Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
எச்சரிக்கை! தீபாவளி அன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு... உஷாரா இருங்க...
தீபாவளி நாளில் சில ராசிக்காரர்கள் பண விஷயத்தில் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். ஏனெனில் இந்நாளில் நான்கு கிரகங்கள் ஒரே ராசியில் சேர்ந்து இருக்கின்றன.
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பஞ்சாங்கத்தின் படி, தீபாவளி பண்டிகை 2021 நவம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தமிழ் மாதமான ஐப்பசி மாதத்தின் அமாவாசை நாளாகும்.

இந்த தீபாவளி நாளில் சில ராசிக்காரர்கள் பண விஷயத்தில் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். ஏனெனில் இந்நாளில் நான்கு கிரகங்கள் ஒரே ராசியில் சேர்ந்து இருக்கின்றன. இப்படி நான்கு கிரகங்கள் சேர்ந்திருப்பதால் கவனமாக இருக்க வேண்டிய அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தீபாவளி தினத்தின் கிரக நிலைகள்
தீபாவளி நாளில் கிரக நிலைகளைப் பற்றி பேசுவதானால், இந்நாளில் துலாம் ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய நான்கு கிரகங்கள் சேர்ந்து இருக்கின்றன. இதனுடன் மகர ராசியில் சனி பகவான் மற்றும் குரு சஞ்சரிப்பார்கள். இத்துடன் ரிஷப ராசியில் ராகு, விருச்சிகத்தில் கேது, தனுசு ராசியில் சுக்கிரன் ஆகியோர் உள்ளனர்.

ரிஷபம்
ராகு ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். பொதுவாக ராகு தவறான செயல்களை செய்யத் தூண்டும். எனவே கவனமாக இருங்கள். தவறான நபர்கள் மற்றும் தவறான செயல்களில் இருந்து விலகி இருங்கள். இல்லையென்றால், நீங்கள் மிகப்பெரிய பண இழப்பு சிக்கலில் சிக்கி தவிக்கக்கூடும்.

மிதுனம்
மிதுன ராசிக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதோடு இந்நாளில் தவறான செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கஷ்டப்படுவீர்கள்.

துலாம்
அஷ்டமத்து சனியின் தாக்கம் துலாம் ராசியிலும் உள்ளது. எனவே தீபாவளி நாளில் மன அழுத்தத்தைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இந்நாளில் முக்கியமான வேலையை செய்ய தொடங்கும் முன், வாழ்க்கைத் துணை மற்றும் கற்றறிந்த நபர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, தீபாவளி நாளில் குழப்பம் மற்றும் மன அழுத்தத்தை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். பணத்தை விரைவாகப் பெற முயற்சிப்பது இழப்பை ஏற்படுத்தும். இந்நாளில் தவறான செயல்கள் எதையும் மறந்தும் செய்யாதீர்கள். முக்கியமாக ஆல்கஹால் மற்றும் பிற போதைப் பழக்கங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் பிரச்சனையில் சிக்கி மீள முடியாமல் தவிப்பீர்கள்.

மகரம்
மகர ராசியில் சனியும், குருவும் இணைந்திருக்கிறார்கள். சனி பகவான் நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறார். எனவே மிகவும் கவனமாக இருங்கள். ஈகோ மற்றும் வாக்குவாதம் போன்ற பிரச்சனைகளை உருவாக்கிவிடாதீர்கள். இந்நாளில் ஆதரவற்றவர்களுக்கு உதவுங்கள். சனி பகவானுடன் தொடர்புடைய பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் நன்மைகள் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் இந்நாளில் தவறான வழியில் பணத்தைப் பெற முயற்சிக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications
