Latest Updates
-
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Today Rasi Palan 11 January 2023: இன்று இந்த ராசிக்காரங்க வாகனம் ஓட்டும் போது கவனமா இருக்கணும்...
இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். 2023 ஜனவரி 11 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan 11 January 2023: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். 2023 ஜனவரி 11 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று அதிக செலவுகள் ஏற்படும். உங்கள் செலவுகளைக் கண்காணிக்காவிட்டால், சிக்கலில் சிக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு, பரபரப்பான நாளாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். வேலையாக இருந்தாலும், வியாபாரமாக இருந்தாலும், இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வீட்டுச் சூழல் அமைதியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:20 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உடல்நல குறைவால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி நிலையில் சரிவு ஏற்படலாம். அலுவலகத்தில் உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள். வணிகர்களின் நிலுவையில் உள்ள வேலை வெற்றிகரமாக முடிக்கப்படும். நாளின் இரண்டாம் பகுதியில் நல்ல பண பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்லிணக்கம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 முதல் 9:00 வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று பயணத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. தொழிலதிபர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் நிதி பிரச்சனைகள் தீரும். பணிபரிபவர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் சகவாசம் கிடைக்கும். உங்கள் வீட்டு உறுப்பினர்களிடம் இருந்து ஒரு பரிசைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே! நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய வேலையை ஆரம்பித்திருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கடினமாக உழைக்க வேண்டும். எந்த வேலையையும் இன்று நிலுவையில் வைக்காதீர்கள். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தந்தையின் ஆரோக்கியம் குறைவதால், இன்று உங்களின் மன அழுத்தம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் 11:20 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று அலுவலக சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று மிகவும் லாபகரமாக இருக்கும். இன்று மிகப்பெரிய நிதி ஆதாயத்தைப் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் பேசும் போது உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9:05 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் தங்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வானம் நீலம்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே சமநிலையைப் பராமரிக்க வேண்டும். வேலையைப் போன்றே குடும்பமும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேலை விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும் நிதி தொடர்பான முடிவுகளை எடுப்பதாக இருந்தால் சிந்தித்து முடிவெடுங்கள். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்குவீர்கள். நாளின் இரண்டாம் பகுதியில் வேலை விஷயமாக பயணம் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நாள் சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:25 முதல் இரவு 8 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று யாருடனும் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். தேவையற்ற சச்சரவுகளில் இருந்து விலகி இருங்கள். இல்லாவிட்டால் சட்ட விவகாரத்தில் சிக்குவீர்கள். அலுவலகத்தில் உங்களிடம் முக்கியமான வேலை ஒப்படைக்கப்பட்டால், அதை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரிகள் வேலைகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கு. கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், வீட்டின் அமைதி குலைந்துவிடும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 முதல் 10:30 வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று நாளின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். அலுவலகத்தில் போட்டி அதிகமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்கள் இன்று அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். நிதி ரீதியாக வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 முதல் 11 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் உங்கள் வேலையால் உயர் அதிகாரி ஈர்க்கப்படுவார். வியாபாரிகள் இன்று சிக்கிய பணத்தைப் பெறுவார்கள். உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு இன்னும் வலுவாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். இன்று உங்களுக்கு பணம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுவரை உங்கள் ஆரோக்கியம் சரியில்லை என்றால், இன்று அதிலிருந்து விடுபவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:20 முதல் இரவு 8:15 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று சிந்திக்காமல் செலவு செய்தால், பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வணிகர்கள் ஆபத்தான முடிவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இன்று உங்கள் துணையுடன் நல்ல ரொமான்டிக்காக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க யோகா மற்றும் தியானத்தை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 முதல் மதியம் 12:50 வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று வீட்டின் சூழல் சற்று பதட்டமாக இருக்கும். சிறு விஷயத்திற்காக வீட்டில் உள்ளோருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். வேலையைப் பொறுத்தவரை. பிஸியாக இருப்பீர்கள். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டும். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும், இன்று உங்களின் பெரிய கவலை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை



Click it and Unblock the Notifications











