Just In
- 11 hrs ago
க்ரீமி சிக்கன் கிரேவி
- 12 hrs ago
கொரோனா உடலில் தீவிரமாக பரவிவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு போங்க...!
- 16 hrs ago
வார ராசிபலன் (18.04.2021 முதல் 24.04.2021 வரை) - இந்த வாரம் அலுவலக வேலையில் கூடுதல் கவனம் தேவை…
- 17 hrs ago
இன்றைய ராசிப்பலன் (18.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவு எதையும் எடுக்கக்கூடாது…
Don't Miss
- News
தேர்தல் ஆணையம் அனுமதி.. இனி வேட்பாளர்களும் மக்களை காக்கும் பணிகளில் ஈடுபடுங்கள்.. ஸ்டாலின் அறிக்கை
- Sports
பஞ்சாப் ஓப்பனர்கள் காட்டடி.. தடுமாறிய எதிரணி பவுலர்கள்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இமாலய இலக்கு!
- Finance
கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் !
- Movies
வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது!
- Automobiles
யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீங்க குளிக்கும் போது முதல்ல எந்த பகுதியை கழுவுவீங்கன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு ரகசியத்தை சொல்றோம்...
நாம் அறிந்தோ அல்லது அறியாமலோ செய்யும் அனைத்தும் நம்மைப் பற்றின ஒரு விஷயத்தைச் சொல்லும் என்பது தெரியுமா? அந்த வகையில் நாம் குளிக்கும் போது நம்மை அறியாமல் குறிப்பிட்ட பகுதியை முதலில் நீரில் நனைப்போம். அப்படி நாம் கழுவும் பகுதிகள் ஒருவரது குணாதிசயங்களைக் குறிப்பிடுகின்றன என்பது தெரியுமா?
கீழே குளிக்கும் போது கழுவும் உடல் பகுதிகளும், அந்த ஒவ்வொரு பகுதியை முதலில் கழுவுபவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்றும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து உங்களது குணாதிசயம் என்னவென்பதைப் படித்துப் பாருங்கள்.

முகம்
நீங்கள் முதலில் முகத்தைக் கழுவுபவராக இருந்தால், மற்றவர்கள் உங்களை எப்படி உணருகிறார்கள் என்பதற்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்று அர்த்தம். மேலும் நீங்கள் எளிதில் விரக்தியடைவீர்கள் மற்றும் மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் இருப்பீர்கள்.

அக்குள்
நீங்கள் முதலில் அக்குளை கழுவுபவராக இருந்தால், நீங்கள் சமூக வட்டாரங்களில் அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் மிகவும் பிரபலமாக இருப்பீர்கள். உங்கள் நண்பர்களுக்கு நல்ல மற்றும் கெட்ட காலங்களில் ஆதரவாக இருப்பீர்கள். மென்மையான இதயம் கொண்டவராக மற்றவர்களால் புகழப்படுவீர்கள். ஒருவரை நேசித்தால் முழுமையாக நேசிப்பீர்கள் அல்லது வெறுத்தால் முழுமையாக வெறுப்பீர்கள்.

கழுத்து/தோள்பட்டை
நீங்கள் அதிகம் சாதித்தவரா? அப்படியானால், நீங்கள் குளிக்கும் போது முதலில் தோள்பட்டை மற்றும் கழுத்தை கழுவுபவராக இருக்கலாம். உங்களுடைய நோக்கம் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கும். கடின உழைப்பில் நம்பிக்கைக் கொண்டவராக இருப்பீர்கள். மிகவும் போட்டித்தன்மை கொண்டவராக இருப்பீர்கள் மற்றும் அனைவரையும் விட ஒருபடி மேலே இருக்க விரும்புவீர்கள்.

மார்பு
நீங்கள் குளிக்கும் போது மார்பு பகுதியை முதலில் கழுவுபவராக இருந்தால், நீங்கள் உங்களை அதிகம் விரும்புபவராக இருப்பீர்கள். மேலும் நீங்கள் சுயாதீனமானவர் மற்றும் வாழ்வில் எதையும் மிகவும் தெளிவாக அணுகக்கூடியவர்.

அந்தரங்க பகுதி
நீங்கள் முதலில் அந்தரங்க பகுதியை கழுவுபவராக இருந்தால், நிஜ வாழ்க்கையில் நீங்கள் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராக இருப்பீர்கள் மற்றும் யாருடனும் அவ்வளவு எளிதில் பேசமாட்டீர்கள். உண்மையில் நீங்கள் மற்றவர்கள் மீது அதிக அக்கறைக் கொண்டிருப்பீர்கள். ஆனால் அதை மற்றவர்களிடம் வெளிப்படுத்த நீண்ட காலம் எடுக்கும்.

கால்கள்
நீங்கள் குளிக்கும் போது முதலில் கால்களை கழுவுபவராக இருந்தால், நீங்கள் மிகவும் அடக்கமானவர். மேலும் மிகவும் தாழ்மையானவர் மற்றும் கண்ணியமானவர் என்று மற்றவர்கள் நினைக்கும் வகையில் இருப்பீர்கள். அதோடு நீங்கள் உங்களின் கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தக்கூடியவர்.

முதுகு
உங்களின் முதுகு உங்களின் மனதை பிரதிபலிக்கிறது. நீங்கள் குளிக்கும் போது முதலில் நீரை முதுகு பகுதியில் ஊற்றினால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்கக்கூடியவர். யாரையும் கண்மூடித்தனமாக நம்பமாட்டீர்கள். அதோடு நீங்கள் மற்றவர்களுடன் அவ்வளவு எளிதில் பழகமாட்டீர்கள்.

கைகள்
நீங்கள் முதலில் கைகளை கழுவுபவரானால், இது உங்களின் மன வலிமையைக் குறிக்கிறது. முடிவைப் பற்றி கவலைப்படாமல், நீங்கள் நினைப்பது தான் சரி என்று நினைப்பீர்கள். நீங்கள் ராஜதந்திரமானவர் அல்ல. நீங்கள் நாம் என்ன செய்கிறோமோ அதற்கேற்ற பலன் தான் கிட்டும் என்று நம்புபவர்.

தலைமுடி
நீங்கள் குளிக்கும் போது முதலில் தலைக்கு நீரை ஊற்றி குளிப்பவரானால், நீங்கள் ஒருவித அதீத மனக்கோளாறு உள்ளவராக இருப்பீர்கள் மற்றும் வாழ்வில் ஒழுங்கை விரும்பும் ஒருவராக இருப்பீர்கள். அதோடு நீங்கள் ஒரு கருத்துள்ள நபர், எல்லாவற்றை பற்றியும் கருத்துக்களைக் கூறுவீர்கள். உங்களின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று நேர மேலாண்மை.