Latest Updates
-
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம்
இந்த செடியை இப்படி வளர்ப்பது உங்கள் இல்லத்தில் வறுமையையும், துரதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்துமாம்...!
வீட்டில் வளர்க்கும் செடிகளில் முக்கியமான ஒன்று மணி பிளாண்ட் எனப்படும் சிறியவகை செடி ஆகும். இந்த செடியை வீட்டில் வளர்ப்பது உங்கள் வீட்டின் செல்வத்தின் நிலையை அதிகரிக்கும்.
வீடு கட்டும் முன்னரோ அல்லது வாங்கும் முன்னரோ வாஸ்து பார்க்க வேண்டியது கட்டாயமானதாகும். ஒருவேளை உங்கள் இல்லத்தின் வாஸ்து சரியாக இல்லையெனில் வீட்டில் செய்யும் சில மாற்றங்களின் மூலம் அதனை சரிசெய்யலாம். அவ்வாறு வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை கொண்டுவரும் வழிகளில் ஒன்றுதான் சில வாஸ்து செடிகளை வீட்டிற்குள் வளர்ப்பதாகும்.

வீட்டில் வளர்க்கும் செடிகளில் முக்கியமான ஒன்று மணி பிளாண்ட் எனப்படும் சிறியவகை செடி ஆகும். இந்த செடியை வீட்டில் வளர்ப்பது உங்கள் வீட்டின் செல்வத்தின் நிலையை அதிகரிக்கும். ஆனால் இந்த செடியை வளர்க்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இதனை சரியாக வளர்க்கவில்லை என்றால் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் மணி பிளாண்ட்டை எப்படி வளர்க்கக்கூடாது என்று பார்க்கலாம்.

காய்ந்து போக விடக்கூடாது
மணி பிளாண்ட்டிற்கு தொடர்ச்சியாக தண்ணீர் விடுவதும், அதன் இலைகளை சீராக கத்தரிப்பதும் அவசியமான ஒன்றாகும். வாடிய மணி பிளாண்ட் செடிகள் உங்கள் வீட்டின் நிதிநிலையை மோசமாக்கும். உங்கள் மணி பிளாண்ட்டை சீராக பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

மணி பிளாண்ட்டின் திசை
மணி பிளாண்ட் ஒருபோதும் வடகிழக்கு திசையில்வைக்கப்படக்கூடாது. இது உங்கள் வீட்டின் நிதி நிலையை மட்டும் பாதிக்காது, மாறாக இது உங்கள் ஆரோக்கியத்தையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

தரையில் வைக்கக்கூடாது
உங்கள் மணி பிளாண்ட் அதிகமாக வளர்ந்து விட்டால், அதனை சீராக நறுக்க வேண்டும். ஆனால் அதன் இலைகள் மற்றும் தண்டுகள் தரையில் விழக்கூடாது. அவ்வாறு இது தரையில் விழுவது புனிதமற்ற செயலாக கருதப்படுகிறது.

தென்கிழக்கு திசை
எப்போதும் மணி பிளாண்ட் உங்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் வைக்கப்பட வேண்டும். இதுதான் பிள்ளையாருக்கு மிகவும் பிடித்த திசையாகும். இந்த இடத்தில் இதனை வைப்பது உங்கள் வீட்டிற்கு ஆரோக்கியம், செழிப்பு மற்றும் அமைதியை கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

திருமண பிரச்சினை
நீங்கள் திருமணமானவராக இருந்தால் நீங்கள் உங்கள் வீட்டின் கிழக்கு-மேற்கு திசையில் இதனை வைக்கக்கூடாது. இது கணவன், மனைவிக்கு இடையே பல குழப்பங்கள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட காரணமாக வாய்ப்புள்ளது.

வீட்டின் உட்புறம்
உங்கள் வீட்டின் உட்புறத்தில் இந்த செடியை வளர்ப்பது உங்களுக்கு வெளியே வளர்பதை விட இருமடங்கு பலனைத்தரும். இதனை ஒரு மண்பானையிலோ அல்லது கண்ணாடி குடுவையிலோ வளர்க்கலாம். ஒருவேளை வெளியே வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அது நிழலில் இருப்பதை உறுதி செய்யவும். இதன் பயன்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

செல்வம் அதிகரிக்கும்
மணி பிளாண்ட் உண்மையில் பணத்தை குறிக்கிறது. இது எவ்வளவு பசுமையாக இருக்கிறதோ உங்கள் வீதி அவ்வளவு செல்வம் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எவ்வளவு இலைகள் இருக்கிறதோ அவ்வளவு நல்லது.

இதய வடிவம்
இதன் இலைகள் இதய வடிவத்தில் இருப்பதால் இது அன்பு மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. மேலும் இது முறிந்த உறவுகளை இணைப்பதற்கும், குடும்பத்தினரிடையே நல்லுறவை வளர்க்கவும் உதவுகிறது.

ஆற்றலை அதிகரிக்கும்
மணி பிளாண்ட்டிற்கு என வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய இடமுள்ளது. பசுமையான, ஆரோக்கியமான மணி பிளாண்ட் வீட்டை சுற்றி நேர்மறை ஆற்றலை பரவச்செய்கிறது. மேலும் இது பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.



Click it and Unblock the Notifications
