Today Rasi Palan 21 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் தேவையில்லாமல் நீதிமன்றத்திற்கு அலைய நேரிடலாம்...

இன்றைய நாள் மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 21ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 21 January 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 21ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, அரசு ஊழியர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். வியாபாரிகளின் பாதையில் இருந்த தடைகள் நீங்கும். குறிப்பாக கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். இன்று உங்கள் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:45 மணி முதல் மதியம் 2:20 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, நீங்கள் நீண்ட கால உடல்நல பிரச்சனையை எதிர்கொண்டால் சிறிதும் அலட்சியமாக இருக்க வேண்டாம். உடனே நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் நிதிப் பக்கத்தை வலுப்படுத்த, சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். தேவையற்ற ஆணவம் உங்களை சிக்கலில் மாட்டிவிடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறலாம். வீட்டு பெரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 40

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று பண விஷயத்தில் உங்களுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். நீங்கள் உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சித்தால், உங்கள் முயற்சிகளை விரைவுபடுத்தவும். அலுவலக வேலைகளள் அனைத்தையும் விரைவாக முடிக்க முயற்சி செய்யுங்கள். வணிகர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளை இன்று தவிர்ப்பது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். இன்று உங்கள் உடல்நலம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 மணி முதல் இரவு 8 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இன்றைய நாள் மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். இன்று நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் ஒரு முக்கியமான நிதி முடிவையும் எடுக்கலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உடல்நலம் குறித்து எந்த வித அலட்சியமும் வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:45 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். எனவே, கோபத்தைக் கட்டுப்படுத்தி கொள்வது நல்லது. வேலையில் அதிக மன அழுத்தம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில், வேலை தொடர்பாக திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். உங்கள் பயணம் உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 4:20 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று பொன்னான வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்பினால், உங்கள் கனவு நனவாகும். தொழிலதிபர்களின் நீண்ட காலமாக முயற்சித்த வேலை இன்று முடியும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். குழந்தையின் மூலம் திடீர் சிக்கல்கள் சாத்தியமாகும். இன்று நீங்கள் அவருடைய கல்வி அல்லது ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7:55 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, பணம் தொடர்பான கவலைகள் இன்று உங்களை வருத்தமடைய செய்யலாம். இன்று பணப்பற்றாக்குறையால் உங்களின் சில முக்கியமான வேலைகள் பாதியில் நிற்கலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் வியாபாரம் செய்தால், இன்று அதிர்ஷ்டத்தைப் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் நல்ல ஒருங்கிணைப்பை வைத்திருக்க முயற்சிக்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு சருமம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்றைய நாளின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்கும். மனதளவில் மிகவும் வலுவாக இருப்பீர்கள். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான முக்கிய விவாதம் உங்களுக்கு சாதகமாக அமையும். வணிகர்கள் லாபம் ஈட்ட அவசரப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் நீங்கள் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இடுப்பு அல்லது முதுகில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, வீட்டில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவும். வீட்டில் பணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகத்தில் மேலதிகாரியின் கோபத்தைச் சந்திக்க நேரிடலாம். நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க முயற்சிக்கவும். தொழிலதிபர்கள் இன்று நீதிமன்றத்திற்கு அலைய வேண்டியிருக்கும். நிதி ரீதியாக வலுவாக இருக்க, வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தவும். இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்கள் கடவுள் வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தொடர்பான முயற்சிகளில் நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை அல்லது வணிகம் எதுவாக இருந்தாலும், இன்று உங்கள் கடின உழைப்பு பலனளிக்கும். நிதி நிலையில் ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. திடீர் பண வரவு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகலாம். எனவே, வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று அலுவலகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். உங்களின் சிறப்பான செயல்பாட்டினால் பெரிய வெற்றியை அடைய முடியும். இன்று வணிகர்களுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகலாம். வாழ்க்கைத் துணைக்கு போதுமான நேரத்தைக் கொடுக்க முயற்சிக்கவும். இல்லையெனில், உங்கள் அன்புக்குரியவர் புறக்கணிக்கப்பட்டதாக உணரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் கோபம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, January 21, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion