Latest Updates
-
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Today Rasi Palan 26 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது...
இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 26ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 26ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று சிறிய முடிவையும் நீங்கள் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் சிக்கலில் சிக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகமாக இருக்கும். ஆனால், உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். குழந்தையின் கல்வி தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அதிகம் கேலி பேசுவதைத் தவிர்க்கவும். உடல்நலம் சீராகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 11:25 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இன்று விவாதத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் அது உங்கள் வேலையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தைப் பொறுத்தவரை, இன்று மிகவும் விலை உயர்ந்த நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை சமநிலையற்றதாக இருக்கலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் கட்டுப்பாடற்ற கோபத்தைக் கட்டுப்படுத்தவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, நீங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், அலட்சியமாக இருக்காதீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவால் உங்களின் அனைத்து வேலைகளையும் முழு ஆற்றலுடனும் செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இன்று திடீர் தூரம் பயணிக்க மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலையுடன், உங்கள் குடும்பத்தின மீதும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை உங்கள் அன்புக்குரியவர்களை காயப்படுத்தலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:40 மணி முதல் இரவு 9:10 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று நீங்கள் பணம் தொடர்பான வேலைகளைச் செய்யும் போது மிகவும் கவனமாக வேலை செய்ய வேண்டும். இல்லையெனில், இழப்பு ஏற்படலாம். இன்று அலுவலகச் சூழல் சரியாக இருக்காது. முதலாளியின் கோபம் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இன்று தொழிலதிபர்களின் சில வேலைகள் பாதியில் நிற்கலாம். இருப்பினும், உங்கள் பிரச்சனை தற்காலிகமானது என்பதால் கவலைப்படத் தேவையில்லை. இன்று பெரியோர்களின் ஆசியைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் புரிதல் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11:20 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று நீண்ட பயணத்தை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். நீங்கள் வரவு செலவு கணக்குகளை சரியான வைத்திருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகச் சூழல் சாதகமாக இருக்கும். உங்களின் சிறப்பான செயல்பாட்டினால் உயர் அதிகாரிகளின் மனதை வெல்வீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வணிகம் புதிய திசையில் நகரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று காதல் விஷயத்தில் சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று அவசரத்தில் எந்த முடிவும் எடுக்காதீர்கள். அலுவலகத்தில் திடீரென்று சில முக்கியமான பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். இருப்பினும், உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய வேலையைத் தொடங்கினால், எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உங்கள் பாதையில் இருந்த தடைகள் நீங்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் காலை 11:35 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று குடும்பத்தில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். சண்டை, சச்சரவுகள் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், வீண் செலவுகளைக் குறைக்க வேண்டும். இல்லையெனில் எதிர்கால திட்டங்களில் தடைகள் ஏற்படலாம். தொழிலதிபர்கள் இன்று ஒரு புதிய வணிக முன்மொழிவைப் பெறலாம். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உடல்நலம் திடீரென குறையும் வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:55 மணி முதல் மாலை 6:20 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலை அடிப்படையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்களுக்கு அலுவலகத்தில் சில முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தால், அதை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். உங்கள் எந்த வேலையையும் நாளை என தள்ளிப் போடாதீர்கள். வணிகர்கள் அரசு விதிகளை மீறுவதைத் தவிர்க்கவும். பொருளாதார நிலையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று நிதி இழப்பு ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். ஆரோக்கியமாக இருக்க, யோகா மற்றும் தியானத்தை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9:05 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, அலட்சியமாக இருக்காதீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய விவாதம் நடத்தலாம். இன்று வேலை தொடர்பான சில நல்ல ஆலோசனைகளைப் பெறுவீர்கள். இன்று வியாபாரிகளுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். அவசரப்பட்டு எந்த முக்கிய முடிவையும் எடுக்காதீர்கள். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். உங்களுக்கு கல்லீரல் தொடர்பான ஏதேனும் நோய் இருந்தால், இன்று மிகவும் கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே, பெரியவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். பெரியவர்கள் உங்களைப் பற்றிய எந் முக்கிய முடிவை எடுத்தாலும், அதை மதிக்க வேண்டும். அலுவலகத்தில் இன்று பதவி உயர்வு பற்றிய நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரிகளின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்ட சில வேலைகளை முடிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நாளின் இரண்டாம் பகுதியில் நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:20 மணி முதல் இரவு 9 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உங்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சனைகள் இன்று முடிவடையும். வீட்டுச் சூழலில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் பொழுதுபோக்கிற்காக நிறைய பணம் செலவிடலாம். உத்தியோகஸ்தர்களின் வெளியூர் பயணம் செய்யும் கனவு நிறைவேறும். உங்களின் இந்தப் பயணம் முன்னேற்றத்தின் கதவுகளைத் திறக்கும். தொழிலதிபர்களும் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். உங்கள் கண்களை நன்கு கவனித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே, முன்னோர் வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் புரிதலால் நீங்கள் பெரிதும் பயனடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினால் உங்கள் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் வாழ்க்கைத் துணையுடன் சண்டையிடுவதைத் தவிர்க்கவும். இது உங்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு பற்கள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை



Click it and Unblock the Notifications











