Today Rasi Palan 10 January 2023: இன்று இந்த ராசிக்காரங்க கோபத்தை கட்டுப்படுத்தணும்..

இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். 2023 ஜனவரி 10 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

Today Rasi Palan - 10 January 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan 10 January 2023: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். 2023 ஜனவரி 10 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு மிகவும் பிஸியான நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும், வியாபாரமாக இருந்தாலும், பணிச்சுமை அதிகமாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். அதற்காக ஆடம்பரமாக செலவு செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று அவ்வளவு சிறப்பாக இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களைத் தேடி நல்ல செய்திகள் வரும். அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். உங்களின் அனைத்து வேலைகளையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நாளின் இரண்டாம் பாதியில் வேலை விஷயமாக பயணம் செய்ய வாய்ப்புள்ளது. உங்கள் தந்தையுடனான உறவை பேண முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் சுமாராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று வீட்டுச் சூழல் சற்று பதட்டமாக இருக்கக்கூடும். வெளியாட்களால் வீட்டில் வாக்குவாதம் ஏற்படலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்களைத் தேடி பணம் வருவதற்கான வாய்ப்புள்ளது. வேலையில் அலட்சியமாக இருக்காதீர்கள். அலுவலகத்தில் ஒரு வேலையை செய்ய அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். வணிகர்கள் புதிய வேலைகளை தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 முதல் 11:35 வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று உங்களின் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப்படும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 முதல் 7:25 வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகத்தில் உங்கள் அலட்சியத்தால் மேலதிகாரி உங்கள் மீது கோபமாக இருக்கலாம். எனவே சற்று கவனமாக இருங்கள். வணிகர்கள் பெரிய நிதி பரிவர்த்தனையையும் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 முதல் மதியம் 12:20 வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று ரொமான்டிக்கான நாளாக இருக்கும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருக்கும் வேலைகள் இருந்தால், அதை இன்று முடிக்க முயற்சி செய்யுங்கள். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவழிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று பிரச்சனைகளை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தவறான வழிகளில் பணம் சம்பாதிப்பதைத் தவிர்க்க வேண்டும். அலுவலக சூழல் சாதகமாக இருக்கும். உங்களின் வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் நன்றாக உணர்வீர்கள். தொழிலதிபர்கள் இன்று ஆபத்தான முடிவை எடுக்க வேண்டியிருக்கும். எனவே சற்று புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. இன்று அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் சிறப்பாக இருக்க உணவு வழக்கத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:05 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று வீட்டின் சூழல் நன்றாக இருக்காது. கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இருப்பினும் தேவையற்ற சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலை நன்றாக இருக்கும். பட்ஜெட்டிற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். வேலை தொடர்பான எந்த முயற்சியும் தோல்வியடையலாம். இருப்பினும், நம்பிக்கையுடன் இருங்கள். உங்களின் சரியான நேரம் வரும்போது உங்களின் கடின உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 முதல் மதியம் 1 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று வேலை செய்பவர்களின் பெரிய பிரச்சனை தீர்க்கப்படும். உயர் அதிகாரிகளின் உதவியால் இன்று உங்களின் சில காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். தொழிலதிபர்கள் இன்று அவசர அவசரமாக எந்தவொரு வேலைகளையும் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில் இழப்பை சந்திப்பீர்கள். நிதி நிலைமையை மேம்படுத்த, உங்கள் நிதி முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 முதல் 2:45 வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களின் நிதி நிலை நன்றாக இருக்கும். நிறைய பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வாய்ப்பு கிடைக்கும். பங்குச்சந்தையில் பணிபுரிபவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமாக இருக்கும். நல்ல பண பலன்களைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். உங்கள் துணையுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி அதிக கவலைப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:25 முதல் இரவு 8 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று வியாபாரிகளுக்கு நல்ல நாளாக இருக்கும். சிக்கிய பணம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரியின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொடர்ந்து இப்படி அலட்சியமாக இருந்தால் வேலையை இழக்க நேரிடும். செலவுகள் அதிகரிக்கும். அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தேவையற்ற கோபம் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, January 10, 2023, 4:00 [IST]
Desktop Bottom Promotion