Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
காம சூத்ராவில் வெறும் காமத்தைப் பற்றி மட்டும் அல்ல இவற்றைப் பற்றியும் இருக்கிறது தெரியுமா?
அன்பின் பழமொழிகள் என்று உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட காம சூத்ராவும் இந்திய பாரம்பரியத்திலிருந்து உலகிற்கு கிடைத்த அரிய பரிசுகளில் ஒன்றாகும்.
இந்தியா உலகத்திற்கு பல முக்கியமான கண்டுபிடிப்புகளையும், வாழ்வியல் நெறிகளையும், தத்துவங்களையும் தந்துள்ளது. அன்பின் பழமொழிகள் என்று உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட காம சூத்ராவும் இந்திய பாரம்பரியத்திலிருந்து உலகிற்கு கிடைத்த அரிய பரிசுகளில் ஒன்றாகும்.

பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற முனிவரான வத்சயனா தொகுத்த 1250 வசனங்களின் புத்தகமான இதில் பாப்ரவ்யா உட்பட பல எழுத்தாளர்களின் பங்களிப்புகள் உள்ளது. காம சூத்ரா என்பது வெறும் காமம் மட்டும் பற்றியது அல்ல. அது வாழ்க்கைக்கு தேவையான பல படிப்பினைகளை கொண்ட வாழ்க்கை நெறியாகும். குறிப்பாக காம சூத்ராவில் காதலைப் பற்றி பல முக்கியமான பாடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவில் காம சூத்ராவில்காமத்தைத் தவிர வேறு எவற்றைப் பற்றி கூறப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.

காம சூத்ராவின் நோக்கம்
இந்த எழுத்தாளர் பாலினத்தைப் பற்றி எழுதுவதன் நோக்கம் தர்மம் (நீதி), அர்த்த (செல்வம்) மற்றும் காம (ஆசைகளை நிறைவேற்றுதல்) ஆகிய மூன்று நோக்கங்களை அல்லது வாழ்க்கையின் புருஷார்த்தங்களை எவ்வாறு அடைவது என்பதை தெரிந்து கொள்ளத்தான். பெரும்பாலான மக்கள் கற்பனை செய்வதைப் போலல்லாமல், காமசூத்ரா என்பது உடலுறவில் அதிக இன்பத்தை எவ்வாறு பெறுவது என்ற விளக்கத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை, இது வாழ்க்கைக் கலை குறித்த விரிவான நூல் ஆகும்.

தொடக்கம்
புத்தகத்தின் தொடக்கம், இவ்வுலகத்தின் மூன்று உலக சாதனைகள் என்னவெனில் நல்லொழுக்கங்கள், செல்வம் மற்றும் ரொமான்டிக் காதல் ஆகும். அறுபத்து நான்கு கலை வடிவங்களின் கற்றல், வீடு மற்றும் தளபாடங்கள் பராமரிப்பு, பொழுதுபோக்கு மற்றும் பொதுவான மனிதர்களின் அன்றாட வேலைகள் குறித்து இது விரிவாகக் கூறுகிறது. பெண்களைப் பற்றி பேசும்போது எந்த வகையான பெண்கள் உடலுறவுக்கு பொருத்தமான பெண்கள், பொருத்தமற்ற பெண்கள் யார் என்று கண்டறிந்து விடலாம்.

பாலியல் அறிவு
காம சூத்ராவின் அடுத்தக் கட்டம் ஒருவருக்குள் எழும் ஆசைகளுக்கு அவர்கள் எந்த வகையான நிலையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உணர்த்துகிறது மற்றும் உடலுறவு நிலைகளின் பரிமாணங்களை விளக்குகிறது. இது உடலுறவின் போது செய்ய வேண்டிய செயல்பாடுகளான அரவணைப்பு, முத்தம், துணையின் மீதான செல்லக்கடிகள், சிறிய காயங்கள், வெவ்வேறு நிலைகளில் படுப்பது, எந்த விதமான பெண்களின் மீது எந்த வகையான பெண்களின் மீது எந்த வகையான நிலையை கையாள வேண்டும், உடலுறவின் போது எப்படி பேச வேண்டும் என பலவற்றைப் பற்றி இது கூறுகிறது.

திருமணம்
உடலுறவைத் தொடர்ந்து காம சூத்ரா திருமணத்தைப் பற்றியும் கூறுகிறது. நிச்சயதார்த்தம் முதல் பெண்களின் நம்பிக்கையை எப்படி வெல்வது மற்றும் ஆண்களின் உள் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது, எப்படி பெண்ணின் மனதை வெல்வது, ஆண்களால் பிரத்யேகமாக செய்யக் கூடிய செயல்கள், பெண்கள் ஆண்களை வெல்வதற்கான வழிகள் மற்றும் திருமண வகைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மனைவி
நான்காவது அத்தியாயம் ஒரு நெறிமுறை வாழ்க்கை முறைகள், வாழ்க்கைத் துணை இல்லாதபோது தன்னை எவ்வாறு நடத்துவது, வயதில் மூத்த மனைவி, வயதில் இளைய மனைவி எவ்வாறு தங்களை நடத்த வேண்டும், மறுமணம் செய்து கொண்ட கன்னி விதவைகளுக்கான குறியீடுகளை நடத்துதல், கணவனால் வெறுக்கப்படும் மனைவி, பல மனைவிகளைக் கொண்ட ஆட்சியாளர் போன்றவற்றை பற்றி பேசுகிறது.

மற்றவர்களின் மனைவி
ஐந்தாவது அத்தியாயம் ஆண்கள் மற்றும் பெண்களின் சிறப்பியல்பு அம்சங்கள் மற்றும் பிற பெண்களை கவரக்கூடிய ஆண்கள், எளிதில் கவரும் பெண்கள், பெண்களுடன் எவ்வாறு அறிமுகம் செய்து கொள்வது மற்றும் அவர்களின் மனதை எவ்வாறு வெல்வது, பெண்களின் மனதை எப்படி ஆராய்வது, பிறரின் மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றிக் கூறுகிறது.

விலைமாதர்கள்
ஆறாவது அத்தியாயம் ஆண்கள் ஏன் விலைமாதர்களை நாடுகிறார்கள், அவர்களால் விரும்பப்படும் ஆண்கள், ஒரு ஆணுடன் மனைவியாக வாழும் விலைமாதர்களின் வாழ்க்கை, அவர்கள் பணம் பெறுவதற்கான வழிகள், எவ்வாறு சோர்வடைவது, காதலில் இருந்து எப்படி விடுபடுவது, பழைய காதலனுடன் எப்படி இணைவது, பல்வேறு வகையான சந்தேகங்கள் மற்றும் விலைமாதர்களை பற்றிய பிற தகவல்கள் விளக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களை ஈர்க்கும் வழிகள்
அடுத்த பகுதி தனிப்பட்ட அலங்காரத்தைப் பற்றி பேசுகிறது, ஒருவரின் இதயத்தை மற்றவர்களுக்கு உட்படுத்துதல், மருந்துகள், ஆசை நிலைகளை உயர்த்துவதற்கான வழிகள், ஆண்களின் மதிப்பை பெரிதாக்கும் முறைகள் மற்றும் பாலியல் வாழ்க்கையின் ஆர்வமுள்ள பிற தலைப்புகள் பற்றி விளக்கப்ட்டுள்ளது.



Click it and Unblock the Notifications