Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் விரும்பாவிட்டாலும் அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும்..

இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 01 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

Today Rasi Palan -01 November 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 01 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

நீங்கள் நீண்ட காலமாக ஒரு புதிய வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தால், இன்று வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை கிடைக்கும். வணிகர்கள் மிகப்பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால், உங்கள் வணிகம் அதிகரிக்கும். உங்களின் தடைப்பட்ட எந்த வேலையையும் இன்று முடிக்க முடியும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், உங்கள் வாழ்க்கைத் துணையுடனான பிரிவினை முடிவுக்கு வரும். இன்று உங்கள் துணையுடன் கூடுதல் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அன்புக்குரியவருக்கு ஒரு சிறப்பு ஆச்சரியத்தையும் திட்டமிடலாம். நிதிக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், நீங்கள் சரியான நேரத்தில் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று உங்களுக்கு பண விஷயத்தில் நல்ல நாளாக இருக்காது. நீங்கள் விரும்பாவிட்டாலும் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் வியாபாரம் செய்து, உங்கள் பணி வெளிநாட்டு நிறுவனத்துடன் தொடர்புடையதாக இருந்தால், எதிர்பார்த்த பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் போட்டி அதிகமாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்வின் மிக அழகான நாட்களில் ஒன்றாக இருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு தொண்டை தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:00 மணி முதல் மதியம் 12:20 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்று உங்களுக்கு வேலையின் அடிப்படையில் சவாலான நாளாக இருக்கும். அது வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று நீங்கள் சில பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்களை மிகவும் கண்டிப்புடன் நடத்துவார்கள். வியாபாரிகளுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். பணத்தைப் பற்றி பேசுகையில், வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் சமநிலையை பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது. எதிர்காலத்தில் நீங்கள் நிதி நெருக்கடியைத் தவிர்க்க விரும்பினால், சேமிப்பில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். கோபத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உடல்நலம் மோசமடைவது உங்கள் திட்டங்களைக் கெடுக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:25 மணி முதல் மதியம் 2:15 மணி வரை

கடகம்

கடகம்

இன்றைய நாள் மாணவர்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய தலைப்பில் படிக்க திட்டமிட்டிருந்தால், உங்கள் திட்டத்தை தொடர இன்று நல்ல நாள். இன்று நீங்கள் கடவுள் வழிபாட்டில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். நிதி விஷயத்தில் இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். கூடுதல் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறலாம். வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். இருப்பினும், ஈகோ போன்ற எதிர்மறை உணர்வுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வாழ்வில் முன்னேற தொடர்நது கடினமாக உழைத்து முன்னேறுங்கள். வணிகர்கள் இன்று தங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்க முடியும். நீங்களும் உங்களால் முடிந்ததை கொடுக்க முயற்சிப்பது நல்லது. இன்றைய நாள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 மணி முதல் மாலை 6:50 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்று வேலை விஷயத்தில் உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதே போல் உங்கள் மேலதிகாரி நீங்கள் செய்யும் வேலையில் பல குறைபாடுகளைக் கண்டறியலாம். அவர்கள் உங்களுக்கு ஏதேனும் வேலை தொடர்பான ஆலோசனைகளை வழங்கினால், நீங்கள் அதை கவனிக்க வேண்டும். இல்லையெனில் வரும் நாட்களில் நீங்கள் சிக்கலில் சிக்கக்கூடும். இன்று, வணிகர்கள் தங்கள் வணிக முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வேலையுடன் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். குறிப்பாக உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை இன்று குழந்தைகளை வருத்தமடையச் செய்யலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு கண்கள் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 12:50 மணி வரை

கன்னி

கன்னி

இன்று உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். உடலின் எந்தப் பகுதியிலும் வலியால் நீங்கள் சிரமப்படுவீர்கள். மோசமான உடல்நலம் காரணமாக, இன்றைய நாள் முழுவதும் உங்கள் திட்டங்களும் தடைபடலாம். உத்தியோகஸ்தர்கள், அவசரப்பட்டு எந்த வேலையையும் செய்யாதீர்கள். சிறு தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்கவும். வணிகர்கள் லாபம் சம்பாதிக்க இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வியாபாரம் அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தகராறு ஏற்படலாம். உங்கள் துணையின் கோபத்தால் உங்களுக்கிடையே உள்ள தூரம் அதிகரிக்கும். எனவே, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:17

