Latest Updates
-
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்!
சுக்கிர பெயர்ச்சியால் புத்தாண்டில் இந்த 4 ராசிக்காரங்க பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்..
டிசம்பர் 29 ஆம் தேதி சுக்கிரன் சனி ஆளும் மகர ராசிக்கு செல்கிறார். இந்த ராசியில் 2023 ஜனவரி 21 ஆம் தேதி வரை இருப்பார். இந்த சுக்கிர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் பாதகமான பலன்களைப் பெறவுள்ளார்கள்.
ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, காதல், ஆடம்பரம், மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் அவ்வப்போது ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை, நிதி நிலை, சந்தோஷம் ஆகியவற்றில் காணப்படும். தற்போது சுக்கிரன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தின் இறுதியில் சுக்கிரன் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் டிசம்பர் 29 ஆம் தேதி சுக்கிரன் சனி ஆளும் மகர ராசிக்கு செல்கிறார். இந்த ராசியில் 2023 ஜனவரி 21 ஆம் தேதி வரை இருப்பார். இந்த சுக்கிர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் பாதகமான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
சுக்கிர பெயர்ச்சியால் மினது ராசிக்காரர்களின் நிதி நிலை பாதிக்கப்படும். அதுவும் செலவுகள் அதிகரிக்கும். இதனால் உங்களின் தூக்கம் பாதிக்கப்படும். மேலும் காதலிப்பவர்கள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களால் பணத்தை சேமிக்க முடியாது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பல் வலியால் அவதிப்படக்கூடும். இக்காலத்தில்

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் கடக ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பயணம் மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் செய்பவர்களும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் குறைவான லாபமே கிடைக்கும். குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆரோக்கியமும் சற்று பாதிக்கப்படும்.

விருச்சிகம்
சுக்கிர பெயச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் வேலையில் அதிருப்தி அடையக்கூடும். வேலையை மாற்றவும் முயற்சிப்பீர்கள். நிதி நிலைமை மோசமாக பாதிக்கப்படும். நிதி விஷயங்களில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு பாதிக்கப்படலாம். இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், நிதி விஷயங்களில் தனுசு ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். நிதி பரிவர்த்தனை செய்வதாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். வேலை அழுத்தம் அதிகம் இருக்கும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது. வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட குறைவான லாபத்தையே பெறக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று மன அழுத்தத்தை உணர்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
