Latest Updates
-
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
கும்பத்தில் சூரிய-சுக்கிர சேர்க்கை: பிப்ரவரி 13 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரப்போகுது..
சூரிய சுக்கிர சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் இச்சேர்க்கையால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
நவகிரகங்களில் ஆடம்பம், அழகு, நல்ல வாழ்க்கைத் துணை, வீடு, மகிழ்ச்சியான வாழ்க்கை என அனைத்தையும் தருபவர் தான் சுக்கிரன். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், அது வாழ்க்கை அனைத்துவிதமான சுகங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார். அதேப் போல் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தலைமைப்பண்புகள், புகழ், மரியாதை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார்.

கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில சமயங்களில் கிரக சேர்க்கைகள் நிகழும். அந்த வகையில் ஜனவரி 22 ஆம் தேதி முதல் சுக்கிரன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு செல்கிறார். இதனால் கும்ப ராசியில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சூரிய சுக்கிர சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் இச்சேர்க்கையால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது கும்பத்தில் நிகழும் சூரிய சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாக கருதப்படுகிறது. இதனால் இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, இந்த காலமானது மிகவும் சாதகமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளன.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதன் காரணமாக இந்த காலத்தில் வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் இந்த காலகட்டத்தில் தங்களின் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். முக்கியமாக பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த சேர்க்கை காலமானது மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் தடைபட்ட வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். சமூகத்தில் நற்பெயரைப் பெறுவீர்கள். உங்களின் மரியாதை இந்த காலகட்டத்தில் அதிகரிக்கும். வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணத்தால் நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications