Latest Updates
-
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வித்யாரம்பம் என்றால் என்ன? இந்த சடங்கு உங்க குழந்தைக்கு என்ன நன்மையை வழங்கும் தெரியுமா?
வித்யாரம்பம் விழாவானது ( வித்யா என்றால் "அறிவு", ஆரம்பம் என்றால் "துவக்கம்") கோயில்களிலும் வீடுகளிலும் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நாளில் கோயில்களுக்கு வந்து தங்கள் குழந்தைகளை கற்றலில் ஈடுபடுத்துவது வழக்கம் .
வித்யாரம்பம் (Vidyarambham) என்பது ஒரு இந்து சமய சடங்காகும். இது பாரம்பரியமாக விஜயதசமி நாளில் கேரளம், தமிழ்நாடு, கடலோர கர்நாடகம் போன்ற பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்கு முறையாக இசை, நடனம், மொழிகள், நாட்டுப்புற கலை போன்றவை கற்ப்பிப்பது துவங்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு எழுத்துக்களை கற்பிக்கும் முக்கியமான விழாவை உள்ளடக்கியது. தமிழ்நாட்டில் இதை முதல் எழுத்து என்று அழைக்கின்றனர். ஒடிசாவில் இது காதி சுவான் என்று அழைக்கப்படுகிறது. அங்கு இது குறிப்பாக விநாயக சதுர்த்தி மற்றும் வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.

வித்யாரம்பம் ஒரு அழகான சடங்கு மற்றும் ஒரு இந்து பாரம்பரியம். இந்த விழாவில் குழந்தைகள் அறிவு உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இது அடிப்படையில் குழந்தைகளுக்கான சடங்கு. இந்த சடங்கு குழந்தைகளை பாடத்திட்டத்தின் எழுத்துக்களில் முறையாக அறிமுகப்படுத்துகிறது. இக்கட்டுரையில் வித்யாரம்பம் என்றால் என்ன? நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

வித்யாரம்பத்திற்கு சரியான வயது என்ன?
இது அறிவின் தொடக்கத்தைக் குறிப்பிடுவதால், இந்த விழா 2-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்படுகிறது. இது நிறைய அறிவு கிடைக்க ஆசீர்வதிக்கப்படுவதற்காக, சிறுவர் மற்றும் சிறுமியர் இருவருக்கும் செய்யப்பட வேண்டும்.

வித்யாரம்பம் செய்ய உகந்த தேதிகள் என்ன?
சரஸ்வதி தேவி அறிவு மற்றும் ஞானத்தின் தெய்வமாக கருதப்படுகிறார், எனவே வித்யாரம்பம் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த விழா பொதுவாக நவராத்திரியின் கடைசி நாளில், அதாவது விஜயதசமியன்று நடத்தப்படும். இந்த ஆண்டு, 2021ல் அக்டோபர் 15 அன்று இந்த விழா கொண்டாடப்படுகிறது.

கற்றலை தொடங்கும் நாள்
விஜயதாசமி நாள் என்பது நவராத்திரி விழாவின் பத்தாவதும், இறுதி நாளுமாகும். இந்த நாளானது எந்தத் துறையிலும் கற்றலைத் தொடங்க நல்ல நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் கற்றலின் துவக்க விழாவானது ஆயுத பூஜை சடங்குடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. வழக்கமாக விஜயதசமி நாளில்தான் பூஜைக்காக வைக்கப்பட்ட கருவிகள் மீண்டும் பயன்படுத்தப்பாட்டுக்கு எடுக்கப்படுகிறன்றன. கல்வி தெய்வமான, சரஸ்வதி மற்றும் ஆசிரியர் (குரு) ஆகியோருக்கு குரு தட்சணை கொடுத்து மரியாதை செய்ய வேண்டிய நாளாக இது கருதப்படுகிறது. குருதட்சினையானது வழக்கமாக வெற்றிலை, பாக்கு, சிறிது பணம், புதிய ஆடைகள் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.

கோயில் மற்றும் வீடு
வித்யாரம்பம் விழாவானது ( வித்யா என்றால் "அறிவு", ஆரம்பம் என்றால் "துவக்கம்") கோயில்களிலும் வீடுகளிலும் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நாளில் கோயில்களுக்கு வந்து தங்கள் குழந்தைகளை கற்றலில் ஈடுபடுத்துவது வழக்கம் .

என்ன எழுத வேண்டும்?
எழுதத் துவக்கும் சடங்கின்போது பொதுவாக மந்திரத்தை எழுதி துவங்கப்படுகிறது. குழந்தைகள் தமிழெழுத்தை ஆரம்பிக்கும்போது ஓம் நமச்சிவாய என்றோ ஓம் நமோ நாயாரணாய என்றும் துவங்குகிறார்கள்.

அரிசியில் எழுதுவது
இந்த சடங்கின்போது ஒரு குருவின் முன்னிலையில், மணல் அல்லது அரிசி பரப்பப்பட்ட தட்டில் குழந்தையின் விரல் பிடித்து மந்தரம் எழுதப்படுகிறது. பின்னர், குருவானவர் குழந்தையின் நாக்கில் மந்திரத்தை நெல் கொண்டு எழுதுகிறார். மணலில் எழுதுவது நடைமுறையை குறிக்கிறது. தானியங்களில் எழுதுவது அறிவைப் பெறுவதைக் குறிக்கிறது, இது செழிப்பைக் குறிக்கிறது. தங்கத்தைக் கொண்டு நாக்கில் எழுதுவது கல்விக் கடவுளின் அருளைக் குறிக்கிறது, இதன் மூலம் ஒருவர் உண்மையான அறிவுச் செல்வத்தை அடைவதாக கருதப்படுகிறது.

இறுதிகுறிப்பு
இப்போதெல்லாம், வித்யாரம்பம் விழாவானது அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. சடங்குகளில் சிறிய வேறுபாடுகள் உள்ளன. இந்த சடங்கு குறிப்பாக கோயில்களைத் தவிர கேரளம் முழுவதும் பல தேவாலயங்களிலும் செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications
