For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு சோதனை மேல் சோதனையா வரப்போகுது எச்சரிக்கை..!

இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் நிறைய பணம் வருமா? விரைய செலவுகள் மட்டுமே வருமா? உங்க கனவுகள் நிறைவேறுமா? உங்களுக்கு என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்பதை வார ராசிபலன்கள் மூலம் கூறியுள்ளோம் படியுங்

|

இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் நிறைய பணம் வருமா? விரைய செலவுகள் மட்டுமே வருமா? உங்க கனவுகள் நிறைவேறுமா? உங்களுக்கு என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்பதை வார ராசிபலன்கள் மூலம் கூறியுள்ளோம் படியுங்கள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு ரொம்ப நல்ல வாரம் கணவன் மனைவி இடையே காதல் அதிகரிக்கும். குரு உங்க ராசியை பார்க்கிறார். சுக்கிரன் உங்க ராசியில் அமர்ந்திருக்கிறார். உங்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். உங்க வாழ்க்கையில நிறைய சுப நிகழ்ச்சிகள் நடைபெறப்போகிறது. நீங்க நினைத்தது எல்லாம் நிறைவேறும். உங்களுக்கு பொருளாதார நிலை உயரும். பல வழிகளில் இருந்தும் பணவரவு வரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பெண்களுக்கு இது அற்புதமான வாரம். வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மதிப்பு மரியாதை தேடி வரும். புரமோசன் தேடி வரும். சிலருக்கு கேட்ட இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளை அழகாக எதிர்கொள்வீர்கள். உங்க கனவுகள் நனவாகும். தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், குடும்ப வருமானம் அதிகரிக்கும். மார்ச் 14, 2020 காலை 6.41 மணி முதல் மார்ச் 16,2020 காலை 11.12 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம். கோவிலுக்கு போங்க பிரச்சினை குறையும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நாள் : ஞாயிற்றுக் கிழமை

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே இந்த வாரம் நீங்க செய்யும் செயல்கள் எல்லாம் வெற்றி பெறும், சொந்தமாக செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் சஞ்சாரம் உங்களுக்கு அற்புதமாக உள்ளது. உங்களுடைய பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். செய்யும் வேலைகளில் திருப்தியும் நிம்மதியும் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் விட்டுக்கொடுத்து போங்க. தேவையற்ற பேச்சுகளை தவிர்த்து விடுங்கள். இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு இந்த வாரம் செலவு அதிகமானலும் வருமானமும் அதிகமாக வரும். மார்ச் 16, 2020 காலை 11.12 மணி முதல் மார்ச் 18,2020 இரவு 07.25 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். வெல்லம் சேர்த்த உணவு சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம். காய்ச்சல் தலைவலி வந்தால் கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 20

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களே இந்த வாரம் எக்கச்சமான நன்மைகள் நடைபெறும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். செல்வம், செல்வாக்கு புகழ் கூடும். ரியல் எஸ்டேட் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும், புதிதாக வீடு நிலம் வாங்குவீர்கள். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும், உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். மனதில் ஏதோ குழப்பமாக இருப்பீங்க ஏழாம் வீட்டில் இருந்து குரு உங்க ராசியை பார்த்தாலும் உங்க குடும்பத்தில சின்னச் சின்ன குழப்பங்கள் நீடிக்கும். கணவன் மனைவியோ காதலர்களோ இந்த வாரம் சின்னச் சின்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வீண் வம்பு வழக்குகளை தவிர்த்து விடுங்கள். பெண்கள் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். பணம் விசயங்களில் கவனமாக இருங்க யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க கடன் வாங்கி கொடுக்காதீங்க. வாக்கு கொடுக்காதீங்க மாட்டிக்கொள்வீர்கள். மாணவர்கள் தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சினைகள் தீரும். அடிப்படையான வசதிகள் கிடைக்கும். உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுங்கள். சளி இருமல் தொந்தரவு வரும் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 34

அதிர்ஷ்ட நாள் : வியாழக் கிழமை

கடகம்

கடகம்

இந்த வாரம் உங்க ராசிக்கு ராசி நாதன் சந்திரன் நிறைய சந்தோஷங்கள் தருவார். உங்களுக்கு தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும், தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீட்டில் உடன் பிறப்புகளுடன் சச்சரவு உண்டாகும், கூர்மையான பொருட்களால் காயம் ஏற்படும் கவனம் தேவை. தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும், படிப்பில் கவனம் தேவை.

உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கலையே என்ற ஏமாற்றம் ஏற்படும். இன்கிரிமென்ட் பேச்சுவார்த்தை உங்களுக்கு நன்மையில் முடியும். கோபமாக பேசாதீங்க வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக போங்க. புது வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல வேலைகள் கிடைக்கும். இருக்கிற வேலைகளை விட்டு விட வேண்டாம். சுய தொழில் செய்பவர்களுக்கு சில சங்கடம் வரலாம் கவனம் தேவை. பெண்களுக்கு இந்த வாரம் பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. அலைச்சல் அதிகமாகும் மருத்துவ செலவுகள் ஏற்படும். மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து ஒருமுறைக்கு இருமுறை படித்து எழுதி பாருங்க. தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, இந்த வாரம் சின்னச் சின்ன தொல்லைகள் ஏற்படும். ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை சொல்லும் எனவே தேவையற்ற வார்த்தைகளை விட வேண்டாம். அலுவலகத்தில் வேலையில் மனம் ஈடுபாடு இருக்காது. குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும், உல்லாசப் பயணம் செல்வீர்கள். இந்த வாரம் உங்களுக்கு நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். தாராள பணவரவு மனதில் நிம்மதியை தரும். சொந்தக்காரர்களுடன் பேசும் போது கவனமாக இருங்க. குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. நீங்க நினைத்த காரியம் நிறைவேறும். பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சந்தோஷம் அதிகமாகும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். ஒருமுறைக்கு இருமுறை நன்றாக எழுதிப்பாருங்கள். உங்க எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும். குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். தினசரி சூரிய நமஸ்காரம் பண்ணுங்க டென்சனும் கோபமும் குறையும் பாதிப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 11

அதிர்ஷ்ட நாள் : திங்கள் கிழமை

கன்னி

கன்னி

புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த வாரம் அரசு வேலைக்காக வெளியூர் செல்லும் நிலை உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள். தொழிலில் பணத்தை முதலீடு செய்வதில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பணம் விசயத்தில் கவனமாக இருங்க. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் வரலாம். ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை, வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்துக் கொள்ளக் கூடாது. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. சுறுசுறுப்பாக படித்தால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும். தேர்வு நேரம் என்பதால் நன்றாக படிங்க தெளிவாக எழுதி பாருங்க. பெரியவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவு எடுங்க. எதையும் யோசித்து முடிவு பண்ணுங்க. இல்லாவிட்டால் உங்களுக்கு கஷ்டம்தான். இல்லத்தரசிகள் இந்த வாரம் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பெண்கள் இந்த வாரம் வேலையில் கவனம் செலுத்துங்கள். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு போய் துளசி மாலை போட்டு வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 20

அதிர்ஷ்ட நாள் : வியாழக் கிழமை

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம் திடீர் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும், அடிக்கடி வெளியூர் செல்வீர்கள். இந்த வாரம் திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடிவடையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகமாகும். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும். உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் வீண் செலவுகள் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். உடன் வேலை செய்பவர்களுடன் அனுசரித்து போங்க. மாணவர்கள் அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும் ஒருமுறைக்கு இருமுறை படித்து எழுதி பாருங்கள். அர்த்தாஷ்டம சனி காலம் என்பதால் சனிபகவானை சரணடையுங்கள். உங்க அப்பாவுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். புத்தியில் கலக்கம் உண்டாகும் கவனமாக இருங்க. பேச்சிலும் நிதானமாக பேசுங்க.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு தாராள பணவரவு வரும் காரணம் குருவின் சஞ்சாரம் சந்தோஷத்தை தரும். இந்த வாரம் நீங்க எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் கணவன் மனைவி இடையே பேச்சில் சந்தோஷம் கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக நடைபெறும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இது லாபகரமான வாரம். வேலை செய்பவர்களுக்கு சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடல் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் யாரிடமும் விதண்டா விவாதம் செய்யாதீர்கள். நீங்க தேவையற்ற வீண் பேச்சினை தவிர்க்கவும், வாயை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் வம்பில் மாட்டிவிடும். சிவ வழிபாடு ரொம்ப நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நாள் : ஞாயிற்றுக் கிழமை

