Latest Updates
-
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
வார ராசிபலன் (08.01.2023-14.01.2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப் போகுது...
அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? ஜனவரி 08, 2023 முதல் ஜனவரி 14, 2023 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான பலன்கள் இதோ!

நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே ஜனவரி 08, 2023 முதல் ஜனவரி 14, 2023 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் நல்ல வெற்றியைப் பெறலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த காலகட்டத்தில் உங்கள் அனைத்து வேலைகளும் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலை நன்றாக இருக்கும். வார இறுதியில், உங்களுக்கு நீண்ட பயணத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நாள்: புதன்

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் பணப் பிரச்சனை தீர்க்கப்படும். திடீரென்று பணம் கிடைக்கும். இருப்பினும் உங்கள் நிதி முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும். வெற்றி பெற கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் நீங்கள் காயமடையலாம். குறிப்பாக வாகனத்தை ஓட்டும் போது முழு எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! வாரத்தின் ஆரம்ப நாட்கள் உங்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும். இந்த வாரத்தில் உங்கள் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்களின் முக்கியமான சில வேலைகள் முழுமையடையாமல் போகலாம். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். விரைவான லாபம் ஈட்ட தவறான பாதையைத் தவிர்க்க வேண்டும். பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாரத்தில் செலவுகள் அதிகம் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பை வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நிலை பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு வேலையில் முழுக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. கடினமாக உழைத்தால், நற்பலன்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். உங்கள் வியாபாரம் புதிய திசையில் நகரும். பணத்தைப் பொறுத்தவரை, இந்த நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில்அலட்சியமாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக உங்கள் கவலைகள் அதிகரிக்கலாம். மேலும், உங்கள் துணையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக பயணம் செய்ய நேரிடலாம். இது தவிர, உயர் அதிகாரிகளின் அழுத்தமும் உங்கள் மீது இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் சிரமமாகவும் சோர்வாகவும் உணரலாம். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தந்தை வழியில் லாபம் கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரத்தில் மாற்றம் வரும். நீங்கள் விரும்பிய இடமாற்றம் பெறலாம் அல்லது பதவி உயர்வு பெறலாம். மறுபுறம், வணிகர்கள் லாபம் ஈட்ட பல வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக உங்களால் உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை என்றால், இந்த வாரத்தில் முடியும். உழைக்கும் மக்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த பொன்னான வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டின் உறுப்பினர்களுடன் உங்கள் உறவு வலுவாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்க, உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நிதி முயற்சிகள் வெற்றியடையும். இதனுடன், பழைய கடனில் இருந்தும் விடுதலை பெறலாம். வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடினமாக உழைப்பீர்கள். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் பல குறுகிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தேவையில்லாமல் சந்தேகம் கொள்ளும் உங்கள் பழக்கம் உங்கள் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை மறைத்துவிடும். ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நாள்:சனிக்கிழமை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் பழைய நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். ஒரு வேலையைச் செய்தால், உங்கள் சிறிய வேலையைக் கூட மனதார செய்யுங்கள். தவறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். மறுபுறம், வணிகர்கள் அவசரத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கைத் துணையுடன் மிகவும் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வீட்டின் சூழல் சரியாக இருக்காது. ஒரு பழைய பிரச்சினை வெளிப்படும், இதனால் வீட்டில் விவாதம் சாத்தியமாகும். இந்நிலையில் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. உங்கள் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரம் கலவையாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! வாரத்தின் ஆரம்பம் சற்று கடினமாக இருக்கும். நிறைய வேலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், போகபோக உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். பணிச்சுமை குறையும் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நாள்: புதன்

மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் பணத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். உங்களுக்கு புதிய வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சில காலமாக உங்கள் துணையுடன் உங்களுக்கு விரிசல் இருந்தால், இந்த காலகட்டத்தில் எல்லாம் சரியாகும். உங்கள் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். வேலையில் இருப்பவர்கள் தங்கள் நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் சிக்கலில் இருக்கக்கூடும். மறுபுறம், வணிகர்கள் புதிய வேலையைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், இந்த நேரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நாள்: திங்கள்



Click it and Unblock the Notifications