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 10:20 மணி வரை

துலாம்

துலாம்

இன்று வீட்டின் சூழ்நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் மனநிலை மிகவும் நன்றாக இருக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களுக்கு சிறப்பான உணர்வை ஏற்படுத்துவார்கள். மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று பண விஷயத்தில் சற்று விலை உயர்ந்ததாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். வேலையைப் பற்றி பேசிானல், அலுவலகத்தில் உங்கள் செயல்திறனைப் பார்த்து, உயர் அதிகாரிகள் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். நீங்கள் விரைவில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைய முடியும். வணிகர்களின் பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் உள்ளன. உங்கள் உடல்நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

வேலை சம்பந்தமான எந்தவொரு பெரிய பிரச்சனையும் இன்று முடிவுக்கு வரும். இன்று நீங்கள் பெரிய கவலைகளில் இருந்து விடுபடலாம். இன்று வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். அதே சமயம் உத்தியோகஸ்தர்களின் பணிச்சுமை குறைவதோடு உயர் அதிகாரிகளும் உங்களின் செயல்பாடுகளில் திருப்தி அடைவார்கள். நிதி விஷயத்தில் வழக்கத்தை விட இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் எளிதாக பணம் சம்பாதிப்பீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பெற்றோரின் உடல்நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இந்த மாறிவரும் பருவநிலையால் உங்களைக் கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

தனுசு

தனுசு

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் சக ஊழியர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். மேலும் கடினமான பணிகளும் இன்று மிக எளிதாக முடிவடையும். வியாபாரிகளின் நிதிப் பிரச்சனைகள் தீரும். தடைபட்ட லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் எந்த பெரிய விஷயத்தையும் செய்ய வேண்டாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களுடன் உங்கள் நடத்தை நன்றாக இருக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் உங்கள் உறவு பாதிக்கப்படலாம். உங்கள் துணையின் மாறிய மனநிலை உங்களை தொந்தரவு செய்யலாம். அன்புக்குரியவர்கள் உங்களை மிகவும் முரட்டுத்தனமாக நடத்தலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு ஒவ்வாமை அல்லது தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:35 மணி முதல் இரவு 9:20 மணி வரை

மகரம்

மகரம்

இன்று நீங்கள் வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும். இன்றைய நாள் பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். உங்கள் செலவுகளின் பட்டியல் அதிகரிக்கலாம். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்தால் நல்லது. வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நேரத்தைக் கவனத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்படுகிறீர்கள். தொழிலதிபர்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வேலையுடன் ஓய்விலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்:36

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:55 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று உங்களுக்கு வேலையில் ஒரு கலவையான நாளாக இருக்கும். அலுவலகத்தில் அங்கும் இங்கும் அதிகம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் அதிக பொறுப்புகளில் சுமைமை உணரலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் முழு கவனத்தையும் உங்கள் வேலையில் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் வியாபாரம் செய்தால், வியாபாரத்தில் ஏற்படும் மந்தநிலை உங்கள் கவலைகளை அதிகரிக்கும். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். தேவைக்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அன்பு அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

மீனம்

மீனம்

வழிபாட்டுடன் இன்றைய நாளைத் தொடங்குங்கள். இயலாதவர்களுக்கு இனிப்பு தானம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இன்று உங்களுக்கு வேலையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் வேலை சம்பந்தமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும், இந்த உலகளாவிய தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திடீரென்று அலுவலகத்தில் ஒரு முக்கியமான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படலாம். நீங்கள் வியாபாரம் செய்து புதிய பங்குகளை வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், முதலில் பழைய பங்குகளை விற்க வேண்டும். அவசரம் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். இன்று உடன்பிறப்புடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், இன்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், நீங்கள் அவர்களை மன அழுத்தத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் இன்று சாதாரண நாளாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, November 1, 2021, 5:00 [IST]
Desktop Bottom Promotion