தனுசு

தனுசு

குருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே உங்க மனதில் எரிச்சல் அதிகரிக்கும். நீங்க கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், வீட்டிலும் அலுவலகங்கள் பொது இடங்களில் நாவடக்கம் தேவை. உங்க தைரியம் தன்னம்பிக்கை கூடும். எதையும் எளிதில் சமாளிப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க யாரை நம்பியும் பணத்தை முதலீடு செய்யாதீங்க. இந்த வாரம் பயணங்களை தவிர்த்து விடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சின்ன பிரச்சினைகள் வந்தால் கூட உடனே மருத்துவமனைக்கு போங்க மருத்துவர்களின் ஆலோசனை எடுத்துக்கொள்ளுங்கள். வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் ரொம்ப கவனமாக இருங்க. மாணவர்கள் இந்த வாரம் நன்றாக படித்து தேர்வுகளை எதிர்கொள்வீர்கள். உங்க கல்வித்திறன் சிறப்பாக இருக்கும். அதே நேரத்தில் நட்பு வட்டாரத்தில் கவனமாக இருங்க. பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ஜென்ம சனி விலகி விட்டது என்றாலும் பாத சனியாக இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பேச்சில் நிதானம் தேவை. கோபப்பட்டு பேச வேண்டாம். அக்கம்பக்காத்தாரால் நன்மை உண்டாகும். அதே நேரம் உடலில் அசதி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 27

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

மகரம்

மகரம்

சனியை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே இந்த வாரம் நீங்க அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்படும், அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் வரும். சுக்கிரன் உங்களுக்கு நிறைய சுகங்களை தருவார். நீங்க இந்த வாரம் பொருளாதார ரீதியாக சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நெருங்கியவர்களுக்கு பணம் கொடுக்க முடியலையே என்பதால் சில சங்கடங்கள் வரலாம். இதனால் வீட்டில் நிம்மதி குறைவும் வீண் அலைச்சலும் ஏற்படும். பழைய வீட்டை விற்றுவிட்டு புது வீட்டை வாங்குவீர்கள் அல்லது பழைய வீட்டை புதுப்பீர்கள். உங்களுக்கு ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே பேச்சில் சில பிரச்சினைகள் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளை இந்த வாரம் தவிர்த்து விடுங்கள். உங்க பேச்சிற்கு மதிப்பு அதிகமாகும் என்றாலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். இந்த வாரம் பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக முதலீடு செய்ய வேண்டாம் தவிர்த்து விடுங்கள். வேலை செய்பவர்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். மனதில் தைரியம் கூடும் உங்க வங்கி சேமிப்புகள் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். தேர்வுகளை பயமின்றி எதிர்க்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 19

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக்கிழமை

கும்பம்

கும்பம்

இந்த வாரம் உங்களுக்கு இனிமையான வாரமாக அமையும், தொழிலில் லாபம் அதிகரிக்கும், வங்கி சேமிப்பு உயரும். பல வழிகளில் இருந்தும் வரும் பணம் வரும். கடன்கள் குறையும். குடும்பத்தில் சந்தோஷமும் சுபிட்சமும் ஏற்படும். அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய பணம் கிடைத்துவிடும். பேச்சில் நிதானம் தேவை கோபமாக பேசாதீங்க. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். கணவன் மனைவி இடையே சந்தோஷமும் அந்நியோன்னியமும் அதிகரிக்கும். சொந்த பந்தங்கள் சாதகமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை செய்பவர்களுக்கு இது ரொம்ப நல்ல வாரம், எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்களின் விருப்பம் நிறைவேறும். வேலை விசயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல வாரம். தேர்வுகளை நன்றாக எழுதுவீர்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 28

அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

 மீனம்

மீனம்

இந்த வாரம் பணமழையில் நனையப்போறீங்க. உங்க வீட்டுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கப் போகிறது. உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உங்க வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரப் பதவி கிடைக்கும். உங்க வேலையில் சுறுசுறுப்பு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் ஏற்படும். வர்த்தகத்தில் லாபம் அதிகமாகும். அலுவலகத்தில் வேலைகளை சுறுசுறுப்பாக செய்வீர்கள் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். தாராள பணவரவால் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். சொத்துக்கள் விற்பனையில் லாபம் வரும். ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரலாம். மந்த நிலைகள் நீங்கும். ஆன்மீக பயணங்கள் மன அமைதியை தரும். வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 30

அதிர்ஷ்ட கிழமை : திங்கட்கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weekly Horoscope For 15th March 2020 To 21st March 2020 In Tamil

Check out the weekly horoscope for 15th march to 21st march for all zodiac signs.
Story first published: Sunday, March 15, 2020, 10:40 [IST]
Desktop Bottom Promotion