Latest Updates
-
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
திரிகிரக யோகத்தால் ஜனவரி 14 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
2023 ஜனவரியில் மகர ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் நல்ல பொருளாதார பலன்களைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.
Trigraha Yoga In Capricorn On January 2023: நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில கிரகங்கள் ஒன்றாக ஒரே ராசியில் இணைந்து பயணிக்கும். கிரகங்கள் இணையும் போது தான் யோகங்கள் உருவாகும். ராசி மாற்றம் மட்டுமின்றி, யோகங்களும் ஒருவரது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் அந்த தாக்கம் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம்.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் ஜனவரி 14 ஆம் தேதி மகர சங்கராந்தி நாளில் மகர ராசியில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. திரிகிரக யோகம் என்பது 3 கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் யோகமாகும். மகரத்தில் உருவாகும் இந்த யோகமானது சூரியன், சனி, சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் திரிகிரக யோகத்தால் நல்ல நிதி பலன்களைப் பெறுவார்கள். இப்போது 2023 ஜனவரியில் மகர ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் நல்ல பொருளாதார பலன்களைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகிறது. இதனால் கடக ராசிக்காரர்கள் இந்த யோகமானது நல்ல பலனளிக்கக்கூடியதாக இருக்கும். இந்த காலத்தில் கூட்டு தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்கள் தங்களின் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். பணியிடத்தில் இந்த ராசிக்காரர்கள் செல்வாக்கு அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கலாம். திருமணமானவர்களிக் குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் நல்ல யோகமான காலமாக இருக்கும். அதுவும் தொழிலதிபராக இருந்தால், இக்காலத்தில் மிகப்பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தலாம். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் இக்காலத்தில் பணியிடத்தில் நல்ல பாராட்டைப் பெறுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த யோக காலமானது மங்களகரமானதாக இருக்கும். இதுவரை அவதிப்பட்டு வந்த நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் அற்புதமானதாக இருக்கும். மேலும் வியாபாரிகள் மற்றும் வேலை செய்பவர்கள் இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். முக்கியமாக வணிகர்கள் இக்காலத்தில் அதிக லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
