Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Today Rasi Palan 14 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கப் போகுது...
இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். 2023 ஜனவரி 14 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan 14 January 2023: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். 2023 ஜனவரி 14 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு ஏழைகளுக்கு உதவ வாய்ப்பு கிடைத்தால், அதை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிதியைப் பொறுத்தவரை, இன்று நல்ல நாளாக இருக்கும். சிக்கிய பணம் கிடைக்கும். வேலையைப் பொறுத்தவரை, பணிச்சுமை குறையும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட, உணவில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உங்களின் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்காது. பண விஷயத்தில் மிகவும் அதிஷ்டசாலியாக இருப்பீர்கள். குறைந்த முயற்சியில் நல்ல பணத்தைப் பெறவீர்கள். சிறிய தவறுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 முதல் இரவு 9 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் மேலதிகாரியின் சகவாசம் கிடைக்கும். வியாபாரிகளின் பொருளாதார பிரச்சனை தீரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 முதல் 8:35 வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் உங்களின் பணிச்சுமை அதிகரிக்கலாம். இன்று திட்டமிட்டு வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்களின் முக்கியமான வேலைகளில் சில தடைகள் ஏற்படலாம். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோர்கள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இன்று தந்தையால் ஆதாயம் கிடைக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:45 முதல் மதியம் 1 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகத்தில் நீண்ட நாட்களாக ஏதேனும் வேலை நிலுவையில் இருந்தால், அதை விரைவில் முடிக்க முயற்சி செய்யுங்கள், இல்லையெனில் முதலாளி உங்கள் மீது கோபப்படலாம். வணிகர்கள் இன்று பணம் தொடர்பான எந்தவொரு பெரிய பரிவர்த்தனையையும் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8:20 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் மீது கோபமாக இருந்தால், அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும் எந்த ஒரு பெரிய செலவுகளையும் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். வியாபாரிகள் லாபத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், இன்று அந்த பிரச்சனை அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு பிஸியான நாளாக இருக்கும். பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகமாக இருக்கும். உங்களின் முக்கியமான சில வேலைகள் இன்று முழுமையடையாமல் போகலாம். வீட்டு சூழல் பதட்டமாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சித்தால், உங்களின் முயற்சிகளை வேகப்படுத்த வேண்டும். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:25 முதல் 7 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று ரொமான்டிக்கான நாளாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். திடீர் பெரிய செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் எந்த வித அலட்சியமும் செய்ய வேண்டாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காது தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு கடினமான நாளாக இருக்கும். இன்று விவாதத்தை தவிர்க்காவிட்டால், பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். வேலை செய்பவர்களுக்கு இன்று நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நேரத்துக்குச் சாப்பிடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். வியாபாரிகளின் முக்கியமான வேலைகள் தடைபடலாம். நிதி இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஒழுங்காக நடந்து கொள்வது நல்லது. நிதி நிலையில் ஏற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு பணம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது, வார்த்தைகளை பார்த்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வேலையைப் பொறுத்தவரை, இன்று முக்கியமானதாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப முடிவுகளைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புள்ளது. வணிகர்களின் பொருளாதாரம் வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று தொழிலதிபர்கள் அலைச்சலை சந்திப்பார்கள். லாபம் கிடைக்காமல் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல பழக வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில் நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களுக்கு ஏற்கனவே நோய் இருந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை



Click it and Unblock the Notifications











