Shukra Gochar 2022: கும்பம் செல்லும் சுக்கிரனால் பிப்ரவரி 15 வரை இந்த ராசிகளுக்கு சூப்பரா இருக்கப் போகுது...

சுக்கிரன் இந்த கும்ப ராசியில் பிப்ரவரி 15 வரை இருந்து, பின் மீன ராசிக்கு செல்வார். இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

நவகிரகங்கள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் ராசியை மாற்றும். அதில் ஆடம்பரம், பொருள் மகிழ்ச்சி, புகழ், செழிப்பு, காதல், அழகு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் செல்வ செழிப்போடு அனைத்து சுகங்களையும் பெற்றிருப்பார். இப்படிப்பட்ட சுக்கிரன் 2023 ஜனவரி 22 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார்.

Venus Transit in Aquarius on January 2023 Effects And Remedies On 12 Zodiac Signs In Tamil

சுக்கிரன் இந்த கும்ப ராசியில் பிப்ரவரி 15 வரை இருந்து, பின் மீன ராசிக்கு செல்வார். இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சில ராசிக்காரர்கள் அசுப பலன்களையும் பெறலாம். இப்போது 2023 ஜனவரி 22 ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்லும் சுக்கிரனால் 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். கடனாக கொடுத்த பணம் இக்காலத்தில் கிடைக்கும். முழு ஆற்றலுடன் வேலை செய்தால், வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் ரிஷப ராசிக்காரர்களின் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதோடு, பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு அல்லது வாகனம் வாங்கும் விருப்பம் இருந்தால், இக்காலத்தில் சுக்கிரனின் அருளால் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தைரியம் மற்றும் துணிச்சலால் கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் கையாள்வீர்கள். இக்காலத்தில் உடன்பிறந்தவர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலம் அவ்வளவு நன்றாக இருக்காது. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்து இருக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் இக்காலத்தில் எடுக்காதீர்கள். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாமியார் மாமனாரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆக்கப்பூர்வமான வேலையில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலமானது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். உங்களைச் சுற்றியிருப்பவர்களே உங்களைஅவமானப்படுத்த முயற்சி செய்வார்கள். எனவே சற்று கவனமாக இருங்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். எனவே முழு திறனையும் இக்காலத்தில் வெளிப்படுத்தினால், நல்ல வெற்றி கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இக்காலகட்டத்தில் அரசின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் விருச்சிக ராசிக்காரர்கள் இக்காலத்தில் கலவையான பலன்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். இருப்பினும் இறுதியில் வெற்றி பெறுவார்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு, வாகனம் வாங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட்டால், நல்ல பலனைப் பெறலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் பல எதிர்பாராத பலன்களைப் பெறுவார்கள். அலுவலகத்தில் இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் பாராட்டப்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாயப்புக்கள் உள்ளன. வெளிநாடு செல்ல முயற்சித்தால், அதில் வெற்றி கிடைக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். உங்களின் பேச்சால் சூழ்நிலைகளை எளிதில் கையாள்வீர்கள். ஆனால் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால், ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் அனைத்து வகையிலும் நன்மையாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்குவதோடு, புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். வீடு வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் அமையும். சமூகத்தில் உங்களின் கௌரவம் அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் மீன ராசிக்காரர்கள் இக்காலத்தில் ஆடம்பரத்திற்காக அதிக செலவுகளை செய்வார்கள். வாகனம் வாங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற சற்று முயற்சிக்க வேண்டும். பிரச்சனைகள் ஏற்பட்டால், அதை பேசி தீர்த்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, January 23, 2023, 20:02 [IST]
Desktop Bottom Promotion