22 பகல் 1 மணி முதல் ஏப்ரல் 24 இரவு வரை இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

துலாம்

துலாம்

களத்திர ஸ்தானத்தில் இருந்து உச்சம் பெற்ற சூரியனின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து போகும் விட்டுக்கொடுத்து போங்க. அலைச்சல் வேண்டாம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வேலையில் எதிர்பார்த்த இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கலாம், பணம், விலை உயர்ந்த பொருட்களையும் கவனமாக பார்த்துக்கங்க. இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்பு ஏற்படும். சுய தொழில் செய்பவர்களுக்கு மந்தமான நிலையே ஏற்படும் கவனமாக இருங்க. இப்போது உள்ள சூழ்நிலையில் எங்கேயும் போக முடியலையே என்ற வருத்தம் ஏற்படும். கவனமாக இருங்க. சிவபெருமானை நினைத்து வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

சகோதரர்களால் நன்மை கிடைக்கும். ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 2 நாட்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில வீட்டை விட்டு வெளியே போகாதீங்க நல்லதில்லை.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

இந்த வாரம் உங்களுக்கு ரொம்ப நல்ல வாரம். மனதளவில் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. நிறைய நல்லது நடக்கும். குடும்பத்தில இருந்த பிரச்சினைகள் தீரும். செல்வம் செல்வாக்கிற்கு குறை எதுவும் இருக்காது. வேலையில் மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும். தைரியமும் ஆற்றலும் அதிகமாகும்.

பணவரவு பல வழிகளில் இருந்தும் வரும். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு செய்ய வேண்டாம். நிதானமாக அடி எடுத்து வைப்பது நல்லது. நினைத்த காரியம் நிறைவேறும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வீடு நிலம் வகையில் பணம் வரவு கிடைக்கும். அப்பா உடன் சச்சரவு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் சரக்குகள் அனைத்தும் விற்று தீரும். வரவே வராது என்று நினைத்த பணம் வீடு தேடி வரும். அதே நேரத்தில் இந்த வாரம் பங்குச்சந்தை முதலீடுகள் எதுவும் தேவையில்லை. வியாபாரத்தில் கவனமாக இருங்க. வீட்லையே ரெஸ்ட் எடுக்கறீங்க நல்லா சத்தான உணவுகளை சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய்கிழமை

தனுசு

தனுசு

இந்த வாரம் திடீர் அதிர்ஷ்டமும் பாக்கியமும் கிடைக்கப் போகிறது. எதையும் போராடி வெற்றி பெறுவீர்கள். வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நன்மைகள் தேடி வரும். பணவரவு அற்புதமாக இருக்கும். உங்க வார்த்தைகளில் கவனமாக இருங்க. கோபமாக பேசாதீங்க. வீட்ல விட்டுக்கொடுத்து போங்க. இந்த மாதம் சொத்துக்கள் வாங்கலாம் ஆனால் அதன் தாய் பத்திரம் மூல பத்திரங்களை கவனமாக பார்த்து வாங்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும், பல நாட்களாக வராத பணம் கைக்கு வரும். இப்ப இருக்கிற சூழ்நிலையில ரொம்ப அமைதியாக இருங்க. உங்க சந்தோஷங்களும் கூடும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருங்க நிதானமாக இருப்பது நல்லது. இந்த வாரம் உங்களின் வருமானத்திற்கு ஒரு வழி பிறக்கும். குடும்ப உறவினர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகமாகும். மாணவர்கள் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நாள் : வியாழன்கிழமை

மகரம்

மகரம்

இந்த வாரம் வேலை விசயமாக நிறைய நன்மைகள் நடக்கும். வேலையில மாற்றங்கள் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாரம் முயற்சி செய்யலாம். நல்ல வேலை கிடைக்கும். வேலை பார்த்தது போதும் ஓய்வெடுக்கலாம் விஆர்எஸ் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாரம் அதற்கான முயற்சி செய்யலாம். வேலையில் நிம்மதி கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். உங்களின் மன அழுத்தத்தை போக்கும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்களின் திறமையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். விஐபிக்களின் உதவி வீடு தேடி வரும். வெளியூர், வெளிநாடு போக வேண்டும் என்கிற எண்ணங்களை மூட்டை கட்டி வையுங்கள். உங்களின் விருப்பங்கள் தடையின்றி நிறைவேறும். வருமானம் அதிகம் வரும் கடன்கள் குறையும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நாள் : சனிக் கிழமை

கும்பம்

கும்பம்

உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் தைரியம் தன்னம்பிக்கை கூடும். பணவரவு அபரிமிதமாக இருந்தாலும் இந்த வாரம் உங்களுக்கு நிறைய விரைய செலவுகளும் ஏற்படும். ரொம்ப கவனமாக இருங்க. உங்களுக்கு சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். இந்த நேரத்தில இருக்கிய வேலையை விட்டு விட்டு எந்த புது வேலைக்கும் மாறாதீங்க. இருக்கிற வேலையை தக்கவைக்க பாருங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. பொருளாதார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுக்கும் போது யோசித்து எடுங்க. குடும்ப விசயத்தில விட்டுக்கொடுத்து போங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். உங்களுக்கு இந்த வாரம் பணவரவு தாராளமாக இருக்கும். விரைய செலவுகள் அதிகமாக இருக்கும். வரவு நிறைய வருதே என்று அதிகம் செலவு பண்ணாதீங்க. அப்புறம் பணம் சேமிக்க முடியாம போயிரும். வேலையில் இருப்பவர்களுக்கு டென்சன் குறையும். பெரிய அளவில் பண முதலீடு செய்யாதீங்க. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க இல்லாவிட்டால் சில பிரச்சினைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வயலட்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

மீனம்

மீனம்

இந்த வாரம் உங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபிட்சம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் பேசும் போது கவனமாக பேசுங்க. கோபமாக பேசாதீங்க. உங்க லாப ஸ்தானம் வலுவாக இருக்கிறது. கிரகங்களின் கூட்டணி நிறைய மாற்றங்களை தரப்போகிறது. புதிய வேலை கிடைக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். நிறைய பண வருமானம் வரும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். வங்கியில் கடன் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் நன்மையில் முடியும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். இந்த வாரம் உங்களுக்கு நிறைய பாசிட்டிவ் எண்ணங்கள் உருவாகும். வீட்டில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் திறமையாக செயல்படுவீர்கள். சிலருக்கு தகுதிக்கேற்ற புதிய வேலை கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் உங்களுக்கு பணம் வரவு வரும். சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க. உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் இல்லாவிட்டால் பிரச்சினையாகிவிடும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள் : வியாழக் கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weekly Horoscope For 19th April 2020 To 25th April 2020

Check out the weekly horoscope for 19th april 2020 to 25th april 2020 for all zodiac signs.
Desktop Bottom Promotion